இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அது என் மூச்சு ....!!!

என் இதயத்தை ... எங்கு என்றாலும் வீசி விடு ... என் கவிதையை வீசி விடாதே ...!!! கவிதை எனக்கு பேச்சு அல்ல அது என் மூச்சு ....!!! காதல் கண்ணில் ஆரம்பிக்கும்.... அது மாயையாய் மாறலாம் ... கவிதை உணர்வால் வரும் ... என்றும் என்னோடு இணைந்து ... கொண்டே இருக்கும் ...!!! 

உதட்டால் வலிகளை

காதலில் உதட்டால் இன்பம்  தந்து ... இதயத்தில் வலிதருவதே ... வழமை ....!!! நீ ஏனடி ... இதயத்தில் இன்பம் தந்து உதட்டால் வலிகளை தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

கதிர் வீச்சு கண்ணாடி நீ ...!!!

என் காதலை என்னிடம் .... ஒப்படைத்த போதுதான் ... புரிந்தது உனக்கு .... காதலிக்க தெரியாது ......!!! எல்லோருக்கும் கண்ணீர் ... கவலையை தரும் ... எனக்கு கவிதை தருகிறது ....!!! என்னையே உன்னில் பார்க்கும்..... கதிர் வீச்சு கண்ணாடி நீ ...!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் .... உன்னை தொடர்கிறேன் ... நீ ஓடாத மணிக்கூடு ... உணர்ந்து கொண்டேன்...!!! என் இதயம் நீர் குமுழி ... விரும்பிய நேரத்தில் ... ஊதி உடைத்து விளையாடு ....!!! நானும் ஏழைதான் ... உன் முன்னால் காதல் .. பிச்சை பாத்திரம் ஏந்தி ... பலகாலம் நிற்கிறேன் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 739

தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு 300 மேற்பட்ட  இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி! -------------------------------------------------------- + என் இனமே எமக்கு ... எங்கு போனாலும் மரணம் ...!!! இயற்கை அன்னைக்கும் ... தமிழனின் உடலங்கள் ... நன்றாக பிடித்திருக்குதோ .....? மலையகத்தின் முதுகெழும்பு ... தேயிலை -அது என் இனம் ... முதுகை கூனி கூனி ...... உழைக்கும் வியர்வைக்கு ... கிடைக்கும் வருமானம் ....!!! தேயிலையின் திரவம் சிகப்பு ... என் இனம் வியர்வையை .... இரத்தமாய் உழைத்த உழைப்பு ...! உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை .. இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ... தேயிலையின் நிறம் உண்டு ...!!! இதுவரையும் வியர்வையை .... கொடுத்த என் இனம் இப்போ ... தன் உயிரையும் உடலையும் .... உரமாய் கொடுத்துவிட்டதே  ...? தமிழ் இனம் எப்போதும் .... இறப்பதில்லை - அவர்கள் .. ஏதோ ஒரு வடிவில் ..... விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!

தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு 300 மேற்பட்ட  இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி! -------------------------------------------------------- + என் இனமே எமக்கு ... எங்கு போனாலும் மரணம் ...!!! இயற்கை அன்னைக்கும் ... தமிழனின் உடலங்கள் ... நன்றாக பிடித்திருக்குதோ .....? மலையகத்தின் முதுகெழும்பு ... தேயிலை -அது என் இனம் ... முதுகை கூனி கூனி ...... உழைக்கும் வியர்வைக்கு ... கிடைக்கும் வருமானம் ....!!! தேயிலையின் திரவம் சிகப்பு ... என் இனம் வியர்வையை .... இரத்தமாய் உழைத்த உழைப்பு ...! உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை .. இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ... தேயிலையின் நிறம் உண்டு ...!!! இதுவரையும் வியர்வையை .... கொடுத்த என் இனம் இப்போ ... தன் உயிரையும் உடலையும் .... உரமாய் கொடுத்துவிட்டதே  ...? தமிழ் இனம் எப்போதும் .... இறப்பதில்லை - அவர்கள் .. ஏதோ ஒரு வடிவில் ..... விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!    

