இடுகைகள்

ஏப்ரல் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போராட்ட பெண்ணியம்

போராட்ட பெண்ணியம் ___ அடங்கியிருந்தது போதும் பெண்ணே .... குட்ட குட்ட குனிவது குற்றம் ... எத்தனை நாள் தான் .... குனிவாய்....? உனக்கு இல்லாத உரிமையை .... கேட்கவில்லையே .... உன் உரிமையை பறிக்கும் .... மேலாதிக்கத்திடம் தானே .... போராடுகிறாய் ....!!! போராடு போராடு ... உரிமை கிடைக்கும்வரை ... போராடு ....!!! ^^^ போராட்ட பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன

மிதவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் --------- இந்த உலகம் ஒரு ... சக்தியால் இயங்குவதுபோல் .... ஒவ்வொருவனின் இயக்ககும் ... ஒரு பெண்ணினால் தான் .... இயங்குகிறது .....!!! பெண்மைக்கு யாரும் .... உரிமை கொடுக்கத்தேவையில்லை.... யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ... அவர்களுக்கு எல்லா உரிமையும் ... இருக்கிறது என்பதை ஏற்றால் .... பெண்ணியம் வாழ்ந்துகொண்டே .... இருக்கும் .....!!! ^^^ மிதவாதப் பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன 

ஏங்குகிறேன் ...!!!

உன்னோடு .... வாழவேண்டும் என்றுதான் .... காதல் செய்தேன் .... உன் மௌனம் என்னை .... கொல்கிறது....!!! உன்னோடு வாழவேண்டும் ... என்பதெல்லாம் கலைந்து.... உன்னோடு பேசினால் .. போதும் என்று ஏங்குகிறேன் ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

செத்து துடிக்கிறது இதயம் ....!!!

நிஜமான வாழ்க்கை.... கிடைக்கவில்லை .... கற்பனையில் என்றாலும் .... வாழவிடு ....!!! வாழ்ந்தால் உன்னோடுதான் ... வாழ்வேன் அடம்பிடிகிறது ... மனசு .......!!! மடிந்தால் .... உன் நினைவோடு மடிவேன் .... செத்து துடிக்கிறது .... இதயம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஆறுதல் சொல்லிவிட்டு போவாயா ....?

நீ என்னை விட்டு பிரிந்து ... பலகாலங்கள் ஆகிவிட்டது ... பலமுறை என் இதயத்துக்கு ... சொல்லிவிட்டேன் .... நம்பமாட்டேன் என்கிறது ... என் இதயம் .....!!! ஒருமுறை ... நீ என் இதயத்தில் இருந்த .... இடத்துக்கு வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு போவாயா ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வரிகளுக்கு வலியாகிவிடும்...!!!

நீ தரும் வலிகளை... உன் முகத்துக்கு ... சொல்ல முடியவில்லை .... முடிந்தால் என் வரிகளை .... பார் வலிகள் தெரியும் ...!!! என்.... வரிகளை .... வெறும் வரிகளாக .... பார்க்காதே அந்த ... வரிகளுக்கு ...... வலியாகிவிடும்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எனக்கு சுகமாக இருக்கிறது .

இரவே ... விரைவாக வந்துவிடு ... உன்னில் இருந்து .... அழுவதே எனக்கு .... சுகமாக இருக்கிறது ....!!! மழையே ... விரைவாக பொழிந்துவிடு .... உன்னோடு சேர்ந்து .... அழுவதே எனக்கு ..... பாதுகாப்பாக இருக்கிறது ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்