இடுகைகள்

டிசம்பர் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழை - இரண்டு வரிக்கவிதை

மழை - இரண்டு வரிக்கவிதை -------- வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை  வானம் கதறி அழுதாள் - அடைமழை  |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்  பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்  ||||||| விவசாயியின் நண்பன் - மழை  வியாபாரியின் எதிரி -மழை  |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழை நனைவும் அகழாது....!!!

அகராதி என் காதல் அகராதி

ஆசை ஆசையாய் உன்னில் ஆசைப்பட்டேன் ..... ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் .... ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன்.... ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே ..... ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!! ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் .... ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் .... ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ...... ஆணவத்தால் என்னை இழந்துடாதே ..... ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!! ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் .... ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் ..... ஆழம் அறியாமல் காலை விடவில்லை .... ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...? ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!

ஒழுக்கம் கேடயம்

கே டயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ... கே வலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் .... கே சவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் .... கே ள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் .... கே ட்பார் சொல் கேளாதே  கே ட்டவுடன் எதையும்  கொடுக்காதே .... கே ள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே .... கே வலமானவன் என யாரையும் கருதாதே ....!!! கே ணியில் குளிப்பது மனதுக்கு உறுதி  கே ட்டறிதல்   அறிவுக்கு  உறுதி .... கே சம் வளர்ப்பது அழகுக்கு உறுதி .... கே ளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!!!

அவளில் நான் காணும் காதல்

எனக்கு அவள் அழகு .... தங்க,, வைர,, முத்து .... என்று சொல்லிக்கொண்டு .... போகலாம் ....!!! இத்தனை அழகாக .... தெரிவது அவள் அங்கம் அல்ல ..... அவளில் நான் காணும் காதல் .... அவளிடம் காதல் நிரம்பியுள்ளது .... என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 20

என்ன ஜாலம் செய்கிறாய்

எத்தனை முறைதான் .... ஏமாறுவது -நீ நீ என்று ....! பெண்கள் எல்லாம் .... நீயாக தெரிய என்ன .... ஜாலம் செய்கிறாய் ...? நண்பன் டேய் ... என்று கூப்பிடால் கூட ... நீ அழைப்பதுபோல் .... இருப்பதற்கு என்ன .... மாயம் செய்தாயோ ...? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 19

தானாக உதிர்ந்தன .

நீ  பூக்களின் ராணி .... நீ வரும் வழியெல்லாம் .... பூக்கள் உனக்கு ... தலைவணங்குகின்றன .....!!! வீதியிலே .... பூக்கள் வாடிவிழுந்துள்ளன .... என்று நினைக்காதே ... உன் பாதங்களில் அவை .... தொடவேண்டும் என்பதற்காக .... தானாக உதிர்ந்தன ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 18

வருத்தப்படும் வாலிபர் சங்கம்

உன்  பார்வை கிடைக்காத .... இளைஞர்கள் ஒன்று சேர்ந்து .... வருத்தப்படும் வாலிபர் சங்கம் ... உருவாக்கப்போகிறார்களாம் ...!!! உன்  பார்வை பட்ட நானோ .... வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை .... நீ அறிவாயோ ...? எப்போது அறிவாயோ ....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 17

எனக்கு பேச்சேது ....?

நீ  ஓடி வரும்போது ... காற்று உன்னை நன்றக .... தழுவுகிறது ..... காற்று கொடுத்துவைத்தது ....!!! நீ  மூச்சு வாங்கும் போது .... எனக்கு பேச்சே  நின்றுவிடும்போல் இருக்கிறது .... உன் மூச்சில்லாவிட்டால் .... எனக்கு பேச்சேது ....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 16