இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலித்து விடு ....!!!

மூச்சு உள்ளவரை ... நினைவிருக்கும் ஒரே ... விடயம் காதல் .... பிரிந்தது இரு முரண்பட்ட .... உடல்கள் மட்டுமே ....!!! $$$$$$$$ நான் உயிரோடு ... இறக்க விரும்புகிறேன் ... தயவு செய்து என்னை .... காதலித்து விடு ....!!!

இதயம் ....!!!

என்ன கொடுமை உயிரே .... உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு பிரிந்து விட்டோம் என்கிறாயே ....!!! ^^^^^^^ கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....!!!

காதல் சிறு கவிதைகள்

நீ மறுத்தது ... என் காதலை இல்லை ... உன் ஊசலாடும் உயிரை .... ஒருமுறை நினைத்து பார் ....!!!

காதல் சிறு கவிதைகள்

உன் வரவு என் பிறப்பு .... உன் பிரிவு என் இறப்பு .... என் நினைவஞ்சலியில்.... வாசகங்கள் ....!!!

நீ போகும் பாதை உன் பாதை ....!!!

இளைஞா...  இளைஞா.... தமிழ் இளைஞா காத்திடு காத்திடு நம் பண்பை போற்றிடு போற்றிடு ... தமிழ் தாயை பேணிடு பேணிடு ... தமிழன் வரலாற்றை- தமிழன் ... வெல்வான் தமிழன் வெல்வான் .... உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!! (இளைஞா...  இளைஞா....) உன்னிலிருக்கும் உன்னத திறனை .... உன் எண்ணத்தால் திறந்துவிடு ..... உன்னை நீயே ஏளனப்படுத்தும் ..... உன் எண்ண தீயால் எரித்துவிடு .... போகும் பாதையை தேடாதே .... நீ போகும் பாதை உன் பாதை ....!!! (இளைஞா...  இளைஞா....) ஆலம் விழுது மண் நோக்கி விழும் ... எண்ண விழுதை விண் நோக்கி எறி .... ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ அடங்கியிருக்கும் சங்கிலியை உடை .... நாளை என்பது சோம்பேறியின் சொல் .... இன்றே என்பது வீரனின் செயல் .....!!! (இளைஞா...  இளைஞா....)

அனுபவிக்கிறேன் ....!!!

என் காதலுக்கு ... என் கண் தான் கண்டம் .... பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!! நான் உன் மூச்சு .... நீ கடைசி மூச்சு ... விடும் வரை -நான் ... இருப்பேன் .....!!! நீ காதலை விட .. அழகானவள் உன்னிடம் காதல் .... எப்போது வரும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;802

நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

இதயமும் கருகும் .... இதயத்தில் இருப்பவர் .... வெளியேறினால் ....!!! மூச்சும் தீயாய் சுடும் ... மூச்சாக நினைத்தவர் ... முடிவு கட்டினால் ....!!! நான் கோயில் .... நீ அதில் தெய்வம் ... அருள் தான் இல்லை .... நீ வரம் தர மறுக்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;801

அதிகம் கொல்கிறாய் ...!!!

எனக்கு தனிமை பிடிக்கும் ..... உன்னை மட்டும் நினைக்கும் ... அந்த தனிமை ரொம்ப .... பிடிக்கும் .....!!! + sms கவிதை -------------- மீண்டும் என்னை .... விரும்பிவிடு ... பிரிவில் தான் என்னை ... அதிகம் கொல்கிறாய் ...!!! + sms கவிதை

sms கவிதை

காதலுக்கு முன் .... கற்பனையில் வாழ்கிறோம் ... காதலுக்கு பின் ... கண்ணீரில் வாழ்கிறோம் ... + sms கவிதை

உன் நினைவுகளால் ....!!!

நெருப்பு  இல்லாமல் ... அடுப்பு எரியாது ... என் இதயம் எரிகிறது ... உன் நினைவுகளால் ....!!! + sms கவிதை

கண்ணீராய் வருகிறாள் ....!!!

