இடுகைகள்

பிப்ரவரி 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாயே.. அம்மா... அன்னையே ..!!!

உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு  .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ளைக்கும் தாயாய் இருப்பதால் -தாயே "அன்னையாய் "வணங்குகிறேன் ....!!!

இதயம் இல்லாத மனிதனாய்

அறுந்து இருக்கும் .... இதய நரம்புகளை .... எந்த வைத்தியரும் ... இணைக்கமுடியாது .... என் ஜனனமும் நீ என் மரணமும்  நீ ....!!! பேசிய நீ பேசாமல் இருப்பதுதான் .... என் பிறப்பில் நான் கண்ட ... கடும் தண்டனை .... ஒருவரை பேசாமல் கொல்ல... காதலால் மட்டுமே முடியும் ...!!! இறைவா அடுத்த ஜென்மம் ... ஒன்றிருந்தால் என்னை ... இதயம் இல்லாத மனிதனாய் .... படித்துவிடு ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

உருக்கமான காதல் கவிதைகள்

ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர ... நான் யாரையும் பார்க்க ,,, விருமவில்லை ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்