இடுகைகள்

ஆகஸ்ட் 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாளிதழை திறந்து பார்த்தால்.....

மாட்டு.... வண்டியில் போன சுகம்.... மாருதியில் இல்லையடா ....!!! பாட்டி .... சொன்ன நம் ஊரைப்போல்..... பட்டணம் இல்லையடா ....!!! நாட்டு ..... நடப்பு எல்லாவற்றையும்... நாழிகையில் சொல்லும் தாத்தா... நாளிதழை திறந்து பார்த்தால்..... நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!! தெருவோர தாக சாந்தி.... தேர் திருவிழாவை.... சிறப்படையும் வைக்கும்.... இப்போ -தெருவுக்கு தெரு.... கோயில் வந்ததால்..... தெருவோரத்தை காணோமடா ...!!! சமுதாய முன்னேற்றம்..... ஒரு சாண் ஏறினால்... சமூக சீரழிவு முழம் கணக்கில்..... ஏறுதடா .......!!! ^ சமூக புலம்பல் கவிப்புயல் இனியவன்

கவிதை கற்பனை தரும்....!!!

காதல் இனிமைதரும்... இனிமை நினைவு தரும்....!!! காதல் பிரிவு வலிதரும்.... வலிகள் வரிகள் தரும்......!!! வரிகள் கவிதை தரும்.... கவிதை கற்பனை தரும்....!!! கற்பனை புதுமைதரும்..... புதுமை இளமைதரும் ...!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

மனிதனின் எண்ணங்களின்

உடல் முழுதும் நீரை..... வைத்திருக்கும் - இளநீர்.... இனிக்கிறது ....!!! உடல் முழுதும் நீரை ..... வைத்திருக்கும் - மனிதன்.... கண்ணீர் உவர்க்கிறது ....!!! மனிதனின் எண்ணங்களின் .... வண்ணங்கள் ..... காரணமாய் இருக்குமோ ....? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்