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே இளமையில் உன் அழகில் மயங்கி ....  அருமையான வாழ்வை இழந்தேன் .....  திறமைகள் பல பல இருந்தும் ...  வெறுமையாய் ஆகிவிட்டேன் ....!!!  இனிமையான காதல் வாழ்வை ...  மகிமையில்லாமல் ஆக்கி விட்டாய் ....  பொறுமையோடு ஜோசித்திருந்தால் ....  பசுமையாய் வாழ்ந்திருக்கலாம் ....!!!  +  அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!  கே இனியவன் கவிதைகள்

நீ என்ன இதயமா ..?

நீ என்ன இதயமா ..? மூளையா ...? இதயம் என்றால் .. மறக்க மாட்டாய் ....!!! உன் வலிகளுக்கு பயந்து ... மறதியின் இடத்தில் வாழ்கிறேன் ....!!! காதல் தனித்துவமானது ... அதில் நீயோ மகத்தவம் ... உடனுக்குடன் வலி .. தருகிறாய் ...!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 738

காதலால் வந்த வலிகள் ..

என் ஒவ்வொரு வரியும் ... காதலால் வந்த வலிகள் .. உன் கையில் இருக்கிறது ... இன்பம் ....!!! காதல் ஒரு பிரபஞ்சம் எல்லையில்லை ... எப்படி உன்னை நான் .. புரிவது ...? காதலுக்கு பின்னால் இத்தனை ஆபத்தா ...? வா  நீந்துவோம் ... ஆபத்து கடலில் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 737

காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ... தந்தேன் -நீ காதல் .. ரோஜா முள்ளை வைத்திருக்கிறாய் ....!!! உன் காதல் சிலந்தி .. வலையில் சிக்கிய பூச்சி .. நான் உன்னால் இறக்கவும் .. முடிவு செய்துவிட்டேன் ...!!! மயானத்தின் அருகே ... இருக்கிறேன் -நீ சொல்லும் பதிலுக்காக ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 736

எனது சொந்த தளங்கள்

எனது சொந்த தளங்கள் www. kavithaithalam.com http://iniyavankavithai.blogspot.com http://iniyavan2013.blogspot.com http://kasalkavithai.blogspot.com http://thirukkuralkavithaikal.blogspot.com https://www.facebook.com/KavinarKeIniyavan https://www.facebook.com/pages என் கவிதை உள்ள தளங்கள் http://eluthu.com http://www.chenaitamilulaa.net http://www.thagaval.net http://www.tamilthottam.in http://www.thamilworld.com http://tamilnanbargal.com http://www.puthiyatamil.net https://natpuvalayam.com http://lankasripoems.com http://tamilhindu.forumta.net http://www.tamilhindu.net http://vaarppu.com

காற்றை நேசிக்கிறேன் ...

காற்றை நேசிக்கிறேன் ... நீ மூச்சாய் வருவாய் ... என்பதற்காக ....!!! கடலை நேசிக்கிறேன் .... நீ கண்ணீராய் வருவாய் ... என்பதற்காக .....!!! என்னை நான் மறக்கிறேன் .. நீ என்னை விரும்புவாய் .. என்பதற்காக .....!!! + இதயம் தொடும் கவிதை கே இனியவன்

நீயும் .. நியமாவாய் ....!!!

என்னில் நியமாக இருந்த .. காதலை உன்னிடம் தந்து .. விட்டேன் - நீ இன்னும் .. தரவில்லை ....!!! நானும் ஒருவகை ஏமாளிதான் ... நிஜத்தை உன்னிடம் தந்து .. நிழலில் வாழுகிறேன் ... காத்திருக்கிறேன்  நீயும் .. நியமாவாய் ....!!! + இதயம் தொடும் கவிதை கே இனியவன்

இதயம் தொடும் கவிதை

இல்லை உன் காதலை .. நான் ஏற்க மாட்டேன் ... நீ இன்னும் மனத்தால் .. காதலிக்க வில்லை ....!!! உனக்காக காத்திருப்பேன் ... உனக்காகவே வாழுவேன் ... உனக்காகவே இறப்பேன்.... உதட்டால் காதலிக்காதே ... உயிரால் காதல் செய் உயிரே ....!!! + இதயம் தொடும் கவிதை கே இனியவன் 

