புதன், 12 ஆகஸ்ட், 2015

மறக்கவும் முடியாது ....!!!

மழையில்
நனைந்தபடி ....
அழுகிறாய்  -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!

தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை காதலித்து விடு ...!!!

என்னிடம்
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!

வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மௌனத்தை உடைத்து எறிந்துவிடு ....!!!

எத்தனை  முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!

ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

இறக்காமல் இருக்கிறேன் ....!!!

இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!

காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

நானும்
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!

உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!

என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

எனக்கு ஆகாரம் .

தினமும்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

விட்டு சென்று விட்டாய் என்னை ...!!!

தொட்டு
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எனக்கு பகையாக இருகிறது ...

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

காதல் சிதறல்

காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல்
கே இனியவன்

நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!

கானல் நீர் ...
கேள்விப்பட்டேன்   ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!

என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833

உன் இதய கதவை ...

என் இதயம் ...
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!

உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை  பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!

உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832

உன்னை தேடுகிறேன் ....!!!

உன்னை
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!

உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!

நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...