செவ்வாய், 13 ஜனவரி, 2015

காதல் ஒரு மூச்சு ...

காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!

எனக்கு
இறப்பே இல்லை
காதலில்  உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!

அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;765

கே இனியவன் கஸல்

சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!

என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ

என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!

 +
கே இனியவன் கஸல்
கவிதை ;764

குற்றுகிறது...!!!

குற்றுகிறது...!!!

போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?

காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!

எங்கே கற்றாய் ....

எங்கே கற்றாய் ....

நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!

எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!

காலத்தால் அழியாது ...!!!

காலத்தால் அழியாது ...!!!

அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!

நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம் 
கவிதை காலத்தால் அழியாது ...!!!

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...