இடுகைகள்

ஜனவரி 18, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிந்தால் காதலையே விடுங்கள்

காதலோடு இருங்கள் காலமெல்லாம் இன்பம் ... காதலியோடு இருந்தால் .... காலமெல்லாம் ......? காதல் வெற்றி பெற.... விட்டு கொடுங்கள் ... முடிந்தால் காதலையே ... விட்டு விடுங்கள் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் ( சோக துளிகள்) கவிப்புயல் இனியவன்

அழியாது -முதல் காதல்

உலகில் எந்த அழிவு .... வந்தாலும் அழியவே ... அழியாது -முதல் காதல் ....!!! எத்தனை அழகை கண் ... பார்த்தாலும் முதல் காதலின் அழகை வெல்ல ... இல்லவே இல்லை அழகு ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் ( சோக துளிகள்) கவிப்புயல் இனியவன்

நான் காதலிப்பேன்

நீ என்னை காதலிக்காவிட்டாலும் ... நான் காதலிப்பேன் ஏன் தெரியுமா ...? உன்னை காதலித்த ... முதல் ஆள் நானான ... இருக்கவேண்டும் ....!!! உனக்காக காத்திருப்பதே .... காதல் சுமமாக இருப்பதால் .... நீ காதலிக்கா விட்டாலும் .... காத்திருப்பேன் ...!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 35

நீ அணைக்கும் அழகை

உன்னை பார்க்க .... எந்தளவு ஆசையோ ... அதை விட ஆசை -நீ தூங்கும் அழகை பார்க்க .... தலையணையை -நீ அணைக்கும் அழகை ....!!! நான் ஒரு கனவு கண்டேன் ... என்று நீ தலையை .... சொறிந்தபடி கூறும் ... அந்த மந்தியழகும்.... ஒரு அழகுதான் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 34

இரண்டையும் செய்தாய்

காதலில் தான் பொய்யும் அழகு களவும் அழகு ... என் வீட்டுக்கு முதல் ... முதலில் வந்தபோது ... இரண்டையும் செய்தாய் ....!!! இதயனே.... உன் அருகில் பேருந்தில் ... இருக்கும் பாக்கியத்தை ... பெற்ற அன்று உன்னோடு .... வாழ்துவிட்ட இன்பம் .... இன்றும் அந்த பேருந்தை ... திட்டுகிறேன் விரைவாக .... ஓடியதுக்கு ....!!! ^ என்னவளின் காதல் டயரியிலிருந்து என்னவளின் பக்கம்- 15

கண்ணீருக்கு தெரியவில்லை

என்னவனே உன்னோடு வாழ்ந்த நாள் மிக சொற்பம் உன் நினைவோடு வாழ்ந்த நாள் அதிகம் என்பதை என் டயரி சொல்லும் பார் ....!!! இடை இடையே ... எழுத்துகள் அழிந்திருக்கும் ... என்னசெய்வது கண்ணீருக்கு ... தெரியவில்லை ....!!! ^ என்னவளின் காதல் டயரியிலிருந்து என்னவளின் பக்கம்- 14

காதல் கவிதை பிரியாது

நீயும் நானும் பிரிந்து போகலாம் என் காதல் கவிதை பிரியாது -உன் நினைவுகள் என்னோடு வாழ்வதால் ஆழத்தில் இருக்கும் திமிங்கிலம் அடிக்கடி மேலே வந்து சுவாசிப்பதுபோல் உன்னை நான் பார்க்க ஏங்குகிறேன் இதயமே .. நான் உன்னால் காயப்ப இதயம் உனக்கு ஏன் இதற்கு மேல் இதயம் ...??? + கே இனியவன் - கஸல் 115

உனக்கு காதல் வரி

உன்னிடம் நான் தப்புவதென்றால் ... வேறு வழியே இல்லை காதல் செய்தே ஆகணும் ...!!! என் கவிதை வரிகள் உனக்கு காதல் வரி எனக்கு காலன் வரி ...!!! என் சோகத்தை கேட்டு சோகமே அழுகிறது நீ சுமகாய் வாழ்கிறாய் இதயத்தில் ....!!!  + கே இனியவன் - கஸல் 114

என் இதயக்கதவு

இதயத்துக்கு அருகில் வரும் போது கதவை சாத்துகிறாய் -நான் கதவை பலமாக ... தட்டுகிறேன் ....!!! இன்று போய் நாளை வா என்று சொல்ல நான் ராவணனும் அல்ல.... நீ ராமனுமல்ல....!!! என் இதயக்கதவு மட்டுமல்ல வீட்டு வாசல் கதவும் திறந்திருக்கிறது....!!! + கே இனியவன் - கஸல் 113

உன்கண் செய்த வித்தை

உன் கண் செய்த .. வித்தையே - காதல்...! எனக்கு கண்கட்டி வித்தை ஆகிப்போனது .....!!! உடலில் ஒன்பது வாசலையும் மூடுகிறேன் எப்படி வந்தாய் .... இதயத்துக்குள் ....?? காதல் ஒரு வான சாஸ்தியம் மின்னலும் வரும் இடியுடன் மழையும் வரும் ....!!1 + கே இனியவன் - கஸல் 112

நான் விதி விலக்கு

நீ வீதி விளக்கு சிவப்பு வெளிச்சம் நான் விதி விலக்கு பச்சை விளக்கு....!!! செக்கு மாடுபோல் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் உன் வேக வண்டிக்கு நான் பொருத்தமானவன் அல்ல .. பிரிந்து செல்லும் நீ திரும்பி பார்க்கவில்லை உன் இதயம் எனக்கு கைகாட்டுகிறது + கே இனியவன் - கஸல் 111