இடுகைகள்

மார்ச் 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளும் ஒரு நாள் மலரும்

மலர்போல் வந்து .... முள்ளாய் போன  காதலும் உண்டு....!!! முள்போல் வந்து .... மலராய் மலர்ந்த ... காதலும் உண்டு....!!! காதலை காதலால் ... காதல் செய்தால் ... முள்ளும் ஒருநாள் ... மலராகும் ....!!! ^ முள்ளும் ஒரு நாள் மலரும்  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

சிலுவை சுமக்கும் மனிதன்

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........சிலுவை சுமக்கும் மனிதன்....... ^^^^^^^^^^^^^^^^^ மனிதனின் எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... எல்லா விளைவுகளும் ஆணியாக.... அறையப்படுகின்றன....!!! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! கல்வி, பதவி, என்னும் .... சிலுவையை சுமக்கிறான் ..... அதிகாரம் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! உழைப்பு, வருமானம் எனும் ... சிலுவையாய் சுமக்கிறான் .... விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! போட்டி வெற்றி என்னும் .... சிலுவையாய் சுமக்கிறான் .... பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! அத்தனை சுமைகளையும் .... சுமக்கும் மனிதனுக்கு .... விடுதலை ஒன்றே விடுதலை .... ஓடும் புளியம்பழம் போல் .... வாழ்வதே விடுதலை .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

தப்புக்கணக்கு

தப்புக்கணக்கு  ----- தூரத்தில் இருப்பதிலும் .... மறை பொருளாய் இருப்பதிலும் .... எப்பவுமே மனித மனத்துக்கு ..... ஒரு இச்சையுண்டு....!!! எனக்கு அது விதிவிலக்கல்ல .... நிலாமீது ஒரு காதல் .... விண்மீன்கள் மீது மோகம் .... இரண்டையும் ரசிப்பதற்கு .... கனவு விமானத்தில் ... விண் மண்டலம் சென்றேன் .....!!! நிலவருகே சென்றேன் .... வா என்று அழைகவில்லை ..... அவள் மென்மை அழகில் .... மயங்கினேன் என்னை .... மறந்து கவிதை எழுதினேன் .....!!! மெல்ல சொன்னது நிலா .... அதிகம் என்னில் காதல் .... கொள்ளாதே - எனக்கும் ... இருட்டு உண்டு என்னுள் ... இருளும் உண்டு .......!!! நிலா அருகில் துடித்து .... நடித்துகொண்டிருந்த .... விண் மீன்கள் கண்களை ... சிமிட்டி சிமிட்டி என்னை .... அழைத்துக்கொண்டிருந்தன ..... அருகில் சென்றேன் ..... தள்ளி போய்விடு என்று ... கத்தியது .....!!! திகைத்து நின்றேன் .... நீதானே என்னை கண்ணால்... சிமிட்டி சிமிட்டி வா வா ... என்றாய் இப்போ திட்டுகிறாயே ....? போடா மூடனே .... என் குணவியல்பு அதுவே .... நீ தப்பாக நினைத்தது -என்  தப்பில்லையே ...??? மனித மனம் இப்படித்தான் ... அருகில் உள்ள அழகை ரசிக்காது ...

காரணம் சொல்வேன்

உன்னையேன்.... எனக்கு பிடிகிறது ... என்பதற்கு ஆயிரம் ... காரணம் சொல்வேன் ...!!! உன்  ஒவ்வொரு செயலும் .... எனக்கும் பிடிக்கும் ... நேற்று ஒருகாரணம் ... இன்று ஒருகாரணம் ... சொல்கிறாயே என்கிறாய் ....!!! நீயும் அப்படிதானே .... நேற்று ஒரு செயல் .... இன்று ஒரு செயல் .... செய்துகொண்டிருகிறாய்....!!! ^ என் காதல் பைங்கிளியே -05 காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

உன் மீது நான் வைத்த காதல்

நீ ... எத்தனை...  முறை திட்டுகிறாயோ...? அதன் இருமடங்கு உன்னை ... நான் திட்டுவேன் .... நிச்சயம்  உனக்கு கோபம் வரும் .... அதுதான் எனக்கு தேவை ....!!! கோபம் தணிந்தபின் .... நிச்சயம் என்னை நினைப்பாய் .... அப்போது புரியும் .... உன் மீது நான் வைத்த காதல் ,,,,!!! ^ என் காதல் பைங்கிளியே -04 காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

இனியவா என அழைதுப்பார்

ஒருமுறை என்னை .... இனியவா என அழைதுப்பார் .... உன் இதயத்தில் ஆயிரம் .... பூக்கள் பூக்கும் அழகை பார் ....!!! என்னை நீ  அழைக்கும் நாள் வெகு .... தூரத்திலில்லை .... அன்று நான் இறந்து ... பிறப்பேன் உனக்காக ...!!! ^ என் காதல் பைங்கிளியே  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

என்னை காதலித்துப்பார்

நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

என் காதல் பைங்கிளியே

நீ  எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க....  எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என்  காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்