இடுகைகள்

ஆகஸ்ட் 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை தத்துவ கவிதை

பசுவிடம் சாந்தம் உண்டு..... யானையிடம் பொறுமையுண்டு .... நரியிடம் பகிரும் பண்புண்டு ..... புலியிடம் வீரமுண்டு ..... சிறுத்தையிடம் வேகம் உண்டு ..... நாயிடம் நன்றியுண்டு ..... குரங்கிடம் கொள்கையுண்டு .... சிங்கத்திடம் ஆளுமையுண்டு .... குதிரையிடம் வலிமையுண்டு .... மானிடம் அழகு உண்டு ..... முயலிடம் மென்மையுண்டு..... பூனையிடம் தூய்மை உண்டு .....!!! & இத்தகைய குணத்தை இழக்கும் .... மனிதா - எப்படி சொல்வாய் ..... இன்னொருவனை பார்த்து ..... நீ மிருகமடா  என்று .....? ^ வாழ்க்கை தத்துவ கவிதை கவிப்புயல் இனியவன்

என்ன உலகமடா

வெள்ளை வேட்டி கட்டி .. கழுத்தில் சங்கிலி போட்டு ... சட்டை பைக்குள் -பணம் தெரியும் படி வைத்து .... போகிறவரை -எல்லோரும் கும்பிடுறாங்க ..சாமி என்கிறாங்க ...!!! ஞானத்தில் பழுத்து .... அதிகமாக பேசாமல் ... ஊத்தை துணியுடன் ... ஞான பார்வையுடன் ... என் அருகில் ஒருவர் .... நிற்கிறார் -அவர் கேட்காமல்... காசை போடுகிறார்கள் ... பிச்சையாக ...!!! என்ன உலகமடா ... புறத்தோற்றத்தை... பார்த்து எவ்வளவு .... காலம் தான் ஏமாறும்.... இந்த உலகம் ...!!! ^ வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ  ------ அ ன்பை நாடினேன் .. ஆ வலோடு காத்திருந்தேன்.. இ ன்பத்தை தந்தாவள்.... ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!! உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை .. ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌.... எ ல்லாம் செய்ததும் - நீ ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!! ஐ ந்து பொறிகளும்தன்.... ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌..... ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் .... ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்.... அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!! ^ காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்