இடுகைகள்

ஆகஸ்ட் 5, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம் உள்ளவர்கள் காதலியுங்கள்

கண்களே ... கலங்காதீர்கள் ... என்னவளின் இதயம் ... அழகில்லை காதலும் ... அழகில்லை ....!!! இதயமே .... வருந்தாதே ... என்னவளிடம் இதயம் .... இல்லை அவளிடம் ... காதலும் இல்லை ......!!! மனசே .... மயங்காதே .... என்னவளிடம் மனசே ... இல்லை மயங்கி ... நீ வேதனை படாதே ....!!! கனவுகளே ... களைந்துவிடுங்கள்... என்னவளிடன் -என்  நினைவுகள் இல்லை ... கனவு வர வாய்ப்பேயில்லை ....!!! இதயத்தின் ... அழகே காதலின் ... அழகு - இதயம்  உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!

இதயத்தின் அழகே காதலின் அழகு

மலர்களே  மறைந்து விடுங்கள் .... என்னவளின்  அழகில் வாடிவிடுவீர்கள்...!!! நட்சத்திரங்களே   ஓடிவிடுங்கள் ... என்னவளின் கண்  சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர்  தென்றலே  வீசுவதை நிறுத்து .... என்னவளின் .... மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....! பனிதுளிகளே  சிந்துவதை நிறுத்துங்கள்... என்னவளின் .... வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....! குயில்களே  பாடுவதை நிறுத்துங்கள் ..... என்னவளின் ... குரலில் ஓசையில் இழந்திடுவீர்...!  மயில்களே தோகை விரிப்பதை நிறுத்துங்கள் .... என்னவளின் .... கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

கண்ணீர் நிற இரத்தம் .....!!!

நினைக்கும்போது சிரிப்பு .... வரவைப்பதும் காதல் ... அழுகையை வரவைப்பதும்  காதல் தான் ....!!! சிரிக்கும் போது ஓரக்கண்ணில் ... வருவது கண்ணீர் .... அழும் போது கண்ணில் ... வடிவது கண்ணீர் நிற ... இரத்தம் .....!!! + காதல் நினைவுகளின் வலி  என் கற்பனை வலிகள் (05)

உலகத்தையே மறந்தேன் ....

ஓரக்கண்ணால் பார்த்தாய் ... உலகத்தையே மறந்தேன் .... ஒற்றை வார்த்தை பேசினாய் ... உயிரையே துறந்தேன் .... இப்போ தலை குனிந்து ... முகம் திருப்பி செல்கிறாய் .... என்னை இழந்து தவிக்கிறேன் ...!!! + காதல் நினைவுகளின் வலி  என் கற்பனை வலிகள் (04)

நினைவுகளால் வலிகிறதா ...?

உன்  நினைவுகளால் வலிகிறதா ...? வலிகளால் உனை நினைகிறேனா ...? நானொன்றும் அறியேன் ....! நிச்சயம் உன் நினைவுகள் .... வலித்தால் இதயம் இல்லாத ... உடலுடன் இருப்பேன் ....!!! + காதல் நினைவுகளின் வலி  என் கற்பனை வலிகள் (03)

என் கற்பனை வலிகள்

உன்  செவ் இதழில் உதிர்ந்த.... ஒவ்வொரு சொற்களும் ... ரோஜா இதழ்களாய் ......! ஏன் இப்போ .... ரோஜா செடியின் முள்ளாய் .... தைக்கிறாய் - போதும் ... இதயத்தின் சதியில் ... இடமில்லை நிறுத்து ....!!! + காதல் நினைவுகளின் வலி  என் கற்பனை வலிகள் (02)

காதல் நினைவுகளின் வலி

காதலின்,,,,  வாழ்நாள் மூலதனம்.... நினைவுகள் தான் ....! சுகமான நினைவுகள் ... இதயத்தில் தென்றல் ...! சோகமான நினைவுகள் ... இதயத்தின் முற்கள் ...! காதலில் நினைவுகளின்  வலியே அதிகம் ....!!!  + காதல் நினைவுகளின் வலி  என் கற்பனை வலிகள் ( 01)