இடுகைகள்

பிப்ரவரி 17, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரணிக்கும் காலங்கள்

நீ மௌனமாய் இருக்கும் காலங்கள் நான் ... மரணிக்கும் காலங்கள் ,,,,!!! நீ பேசிய காலம் தான் .... என் பேரின்ப காலம் ,,,,!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மினிக் கவிதைகள்

சண்டை போட்டு பிரிய ... நாம் ஒன்றும் எல்லை .... கோட்டில் இருக்கும் ... எதிரிகள் இல்லை ...!!! சண்டை போடாமல் ... காதலிக்க நாம் ஒன்றும் ... மண் பொம்மையும் இல்லை ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன் நீ  காதலில் தந்த பரிசு  உன்னை நினைக்க ... வைத்ததை விட ... கண்ணீரால் நனைய ... வைத்ததே அதிகம் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

இதயங்கள் வெடித்து சிதறி விடும்

சோகத்தை வெளிக்காட்ட .... கண்ணீர் இல்லாவிடால் ... இதயங்கள்  வெடித்து சிதறி விடும் ....!!! காதல் பிரிவை ... யார் ஏற்படுத்துகிறார்கள் ... என்பது முக்கியமல்ல .... காதலை யார் புரியவில்லை ... என்பதுதான் வேதனை ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மனதுக்குள் காணும் காட்சி

சிரித்து விட்டு சென்று விட்டாய்.... மற்றவர்கள் என்னை .... பார்த்து சிரிக்க வைத்து ... விடாதே ...!!! உயிராய் காதல் செய் ... என்று சொல்லவில்லை .... உயிரையே வெறுக்கும் ... காதலை செய்து விடாதே ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன் ^^^ பேசிய வார்த்தையை ... காட்டிலும் - மௌனமாய் .... இருப்பதே வலி அதிகம் ...!!! உன்னை பார்த்தபோது ... கண்ட இன்பத்தை விட .... பார்க்காமல் மனதுக்குள் ... காணும் காட்சியே இன்பம் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து காதல் 07

அடுத்த நாள் பாடசாலைக்கு .... பூவழகன் சற்று நேரத்துடன் .... வந்துவிட்டான் - அதிர்ச்சி .... அவளும் வந்துவிட்டாள் .....!!! பூவழகனுக்கு அருகில் தயங்கி ..... தயங்கி வந்தாள் - எல்லோரும் .... என்னோடு பேசினார்கள் ... நீங்க மட்டும் ஏன் பேசல்ல ....? பூவழகன் .... எனக்கு அதிகம் பேசுவது .... பிடிக்காது... பேசவில்லை ..... எனக்கும் அதிகம் பேசுவது .... பிடிக்காது - அதனால் .... உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .... பூவழகன் அதிர்ந்து போனான் ...!!! " உங்களை எனக்கு பிடிசிருக்கு " சொன்ன வார்த்தை உடலில் ... மின்சாரம் பாய்ந்தது போல் ... உறைந்து போனான் பூவழகன் ....!!! உங்க பெயர் என்ன ....? பூவழகன் கேட்டான் ... உங்க பெயரென்னா....? அவள் கேட்டாள் .... என் பெயர் பூவழகன் ...!!! அப்போ என் பெயர் ... எதுவாகவும் இருந்துட்டு போகட்டும் -நீங்க பூவழகி என்று கூப்பிடுங்கள் ... என்று சொன்ன அந்த நேரம் ... அவளது தோழி அவளை .... அழைத்து சென்றுவிடாள் ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 07 வசனக்கவிதை....!!! ^^^