இடுகைகள்

ஆகஸ்ட் 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னிடம் இருந்து தப்புவது ...?

எத்தனை முறைதான் .. உன்னிடம் இருந்து தப்புவது ...? சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!! கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!! கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!! எத்தனை முறைதான் -காதல் குற்றவாளியாவது ...? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

இறந்துகொண்டிருக்கிறோம்

தெரு ..... வெளிச்சம் பச்சை ... வாகனம் நகர்கிறது  ...!!! தொடரூந்தில் காப்பாளர் .. பச்சைக்கொடி ... தொடரூந்து செல்கிறது ...!!! எங்கள் நிறமே  பச்சை ... நாங்கள் மட்டும் இறந்துகொண்டிருக்கிறோம் மரங்களின் கண்ணீர் கதை ...!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

காதலன் நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தாய் வயிற்றில் .... சுமக்கிறார் .....!!! தந்தை முதுகில் .... சுமக்கிறார் .......!!! மாணவன் .... தோளில் சுமக்கிறான்....!!! காதலன் நெஞ்சில் சுமக்கிறான் .....!!! தொழிலாளி மூடையை சுமக்கிறான்  ....!!! நாட்டு கடனை மக்கள் ... வரியாக சுமக்கின்றனர் ....!!! காட்டுக்கு .... கூடு போகும் போது ... நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் பல இரசனை கவிதை

எதிர் ..... காலத்தை யோசி ... நிகழ்காலத்தை நேசி ..... அதிகளவு நுகராதே ..... அளவுக்கு அதிகமாய் ..... ஆசைப்படாதே .....!!! உணவு வாழ்க்கைக்கு தேவை..... உணவே வாழ்க்கையாய் .... வரத்தேவையில்லை ..... அதிக உணவு அடுத்தவர் ..... உணவை பறிக்கிறது .....!!! சூழல் அக்கறையின்மையும் ... அழிக்கப்போவது உன்னையும் உன் பரம்பரையை... !!! பட்டறிந்த ...... பலர் சொன்னாலும் ... கற்றறிந்த மேதைகள்....... சொன்னாலும் ... கட்டறுத்த மாடுகளாய் ... ஏனிந்த சமுதாயம் ....? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்