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!! ஒரு நொடிகூட பிரியவில்லை ... சிறு தூரம் கூட அவர்... செல்ல வில்லை .....!!! எப்படி என் உடலில் ... காதல் நோய் அதற்குள் .. தொற்றியது ....? அவர் பிரிந்து செல்லும் .. நொடியில் காதல் பசலை நிறமும் என்னில் படர்கிறதே என்ன மாயம் இது ...? திருக்குறள் : 1185 + பசப்புறுபருவரல் + உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 105

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!! நான் நினைப்பதும் அவரை ... எந்தநேரமும் பேசுவதும் .. அவரை பற்றியே .... அவரின் நேர்மையும் .. திறமையுமே கூறுகிறேன் ...!!! எப்படி...? என் உடலில் என்னை அறியாமல் உண்ணராமல்... பசலை நிறம் வந்தது ..? இது ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!! திருக்குறள் : 1184 + பசப்புறுபருவரல் + உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 104

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

காதல் ஒருவகை பரிமாற்றம் ... என்னவன் .. காதல் நோயையும் ..... உள்ளதுன்பத்தையும்... எனக்கு கைமாறாய் தந்து ....!!! என் அழகையும் ... காதல் வெட்கத்தையும் ... கொண்டு சென்று விட்டான் ... காதல் ஒருவகை பரிமாற்றம் ... தான் போல் இருக்கிறதே ...!!! திருக்குறள் : 1183 + பசப்புறுபருவரல் + சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 103

பிரிவு கொடுமையானதே ...

பிரிவு கொடுமையானதே ... என்னவனின் பிரிவு .. கொடுமையானதே ... அதனால் வந்த பசப்பும் ... கொடுமையானதே ....!!! என்னவன் .... தந்த பிரிவின் வலியை... என் உடல் முழுதும் படர்கிறது - நினைத்தால் சுமைகூட சுகம் தான் ...!!! திருக்குறள் : 1182 + பசப்புறுபருவரல் + அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 102

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

யாரிடம் சொல்லி கதறுவேன் ...? என்னவனே .... நீ என்னை விட்டு பிரிய .. விடைகொடுத்தது நானே ... அன்று தெரியவில்லை .. இதனை துன்பத்தை ....!!! இப்போ நான் படும் ... துன்பத்தை -என் உடல் ... படும் வேதனையை யாரிடம் ... யாரிடம் சொல்லி கதறுவேன் ...? திருக்குறள் : 1181 + பசப்புறுபருவரல் + நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்  பண்பியார்க்கு உரைக்கோ பிற. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 101

மன்னிப்பு கேட்கிறாய் ...!!!

கூட்டத்தோடு போகின்றாய்   ... என்னை திரும்பி பார்க்காமல் .. போகின்றாய்....!!! அருகில் உன் உறவினர் ... துடித்து கொண்டு  போகின்றாய்... நான் கோபத்தில் இருப்பேனோ ... என்று தனியே வந்து மன்னிப்பு .. கேட்கிறாய் ...!!! நான் சிரித்துக்கொண்டே உன்னை  பார்க்கிறேன்...!!! காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

வீட்டார் எல்லோரும் சுற்றுலா  செல்கிறார்கள் - உனக்கும் ... அது நன்றாக பிடிக்கும் ...!!! வேண்டுமென்றே  பிடிக்காததுபோல் - நான் ... வரவில்லை என்று மறுக்கிறாய் ... படிக்க வேண்டும் என்று நடிக்கிறாய் ... என்னை விட்டு ஒரு நொடி  இருக்க மாட்டாய் .... !!! காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல்

மற்றவர்களுக்கு கற்கண்டை ... கொடுத்து விட்டு -எனக்கு  வேண்டுமென்றே உப்பை ... தந்தாய்......!!! நான் துப்பவில்லை .... வியந்து நின்றாய் ..... நான் சிரித்து நின்றேன் ... நீ எதை தந்தாலும் இனிக்கும் ... காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

உன்னை நேசிப்பதற்காக ....