பலவகை வர்ணத்தில் .... கனவுகளாய் வந்தவளே ... இப்போ ஒரே ஒரு திரவமாய் .... கண்ணீராய் வருகிறாள் ....!!! + sms கவிதை

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

உரிமைக்காக போராடிய போராட்டம் .... உலகறிய செய்த நம் போராட்டம் .... உலகமே உற்று பார்க்கும் போராட்டம் ..... உயிரை தியாகம் செய்த போராட்டம் .... உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!! தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு ..... தன்மானத்தை இழக்கமாட்டான் .... தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் .... தன் உறவுகளை விற்கமாட்டான் .... தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!! வலிக்குதடா இப்போ இதயம் ..... கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் .... பேதைகளை போதையாக பார்ப்பதும் .... போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை .... மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை +02

வலிக்கும் கவிதைகள்

என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால்  ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது  கொடியது ... மனிதபிறவி கொடியது  ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை 

நான் சொல்லும் தீர்ப்பு ....!!!

படம்
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!! பெண் குழந்தை இருந்தால் ... இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ... காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ... என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!! சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை பறிக்க வேண்டும் ......!!! தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ... பறிக்க வேண்டும் ....!!!

குறுஞ்செய்திக்கு( SMS ) கவிதை

காதல் எல்லோருக்கும் வரும் எனக்கு போய்விட்டது + sms கவிதை ------- பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!! + sms கவிதை ------ நீ காதலிக்காது விட்டாலும் எனக்கு காதல் வந்திருக்கும் உன்னை பற்றிய கவிதை ...!!! + sms கவிதை ------- கவிதைக்கு கற்பனை..... வேண்டும் -உன்னை.... நினைத்தால் கற்பனை..... வரமுன் கண்ணீர் .... வருகிறது ....!!! + sms கவிதை ------- காத்திருப்பது காதலுக்கு அழகுதான் -ஆனால் இதயத்துக்கு வலி ...!!! + sms கவிதை

ஊட்டி விடுமாம் தாய் ....!!!

கூடி சாப்பிடுமாம் .... காக்காய் ....!!! தான் சாப்பிடாமல் ... ஊட்டி விடுமாம் ... தாய் ....!!! + அம்மா கடுகு கவிதை

அம்மாவே ஒளி ...!!!

அம்மா .... வீட்டின் சூரியன் துணை கோளான ... அப்பா இயங்கவும் ... நட்சத்திரங்கள் பிள்ளைகள் மினுங்கவும் ... அம்மாவே ஒளி ...!!! + அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை

திரு வாசகம் போதாது ... தாயே உன்னை பற்றி ... எழுத பெரு வாசகம் .... வேண்டும் ....!!! + அம்மா கடுகு கவிதை

மண்ணுலக வெண்ணிலாவை .....

காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாவே .... காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் .... என்னவளின் வதனமும் ..... மண்ணுலக நிலாதானடி .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!! அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை .... அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ...... தேய்ந்து வளரும் வெண்ணிலாவை .... தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் .... விண்ணுலக வெண்ணிலாவே ..... மண்ணுலக வெண்ணிலாவை ..... என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!

நிலவே இறங்கிவா ....!!!

நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?

என்னவளை படைத்தாயோ ....!!!

காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாபோல்...... காரிருள் கூந்தல் நடுவே  பளிச்சிடும் .... என்னவளும் மண்ணுலக நிலா .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

தமிழன் ஆதிமனிதன் ...!!!

ஆதிமனிதன் ... காட்டில் இருந்து .... ஊர்ந்து ஊர்ந்து வந்தான் .... அதுவே அவன் ஊரானது ....!!! மீளளிப்பு நிலத்தை ..... ஊரிலிருந்து பார்க்க சென்றோம் .... காடாய் இருக்கிறது ....!!! இப்போதென்றாலும்.... ஏற்றுகொள்ளுங்கள் ... தமிழன்  ஆதிமனிதன் ...!!!

