புதன், 4 நவம்பர், 2015

நான் கரையோர நண்டு

நான் 
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!

காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?

பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 890

என்னை காப்பாற்று ....!!!

துடுப்பு 
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!

காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!

வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 889

நீ அருகில் வேண்டாம் ....!!!

காதலுக்கு தனி கல்லறை ....
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!

எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!

எப்போதும் என் முகவரி 
நீ தான் - தயங்காதே 
அப்போதே என் முகவரி 
தொலைந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 888

புரியாமல் காதலித்து விட்டதே ....!!!

உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!

காதல் 
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!

உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 887

என்னை இழப்பேன் ....!!!

நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!

இதயத்தில்
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!

கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 886