உன்னை நேசித்த நொடியில் .... இருந்து ஒன்றையே இன்றும்  ஜோசிக்கிறேன் ....!!! உன்னை நேசிப்பதற்காக .... என்னை நான் நேசிக்காமல் .. விட்டதேன் ...? + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

எல்லாம் காதல் தான் ...!!!

என்  ஜனனம் தாயின் ... மடியில் ..... என்  மரணம் உன் ... மடியில் .... பிறப்பும் பெண்ணால் .... இறப்பும் பெண்ணால்... எல்லாம் காதல் தான் ...!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

நீயே வேதனை படுவாய் ....!!!

நீ என்னை தூக்கி எறிந்து .... விட்டாய்- உனக்கு ... நான் குப்பையானேன் ...!!! என் காதல் குப்பையில் ... தோன்றிய குண்டுமணி ... நிச்சயம் நீ உணர்வாய் ... நீயே வேதனை படுவாய் ....!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

கண் ஏறி படக்கூடாது ..

கல் எறி பட்டாலும் ... கண் ஏறி படக்கூடாது .. சும்மா சொல்லவில்லை ... உன் பார்வையில் புரிந்து ... கொண்டேன் - அதன்  உண்மையை .....!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்

பிரிவுக்கு பின் .... பிரியமானவர்கள் சந்திப்பது ... பிண அறையில் இருக்கும் ... சடலங்கள் போல் ....!!! பேசவும் முடியாது ... பார்க்கவும் முடியாது ....!!! + கே இனியவனின்  சின்ன கிறுக்கல்

கொடியது அவளின் சிரிப்பு ...!!!

அவள் சிரிப்பாள் தானே ... நான் சின்னாபின்னமாகினேன் ... அவள் வாய்க்குள் ஒரு சின்ன .. சிரிப்பை சித்தாள் ....!!! நான் இப்போ சிரிப்பையே .. தொலைத்து விட்டேன் ... கொடிய விஷத்தை விட .. கொடியது அவளின் சிரிப்பு ...!!!

சிரித்ததால் தான் ...

சிரிப்பு ஒருவனை சிந்திக்கவும் ... சீற்றமடையவும் வைக்கும் ... இடம் பார்த்து சிரி... அறிவோடு சிரி ....!!! கூனியை பார்த்து ராமன் சிரித்ததால் தான் ... இராமாயணத்தில் துன்பத்தை .. அனுபவித்தார் ராமன் ....!!!

சிரிப்பு

சிரிப்பு மனித இனத்துக்கு .. இறைவன் கொடுத்த அற்புத ... அமிர்தம் ....!!! தூய்மையான உள்ளத்தில் .. தோன்றும் உன்னத உணர்வு ... சிரித்தால் சந்தோசம் மட்டுமல்ல ... சிந்தனை ஆற்றலும் பெருகும் ... ஒரு முறை சிரிக்க ... பலமுறை சிந்தி .....!!!

இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!

பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ... மறந்தேன் நான் இருந்த இடத்தை ... பறந்தேன் மனசிறகுடன் வானில் ... இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!! அலைந்தேன் உன் பதிலுக்காய் ... தொலைத்தேன் என் வாழ்க்கையை .... புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ... எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!

சித்திரை மாத சின்னவளே ...!!!

நித்திரையை தொலைக்க செய்த .... சித்திரை மாத சின்னவளே ... பத்தரை மாத தங்கம் என்றாய் ... பத்தரை மணிக்குமேல் .... சித்திரைவதை செய்யத்தானோ ...? முத்திரை பதிப்பேன் காதலில் ... முகத்திரை மனதில் இருப்பதால் ... நித்திரை தொலைந்தால் என்ன ...? சித்திரை மாதம்  வரை ... பத்திரமாய் இருந்துவிடுமனதில் ... சித்திரை மாத சின்னவளே ...!!!

சொல்லி விட்டேன் ....!!!

