ஆன்மீக கவிதை
 அரியும் சிவனும் சேர்ந்து....  "அரிசி" ஆனாய் .......  உடலும் உயிரும் சேர்ந்து......  கோயிலானாய்.........  உணர்வும் செயலும் சேர்ந்து.....  இறைவனானவனே.......  என்னுள் இருப்பவனே.......  எனக்குன்னை காட்டிவிடு........!!!   என்னவனே.......  நீ ஒளிவடிவமானவனா.....?  நீ ஒலிவடிவானவனா.........?  நீ தீ வடிவானவனா.........?  நீ காற்று வடிவானவனா .....?  நீ திண்ம வடிவானவனா......?  நீ திரவடிவமானவனா ....?   உன் வடிவம் என்னவென்று......  அறியாமல் என்னை பாடாய்.......  படுத்துபவனே..........  நீ என்னவாகவும் இருந்துவிடு......  என்னை எப்போதும் உன்னோடு.....  வைத்துகொண்டே இரு..........!!!   &  கவிப்புயல் இனியவன்  ஆன்மீக கவிதை