எது எங்கள் சுடுகாடு ...?

ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?

என் இதயம் மறந்து விட்டது ...!!!

உன்னை விட அழகானவர்... இவ்வுலகில்   இருந்தும் .... உன்னையே விரும்புகிறது .. இந்த பாழாய் போன மனசு ...!!! எனக்கு காதல் செய்யத்தான் தெரியும் உயிரே ..... எப்படி மறப்பது என்பதை என் இதயம் மறந்து விட்டது ...!!!

கே இனியவனின் கஸல் - 800 வது பதிவு

நான்  எழுதிய கவிதையை ... நீ ஒரு நிமிட கனவாக்கி .... கலைத்து விட்டாய் ....!!! நீ  என்னை காதலிக்கிறாய் ... திமிர்பிடித்து அலைந்தேன் ... தீக்குச்சியின் கதையானேன் ... உன் திருமணத்தால் ....!!! பயணத்தில் உன்னை .. கண்டேன் காதலித்தேன் ... பயணம் முடிந்ததுபோல் ... காதலும் முடிந்தது .....!!! இறைவா ... எனக்கு மரணத்தை கொடு ... இல்லையேல் அவளின் ... கனவையாவது கொடு ... வதைக்காதே .....!!! நீ  சொல்ல கூடாத ஒரு சொல் ... நான் உன்னிடம் கேட்ககூடாத ... ஒரு சொல் - காதல்  இருவரும் பிரிந்தபோது .... புரிந்தது .....!!! + கே இனியவனின் கஸல் தொடர்கிறது காதல் கவிதை  800 வது பதிவு

சாம்பலாய் போய்விட்டது ....!!!

உன் கண்ணீரில் ... வெந்து துடிக்கும் ... காதல் வண்டு நான் ... அதுவும் சுகம் தான் ...!!! ஆற்றில் நிழலாய் ... விழுந்த நிலவை .... காதல் என்று நினைத்தது ... ஆற்றின் தப்புதானே ...!!! புகை போல் ஊரில் .. பரவிய நம் காதல் ... நெருப்பாய் எரிந்து ... சாம்பலாய் போய்விட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;799

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

உன்னை பூ என்று ... வண்டாக சுற்றி வந்தேன் ... நீ கடதாசி பூ ....!!! கனவுலகில் வாழும் ஜீவன் ... ஒரே ஜீவன் நான் .. அதை குழப்பி விடாதே ...!!! நீ வீசிய காதல் ... வலையில் சிக்கி துடிக்கும் ... காதல் மீன் நான் ... நீ கருவாடு போடுகிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;798

நம் காதல் இடைவெளி

மகுடிக்கு தான் பாம்பு ... படமெடுத்து ஆடும் ... நீ பாம்பாய் இருந்து .. மகுடியை ஆடவைகிறாய்....!!! உன் நுனிநாக்கில் காதல் ... என் அடிமனதில் காதல் ... நம் காதல் இடைவெளி .... இதுதான் ....!!! உன் மௌனத்தை... காதலென்று தப்பாய் ... நினைத்துவிட்டேன் .... கண்ணீரால் கவிதை ... வடிகிறது .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;797

நீ அறுத்து எறிகிறாயே ....!!!

உன் நினைவுகளை ... எண்ண கயிற்றால் ... கட்டுகிறேன் - நீ அறுத்து எறிகிறாயே ....!!! காதல் கப்பலில் ... வந்து விட்டு நீ மட்டும் நீந்தி சென்று ... விட்டாயே ....!!! நீ காதல் சூரியன் காலை உதயமாய் ... மாலை அஸ்தமனமாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;796

தொழிலாளர் தினம் ......!!!

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!!! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!!! தூங்கியவர்கள்  விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!!! நோக்கம் நிறைவேறும்வரை  ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....!!! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!!!