மறந்து போன  விடயம்  ஒன்றை ஞாபக படுத்தி  சொல் என்றான் நண்பன் ....!!! ஒரு நொடியில் நீ  பிரிந்து போன தினத்தை .. மறந்து  போய் சொல்லி விட்டேன் ....!!! + + கலப்பு காதல் கவிதை கே இனியவன்

இளமையாய் இருக்கிறது ...!!!

வருடங்கள் போகின்றன .. வயதும் போகிறது... இளமை பறக்கிறது ....!!! நீ தந்த காதலும் ... சுகங்களும் என்றும் .. மார்க்கண்டேயர் போல் ... இளமையாய் இருக்கிறது ...!!! + + கலப்பு காதல் கவிதை கே இனியவன்

நீ பிரிந்து .. சென்றாயோ ..?

பிறக்கும் போது வலியை தாய் ஏற்றார் .... இறக்கும் போது வலியை  சுற்றத்தார் ஏற்பர் ....!!! வாழும் போது வலியை  நான் ஏற்க வேண்டும்.. அதுதான் நீ பிரிந்து .. சென்றாயோ ..? + + கலப்பு காதல் கவிதை  கே இனியவன்

காதலை இதயத்தோடு ...

எப்போதும் பத்திரமாக  இதயத்தில்  இருக்கத்தான் ..  காதலை இதயத்தோடு ... ஒப்பிடுகிறோம் ....!!! இதயம் நின்றால் உயிர்  போவதுபோல் ... காதல் இறந்தாலும் ... உயிரற்ற உடல்தான் ... வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!! + + கலப்பு கவிதை கே இனியவன்

வாழ்வே நீதான் உயிரே ...!!!

நீ கிடைக்க மாட்டாய் ... நீ  காதலிக்க மாட்டாய் ..... புரிந்து விட்டது உன் செயல் ...!!! உன் துன்பநினைவுகளும் ... என் இன்ப நிகழ்வுகளும் ... என் வாழ்நாள் பதிவுகள் ... வாழ்வேன் மூச்சு உள்ள வரை ... என் வாழ்வே நீதான் உயிரே ...!!! + + கலப்பு கவிதை கே இனியவன்

நீ பேசிய வார்த்தைகள் ....

அன்பே ..  நீ பேசிய வார்த்தைகள் .... நீ செய்யும் செயல்கள் ... இடி மின்னல் போன்றதோ ...? எனை அறியாமலே ... இதயம் அதிர்கிறது ... கண்கள் பெருக்காய்  வடிகிறது ......!!! + + கலப்பு கவிதை  கே இனியவன்

நான் காதலிப்பேன் ...!!!

நான் நிஜமாக காதலித்தேன் நீ நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!! நிஜமாக காதலித்த என்னை ஏனடி நிராகரித்தாய் ...? உனக்கு மாயை காதல் பிடிக்குமோ ....? உன்னை காதலித்ததால் என் நிம்மதி  தொலைந்து விட்டது - என்றாலும் என் காதல் தொலையவில்லை அதுவரை நான் காதலிப்பேன் ...!!! + + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

தப்பாக புரிந்து விட்டேன் ....!!!

நீ உதட்டால் பேசிய வார்த்தையை நான் காதல் என்று தப்பாக புரிந்து விட்டேன் ....!!! உதடும் இதயமும் காதலிப்பது ,,,,, தண்ணீரும்  எண்ணையும்... காதலிப்பது போல் ....!!! உன் வீட்டோரம் நான் நடந்த பாதைக்கு என் பெயரை கூட வைக்கலாம் பாதைக்கு தெரியும் என் வலி ....!!! + + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

உன் வலிக்கும் தான் ...!!!

என்னைபோல் நீயும் .... காதலித்துப்பார் .... உனக்கும் வலிதெரியும் ... காதல் என்றால் வலி .. வேண்டும் -அதுவும் உன்னால் தரமுடியும் ... காத்திருக்கிறேன் .. காதலுக்கு மட்டுமல்ல .... உன் வலிக்கும் தான் ...!!!

என்றும் காத்திருப்பேன் ....!!!

