இடுகைகள்

நவம்பர் 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோகங்களை மறைக்கலாம்....

என்னுயிரே  உனக்கேன் இவ்வளவு சோகம் ...? நான் இருக்கையில் உனக்கேன் .... சோக கவிதை என்று ..... எப்போதாவது கேட்டிருக்கிறாயா....? என் உள்ளத்தில் ..... காதல் சோலைகளைவிட ... சோகங்களே அதிகம் ... சோகங்களை மறைக்கலாம்....  மறக்கமுடியாது ...!!! சோகங்களை......  மறைக்கத்தான் சோகக்கவிதைகள்... எழுதுகிறேன் கண்ணே..... சோலையில் நின்றவனைவிட .. சோகத்தில் நின்றவன் தான் .. சாதித்துள்ளான் ....!!! நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!

கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் .... புரிகிறது -நீ என் இதயத்தை .... கண்ணாடியாய் ..... பார்த்திருக்கிறாய் ......!!! அதுதான் அப்பப்போ .... வந்து உன்னை அழகுபடுத்த ..... என்னை பயன்படுத்தி ..... இருக்கிறாய் .........!!! நான் என்னுள் நீ காதல் செய்கிறாய் ..... என்று கற்பனையில் ..... வாழ்ந்துவிட்டேன் ......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இதயத்தையே நனைக்கிறது ..!!!

உன் தொலைபேசி ... அழைப்பு என்னை ..... சந்தேகிக்கவைக்கிறது ....??? என்னை ..... மறந்து விடு என்று .. சொல்லியபின்  மௌனமானாய் ... அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!! உலகில் எந்த காதலர்கள் .. அழாமல் காதலை மறுத்தார்கள் ...??? உன் தொலைபேசியில் .... இருந்து வரும் கண்ணீர் ... இதயத்தையே நனைக்கிறது ..!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்