இடுகைகள்

டிசம்பர் 25, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் ஹைக்கூகள்

நாம்  பிரிந்து வாழ்கிறோம்  இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்  தண்டவாளம்  @@@ தீயில் எரிகிறேன்  சாம்பலகமாட்டேன்  மெழுகுதிரி  @@@ கண்ணீர் வருகிறது  கவிதை வருகிறது  வலி  @@@ பிணியில் பணி செய்தவர்  பிணியிலும் பணி செய்தவர்  அன்னை திரேசா  @@@ சிறகடித்து பறக்குறது  சிறு கருவியால் பிறக்கிறது  கற்பனை  + கே இனியவன் ஹைக்கூகள் எண்ண தொகுப்பு - 02

அகராதி தமிழ் காதல் கவிதை

ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ... ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே .... ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்.... ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ... ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!! ஈகம் போல் உடல் அழகு .... ஈசன் போல் முக அழகு .... ஈடுகொடுக்க முடியாமல் ... ஈசன் யான் துடிக்கிறேன் .... ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!! ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை .... ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ... ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் .... ஈங்கு போற்றும் உன்னத காதல் ... ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!! + ஈர்மை ; இனிமை ,பெருமை  ஈரந்தி ; காலை மாலை  ஈகம் ; சந்தனமரம்  ஈங்கு ; இவ்வுலகம்  ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை  + கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கே இனியவன்

அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை

இல்லறம் என்பது இன்பசுகம் .... இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் .... இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு .... இதயத்திலும் இல்லறத்திலும் ... இசைமகள் குடியிருப்பாள் .....!!! இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ... இடர்களை தோற்ற எண்ணாதீர் .... இஷ்ட தேவனை தினமும் நினை .... இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ... இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை .... இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் .... இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ... இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்... இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ... இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!! + இங்கிதம் - இன்பம்  இட்டறுதி ; வறுமை  இன்பன் ; கணவன்  இல்லக்கிழத்தி ;மனைவி  கவிதை ; அகராதி தமிழ்  வாழ்க்கை கவிதை  கவிஞர் ; கே இனியவன்