உனக்காக வடிக்கும் .. கண்ணீர் வலியானது... ஆனால் அழகானது .... அழகான நினைவுககளை .. நினைத்தல்லவா கண்ணீர் வடிக்கிறேன் ....!!! மீண்டும் நீ கிடைப்பாய் .. உனக்காக என்றும் ... காத்திருப்பேன் ....!!!

உனக்காக காத்திருப்பேன்

தள்ளி தள்ளி விடுகிறாய் .... தளராமல் மீண்டும் வருகிறேன் .... என்னை  வெறுக்கிறாயே ... தவிர என் காதலை வெறுக்க .. உன்னால் முடியவில்லை ... காலம் எல்லாம் காத்திருப்பேன் உனக்காக அல்ல உனக்காக ... மட்டும் ....மட்டுமே ....!!!

உனக்கு புரியவைப்பேன்

என்னவனே ...!!! உனக்கு நான் காதல் ... எனக்கு நீ காற்று ... பிரிந்த பின்னும் உன்னையே .. நினைக்கிறேன் - மன்னிக்கவும் சுவாசிக்கிறேன் .....!!! மூச்சை அடக்கி சில நிமிடங்கள் இருந்திருக்கிறேன் ... உன் நினைவுகள் இன்றி ... ஒரு நொடி கூட இருக்க.. இதயத்தால் முடியவில்லை ....!!! ஏன் பிரிந்தாய் என்னவனே ...? புரியவை இல்லையேல் .. உனக்கு புரியவைப்பேன்   ... நிலையான வலியை....!!!

காதல் மன முறிவு

அவள் தனக்காக .. காதலிக்க வில்லை ... எனக்காகவும் காதலித்தாள்...!!! கல்லூரிக்கு தனக்காக உணவு கொண்டுவருவதில்லை ... எனக்காகவும் கொண்டு வருவாள் ....!!! அழகான பொருளை கண்டால் தனக்கு மட்டும் .. வாங்குவதில்லை எனக்கும் ... வாங்குவாள் .....!!! எல்லாமே எனக்காக ... செய்தவள் காதல் மனமுறிவை... தனக்காக மட்டுமே செய்து ... சென்றுவிட்டாள்....!!! என்னவளே ... நீ செய்யாத ஒன்றை நான் ... உனக்காக செய்கிறேன் ... உன் வலியையும் சேர்த்து ... நானே சுமக்கிறேன் .....!!!

குழந்தைகள் கவிதைகள்

ஆயிரம் துயரங்களுடன் ... வீடு வரும் போது .... அத்தனையும் காற்றோடு பறந்துவிடும் அன்பு குழந்தையின் சிரிப்பால் ... அது சிரிப்பல்ல .... இறைவனின் வரம் ....!!! $$$$$ இல்லத்தில் ஆயிரம் ... பூக்கள் மலரலாம் ... உள்ளத்தால் மலரும் .. குழந்தையின் சிரிப்புக்கு ... குளிர்ந்திடும் இல்லத்தில் ... அன்பு என்னும் வாடாத பூ ....!!!

இன்பத்துப்பால் கவிதை எண் - 100

இன்பத்துப்பால்  கவிதை எண் - 100 என் இதயம் படும் வேதனையை ... அடிமேல் அடிவிழும் பறைபோல் துடி துடித்து .. என் கண்கள் ஆற்றாய் பெருக்கேடுகின்றன ....!!! நான் படும் வேதனையை .. மறைக்கவும் முடியவில்லை .. மறைத்தாலும் என் தோழிகள் '' நம்பபோவதுமில்லை ..... காதலின் வலி எல்லா .. பெண்களுக்கும் புரியும் ...!!! திருக்குறள் : 1180 + கண்விதுப்பழிதல் + மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 100

காதல் கண்களை தவிர ....!!!

காதல் கண்களை தவிர ....!!! என்னவன் வராததால் என் கண்கள் .. தூங்கவே  இல்லை ... வந்தபின் அவனையே .. பார்க்கப்போகும் கண்கள் .. தூங்க போவதுமில்லை ...!!! அவன் ...!!! இருந்தாலும் துன்பம் ... இல்லாவிட்டாலும் துன்பம் ... இரட்டை வலியை .... காதல் கண்களை தவிர .... வேறு அனுபவிக்குமோ ...? திருக்குறள் : 1179 + கண்விதுப்பழிதல் + வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 99

இதயத்தால் விரும்பாமல்...!!!

