இடுகைகள்

அக்டோபர் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலின் பிறப்பிடம் ....

நான் காதலின் பிறப்பிடம் .... நீயோ மறைவிடம் ...!!! நீ வராவிட்டால் எனக்கென்ன -உன் நினைவோடு போவேன் வாழுவேன் காதலின் உச்சத்தை அடைவேன் ...!!! காதலால் அறிஞனாகியவனும் ... அசிங்கபட்டவனும் ... இருக்கிறார்கள் ....!!! + கே இனியவன் - கஸல் 94

என் உயிர் மூச்சு ...

என்  இதயத்தில் - உன்  எண்ணங்களால்.. கூடு காட்டுகிறேன் ...!!! நீ என் இதயத்தில் .. வந்து போவதுதான் .. என் உயிர் மூச்சு ... அதுதான் வந்து வந்து ... போகிறாயோ ...? நான்  பொறுப்பில்லாதவன் ... பொறுமையில்லாதவன் ... உன்னை கண்டபின் ... மற்றவர்களுக்கு .... வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 93

நட்பு வேண்டாம் ...!!!

கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!  சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!  தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!  ஆலயத்தில்  வந்த நட்பு அர்ச்சனைவரை...  குடியாலே  வந்த நட்பு வெறி முறியும் வரை...  கடையாலே  வந்த நட்பு கடன் வாங்கும் வரை..  பயணத்தால்  வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..  இணையத்தில்   வந்த நட்பு வைரஸால் புகும் வரை ... அறிவிப்பாளரோடு  வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....  ரெலிபோனால்  வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....  எதிர்பார்ப்பு எதுவுமே  இல்லாத நட்பு உயிர் போகும்வரை  ...!!! + கே இனியவன் நட்பு கவிதை

பொதுநலவாதி ஏமாற்றுக்காரன்

சுயநலவாதி வாழும் இடத்தில்  பொதுநலவாதி ஏமாற்றுக்காரன்  படியாதார் வாழும் இடத்தில்  படித்தவன் முட்டாள்  கதைப்பவர் வாழும் இடத்தில்  கதையாதவன் பித்தன்  வாசிக்காதார் வாழும் இடத்தில்  வாசிப்பவன் அலட்டல் காரன்  குழப்புபவர் வாழும் இடத்தில்  குழப்பாதவன் ஏமாளி  குழம்புபவன் வாழும் இடத்தில்  குழம்பாதவன் திமிர் பிடித்தவன்  இருப்பவன் வாழும் இடத்தில்  இல்லாதவன் ஓட்டாண்டி  கடன்பட்டான் வாழும் இடத்தில்  கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன்  குடித்தவன் வாழும் இடத்தில்  குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன்  அம்மனமாய் வாழும் இடத்தில்  கோவணத்தான் கோமாளி + கே இனியவன்  தத்துவ கவிதை

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ... நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை .....!!! என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ... என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன்  நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!! + கே இனியவன்  தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கையை தானமாக தருகிறேன் ...

உடலாக இருந்தேன்  உன் நினைவுகளால்  எழும்பாகி விட்டேன் ....!!! உன்  வாழ்க்கைக்காக...  என் வாழ்க்கையை ... தானமாக தருகிறேன் ... பிழைத்து கொள் ...!!! காதலுக்கு காதலி  தேவையில்லை  நினைவுகள் போதும்  என்கிறாய் -நான்  என்ன செய்ய ....??? + கே இனியவன் - கஸல் 92

மனிதர்கள் தெரிகிறார்கள் .....!!!

கண்ணாடியில் ... என்னைப் பார்க்கிறேன்  ... என்னை காணவில்லை ... என்னை மறந்ததும் .... கண்ணாடி தெரிகிறது ....!!! மனிதரில் என்னைப் பார்க்கிறேன் .... என் உணர்வுகள் தெரிகின்றன .... என்னை மறந்ததும்.... மனிதர்கள் தெரிகிறார்கள்  .....!!! + கே இனியவன் தத்துவ கவிதை