இடுகைகள்

அக்டோபர் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 100

நீ வெயிலா மழையா சொல்லிவிட்டு போ...? நான் சிலந்திபோல் உன் நினைவுகளால் வலைபின்னுகிறேன் நீயோ - சிலந்தியாய்  என்னை விழுங்குகிறாய் நான்  மரணத்திலிருந்து தப்பிவிட்டேன் ... உன் வலியில் இருந்து தப்ப முடியவில்லை ....!!! + கே இனியவன் - கஸல் 100

உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!

இப்போது நான் கல்லூரிக்கு போவதில்லை -நீ கல்லறைக்கு எப்படி ..? போவது என்று .... பயிற்சி எடுக்கிறேன் ....!!! என் கையெழுத்தில் முதல் எழுத்தே -உன் எழுத்தாக மாறிவிட்டது....!!! என் கவிதையை .... இரக்கம் இல்லாமல் ... எரித்து விட்டாய் .... எறிந்த சாம்பல் கூட என்மீதிவிழுந்து -உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!! + கே இனியவன் - கஸல் 99

கடவுளே உனக்கு வேண்டும் ...!!!

கடவுளே உனக்கு வேண்டும் ...!!! நாஸ்தீகன் என்று கூறி .... உன்னை கல் என்கிறார்கள் .... உன்னில் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ... சில நேரம் உன்னையே திருடுகிறார்கள் ... ஆஸ்தீகனை படைத்தாய் ..!!! ஆடம்பர வீடு உனக்கு கட்டுகிறார்கள் ... அழகான பந்தல் போடுகிறார்கள் .. படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் .. தங்கநகை போடுகிறார்கள் ... உலகத்தையே சுமக்கும் உன்னை .. சுமந்து பெருமை பேசுகிறார்கள் .. என்னை  பொறுத்தவரை -இந்த இருவரும் பாவிகள்தான் .........!!! கடவுளே உனக்கு வேண்டும் .. இவர்களை பாவி என்று சொன்ன என்னை படைத்ததற்கு ...!!!

சோகம்தான் உனக்கு சொத்தோ ...?

நீ யாழ் வாசித்திருந்தால் என் ஊரின் பெயரில் உன்னை அழைத்திருப்பேன்... நீயோ காளியாய் இருகிறாய் ....!!! இசையில் அருமையான இனிமைகள் இருக்க -என்னை சோககீதம் பாட சொல்லுகிறாய்.... சோகம்தான் உனக்கு சொத்தோ ...? காதல் இசையை போன்றது தன்னை மறந்து சிரிக்கவும் செய்யும் -அழவும் செய்யும்....!!! + கே இனியவன் - கஸல் 98

உன் கண்பட்டதால் ...!!!

குற்றுயிரும் ... குறை உயிருமாய் .... வைத்திய சாலையில்.... இருக்கிறேன் -உன் கண்பட்டதால் ...!!! நான் காதலில் கர்ணனாக இருக்கிறேன் -நீ கண்ணனாக வந்து காதலை தானம் கேட்கிறாய்....!!! காதலுக்கு இன்பமாக கட்டிய காவியக்கட்டிடம் எங்கே உள்ளது ...???  + கே இனியவன் - கஸல் 97

நீ முறைத்து பேசினால்

நீ சிரித்து பேசினால் ... நட்சத்திரம் மின்னும்......!! நீ முறைத்து பேசினால் மேகம் கறுக்கும்....!! நீ மறைத்து பேசினால் சூரியன் மறையும்...!! நீ துன்பப்பட்டு பேசினால் இடி இடிக்கும்...!! நீ உருக்கத்தோடு பேசினால் தென்றல் வீசும்...!! நீ பேசாமல் இருந்தால் வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!! நீ தான் என் பருவகாலமாயிற்றே...!!!

உடைத்தது நீ

என்  மனம் உன் பார்வையால்.... உடைந்து சுக்குநூறாகி விட்டது .... கவலைப்படவில்லை...... உடைத்தது நீ.....!!! என்  காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன்  அன்பு உன்னையும் கடந்து என்மீது பட்டதால்தான் இந்தவலி....!!! + கே இனியவன் - கஸல் 96

இதயத்தை ஏன் மென்மையாக படைத்தாய்..?

சிப்பிக்குள் விழுந்த.... மழைத்துளி முத்தாகும் ... என் கண்ணுக்குள் விழுந்த .... காதல் ஆனாய் .... தண்ணீரில் முத்து கரையும் .... கண்ணீரில் காதல் கரையும் ...!!! + உயிரே உனக்காக சிலவரிகள்  இவன் உன் உயிர் உனக்காக ... கிறுக்கும் கிறுக்கன் .... கே இனியவன் @@@ இறைவா ...!!! என் இதயத்தை ஏன்..? மென்மையாக படைத்தாய்... ஏளனம் செய்கிறார்கள்... ஏமாற்றுகிறார்கள்.....!!! கையால் ஆகாதவன் என்கிறார்கள் கோழை என்கிறார்கள் நான் மென்மையான இதயத்தில் பிறந்தது குற்றமா ..?-இல்லை மற்றவர்கள் -வன் இதயத்தை கொண்டவர்களா ...? பொறுத்த மில்லாத -என் இதயத்தை மாற்று நானும் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு ....!!! + கே இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை 

உயிரே உனக்காக சிலவரிகள்

என் மனதோடு.... என் நினைவோடும்... என்னவளின் நினைவுகள் ... அவள் என்னை பிரிந்தாலும்,.... என் உயிரை உள்ளவரை .... என் வாழ்வெல்லாம் அவளுக்கே ....!!! + உயிரே உனக்காக சிலவரிகள்  இவன் உன் உயிர் உனக்காக ... கிறுக்கும் கிறுக்கன் .... கே இனியவன்

நீயே என்னை பார் ....!!!

காதல்  புற்கலாக‌... வளர்கின்றேன் ... பசுவாக‌ நின்று.... மேய்கிறாய்.....!!! கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில்....!!! உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் இதயத்தில் இருகிறாய் .... வெளியேறும் வரை .... + கே இனியவன் - கஸல் 95 நீயே என்னை பார் ....!!!