அவள் சிரிப்பாள் தானே ... நான் சின்னாபின்னமாகினேன் ... அவள் வாய்க்குள் ஒரு சின்ன .. சிரிப்பை சித்தாள் ....!!! நான் இப்போ சிரிப்பையே .. தொலைத்து விட்டேன் ... கொடிய விஷத்தை விட .. கொடியது அவளின் சிரிப்பு ...!!!
சிரிப்பு ஒருவனை சிந்திக்கவும் ... சீற்றமடையவும் வைக்கும் ... இடம் பார்த்து சிரி... அறிவோடு சிரி ....!!! கூனியை பார்த்து ராமன் சிரித்ததால் தான் ... இராமாயணத்தில் துன்பத்தை .. அனுபவித்தார் ராமன் ....!!!
சிரிப்பு மனித இனத்துக்கு .. இறைவன் கொடுத்த அற்புத ... அமிர்தம் ....!!! தூய்மையான உள்ளத்தில் .. தோன்றும் உன்னத உணர்வு ... சிரித்தால் சந்தோசம் மட்டுமல்ல ... சிந்தனை ஆற்றலும் பெருகும் ... ஒரு முறை சிரிக்க ... பலமுறை சிந்தி .....!!!
பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ... மறந்தேன் நான் இருந்த இடத்தை ... பறந்தேன் மனசிறகுடன் வானில் ... இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!! அலைந்தேன் உன் பதிலுக்காய் ... தொலைத்தேன் என் வாழ்க்கையை .... புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ... எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!
நித்திரையை தொலைக்க செய்த .... சித்திரை மாத சின்னவளே ... பத்தரை மாத தங்கம் என்றாய் ... பத்தரை மணிக்குமேல் .... சித்திரைவதை செய்யத்தானோ ...? முத்திரை பதிப்பேன் காதலில் ... முகத்திரை மனதில் இருப்பதால் ... நித்திரை தொலைந்தால் என்ன ...? சித்திரை மாதம் வரை ... பத்திரமாய் இருந்துவிடுமனதில் ... சித்திரை மாத சின்னவளே ...!!!
மறந்து போன விடயம் ஒன்றை ஞாபக படுத்தி சொல் என்றான் நண்பன் ....!!! ஒரு நொடியில் நீ பிரிந்து போன தினத்தை .. மறந்து போய் சொல்லி விட்டேன் ....!!! + + கலப்பு காதல் கவிதை கே இனியவன்
வருடங்கள் போகின்றன .. வயதும் போகிறது... இளமை பறக்கிறது ....!!! நீ தந்த காதலும் ... சுகங்களும் என்றும் .. மார்க்கண்டேயர் போல் ... இளமையாய் இருக்கிறது ...!!! + + கலப்பு காதல் கவிதை கே இனியவன்
பிறக்கும் போது வலியை தாய் ஏற்றார் .... இறக்கும் போது வலியை சுற்றத்தார் ஏற்பர் ....!!! வாழும் போது வலியை நான் ஏற்க வேண்டும்.. அதுதான் நீ பிரிந்து .. சென்றாயோ ..? + + கலப்பு காதல் கவிதை கே இனியவன்
எப்போதும் பத்திரமாக இதயத்தில் இருக்கத்தான் .. காதலை இதயத்தோடு ... ஒப்பிடுகிறோம் ....!!! இதயம் நின்றால் உயிர் போவதுபோல் ... காதல் இறந்தாலும் ... உயிரற்ற உடல்தான் ... வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!! + + கலப்பு கவிதை கே இனியவன்
நீ கிடைக்க மாட்டாய் ... நீ காதலிக்க மாட்டாய் ..... புரிந்து விட்டது உன் செயல் ...!!! உன் துன்பநினைவுகளும் ... என் இன்ப நிகழ்வுகளும் ... என் வாழ்நாள் பதிவுகள் ... வாழ்வேன் மூச்சு உள்ள வரை ... என் வாழ்வே நீதான் உயிரே ...!!! + + கலப்பு கவிதை கே இனியவன்
அன்பே .. நீ பேசிய வார்த்தைகள் .... நீ செய்யும் செயல்கள் ... இடி மின்னல் போன்றதோ ...? எனை அறியாமலே ... இதயம் அதிர்கிறது ... கண்கள் பெருக்காய் வடிகிறது ......!!! + + கலப்பு கவிதை கே இனியவன்