திங்கள், 7 செப்டம்பர், 2015

புனிதமாகும் நம் காதல்

புனிதமாகும் நம் காதல்

***

என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!

மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

என்னோடு இருந்துவிடு

என்னோடு இருந்துவிடு

****

உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....?
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!

என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

நம் காதலே வந்தது

நம் காதலே வந்தது

***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!

காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!

கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

கண்ணீரின் வலி கூறும்

கண்ணீரின் வலி கூறும்

****

உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!

நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!

+

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

காதல் சொல்லும் சின்ன கவிதைகள்

காதல் சித்தனாவேன்

காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!

சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!


+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...