இதயத்தால் விரும்பாமல்...!!! என்னவனே .....!!! இதயத்தால் என்னை .. விரும்பாமல் வார்த்தையால் .. விரும்பியவனே - நீர் என்றாலும் நல்லாயிரு ....!!! என் கண்களோ ... உன்னை காணாமல் ... ஏங்கி ஏங்கி தவிப்பதை ... தூக்கமின்றி தவிக்கின்றன ... என்னவனே ஒருமுறை வாராயோ ....!!! திருக்குறள் : 1178 + கண்விதுப்பழிதல் + பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 98

இன்புற்ற என் கண்கள் ...

இன்புற்ற என் கண்கள் ... அன்று என்னவனை பார்க்கும் போது இழைந்து குழைந்து இன்புற்ற என் கண்கள் ... இன்பத்தின் உச்சத்தை ... அனுபவித்தன ....!!! இன்றோ .... அழுது அழுது தேய்கின்றன ... சொல்ல முடியாத சோகத்தை அனுபவிக்கின்றன .. இறுதி துளி கண்ணீர் .. வற்றும் வரை அழுகின்றன ...!!! திருக்குறள் : 1177 + கண்விதுப்பழிதல் + உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 97

காரணமான கண்களே ......!!!

காரணமான கண்களே ......!!! பூக்கள்  வாடுவதுபோல் ... என் கண்களும் வாடுகின்றன ... என் காதல் நோய்க்கு  காரணமான கண்களே ......!!! நான்  வாடுவதுபோல் .. என் கண்களும் வாடுகின்றன ... ஒருவகையில் எனக்கு  இன்பம் தான் - என்னை வாட  வைத்த கண்கள் வாடுவதால் ...!!! திருக்குறள் : 1176 + கண்விதுப்பழிதல் + ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்  தாஅம் இதற்பட் டது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96

கஸல் கவிதை என்றால் என்ன ..?

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் இதுவரை 750 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. நன்றி நன்றி @@@@ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!!

கஸல் கவிதை

இந்த  ஜென்மம் போதும் ... அடுத்த ஜென்மம் வரை ... நீ தந்த வலியை சுமக்க .....!!! பூப்போல் மென்மையாய் .. இருந்தாய் அதுதான் ... வாடியும் விட்டாய் ....!!! எப்படி உயிரே ..? கடும் மழையில் அடிபட்ட  கற் குறுணிகள் போல் ... உன் நினைவுகள் ஒரு  நொடியில் மறைந்து  விட்டன .......!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 734

கஸல் கவிதை

எதிர் பார்ப்பு வெற்றி  பெற்றால் சந்தோசம்  நம் வாழ்வில் பொய்ப்பித்து  விட்டது .....!!! காலை சூரியனாய் இருக்காமல் மாலை .. சூரியனாய் இருக்கிறாய் ....!!! என்  அனைத்து உடமையும்  உனக்கு தான் - காதலை  தரமாடேன் அதை நீ  வைத்திருக்க மாட்டாய் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 735

நான் கண்ட இறைவன்

தன்னிடம் கொடுப்பதற்கு  ஒன்றும் இல்லாத போதும்  ஒரு சில நொடி நான்  எதைஎண்டாலும் கொடுக்க  வேண்டும் என்று துடிக்கும்  இதயத்துக்குள் இறைவன்  இருக்கிறான் - அவன் .....!!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

என்னை  யாரென்று தெரியாமல் ... உடல் வலியோ உள வலியோ .. வரும் போது எனக்கு உதவிய ... மனிதம் ------------- !!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

மனிதன் வேறு  மனிதம் வேறு பிறருக்காக தன்னை  அர்பணித்து அறநெறியோடு வாழும் மனிதன் -மனிதம்  அந்த மனிதம் ...........!!! + நான் கண்ட இறைவன்