இடுகைகள்

அக்டோபர் 25, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிலவே பகலில் வரமாட்டாயா

நிலவே நீ பகலில் ... வரமாட்டாயா ...? பகலில் அவளை நீ அருகில் வைத்திருகிறாயே.... எனக்கென்ன வேலை ....? உன்னுடன் பகலில் ...? சக்களத்தி சண்டையை .... மூட்டிவிடவா என்னை ... பகலில் வரசொல்கிறாய் ...? + கே இனியவன் குறுங்கவிதை

நீ எழுதும் கடிதம் ...

நீ எழுதும் கடிதம் ... பேனாவால் எழுதுவதாக .. தெரியவில்லை -வலிக்குது ...! முள்ளால் தான் எழுதுகிறாய் ...!!! இதயம் .... மென்மையானது .. எத்தனை முறைதான் .... உன் வலிகளை தாங்கும் ..? + கே இனியவன் குறுங்கவிதை

கே இனியவன் குறுங்கவிதை

உணர்ந்துகொள் .. பிரிவது ஒரு நொடி .... அணுவணுவாக ... இறக்கபோகிறாய் .. பல்லாயிரம் நொடி ....!!! + கே இனியவன் குறுங்கவிதை 

கே இனியவன் குடும்ப கவிதை

என் அப்பாவே ..! சிறுவயதில் நடைபழக்கிய தந்தையே .. நடை பழகினேன் .... மிக விரைவாய் ஓடினேன் .... காலம் அதிவேகத்தில் .... என்னையும் அப்பாவாக்கியது ....!!! என் குழந்தைக்கும் நடை பழக்கினீர் .... விடைகொடுத்தது உங்கள் நடைக்கு .... முதுமை என்னும் காலம் ....!!! இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி .... காட்டும் பாக்கியத்தை பெற்றேன் .... மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ... உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் .... முதுமையின் நடையிலும் ஒரு அழகு .... இருக்கத்தான் செய்கிறது .....!!! + கே இனியவன் குடும்ப கவிதை