இடுகைகள்

டிசம்பர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!

கோயிலில் அம்மனுக்கு .... சேலை மாற்றி அலங்காரம் .... பார்கிறார்கள் ..... என் நடமாடும் அம்மனின் ... தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!! பாட்டி  சொன்னது நினைவுக்கு ..... நினைவுக்கு வருகிறது ..... இறைவன் மனிதவடிவில் .... அவதரித்தார் என்று ...... இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 05

ஓலம்விட்டு அழுகின்றன

தலையை துவட்டிவிட்டு .... துவாயை பார்த்து .... சிணுங்குகிறாய் ....... முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!! உனக்கு தெரியுமா ...? உதிர்ந்த முடிகள் .... ஓலம்விட்டு அழுகின்றன ..... உன்னை விட்டு பிரிந்து .... விட்டோமே என்று ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 04

எதற்காக சிரிக்கிறாய் ....?

நீ .........!!! குளிக்கும்போது .... எதற்காக சிரிக்கிறாய் ....? உச்சியிலே ஊற்றும் போது .... உன்னை மறந்து சிரிக்கிறாய் .... உண்மையைச்சொல் ..... என்னை தானே நீராக .... நினைக்கிறாய் .....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 03

இதய வடிவத்திலேயே

ஏய் .... நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 02

என்னவளே என் கவிதை

உன்  கள்ளம் பிடிபட்டது ..... கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....!!! இல்லை இல்லை ....!!! என்  உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 01

காதல் புரியாத புதிர் .....!!

தனித்திருந்தேன்  உன் நினைவுகளோடு ...  விழித்திருந்தேன் .....  உன் கனவுகளோடு ..  காத்திருக்கிறேன் ....  உன் வலிகளோடு .....  புரிந்திருக்கிறேன் .....  காதல் புரியாத புதிர் .....!!!

நானிருதென்ன பயன்

நானிருதென்ன பயன் ------------- நான் வெறும் ....  சுவாச தொகுதிதான் ..  நீ காற்றாக இல்லையெனின் ....  நானிருந்தென்ன பயன் ....?  நான் வெறும் ....  கண் தொகுதிதான் ....  நீ பார்வையாக இல்லையெனின் ...  நானிருந்தென்ன பயன் .....?  நான் வெறும் ....  மூளை தொகுதி தான் ....  நீ நினைவாக இல்லையெனின் ...  நானிருந்தென்ன பயன் ....?

என்னையும் கிள்ளி எறிந்தாய்

என்னையும் கிள்ளி எறிந்தாய் அழகாக பூத்த மரத்தில் ....  இரக்கமற்று பூவை பறித்து ...  காதல் சொன்னபோது ....  சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!  இன்பத்தை தந்து  துன்பத்தை தருவாய் ....  என்னையும் கிள்ளி எறிவாய்...!!!  இப்போதுதான் புரிந்தேன் ...  நம் இன்பத்துக்காக பிறர் ...  இன்பத்தை பறிக்ககூடாது .....!!!

ஒரு வரி கவிதை 05

ஒரு வரி கவிதை 05 முதுகில் தட்டும்  இதயத்தை கவரும்  நட்பு  #  முதுகில் குத்தும்  இதயம் வலிக்கும்  துரோகம்  #  இளமையில் ஆரம்பம்  மரணத்தில் முடியும்  நட்பு  #  மகா பாரதம்  கர்ணன்  நட்பு  #  தூக்கிவிடும்  துயரம் தாங்கும்  நட்பு

ஒரு வரி கவிதை 04

ஒரு வரி கவிதை 04 முகம் தெரியாது  அகம் மகிழும்  முகநூல்  @  முகம் பார்க்கும்  முகம் பேசும்  ஸ்கைப்  @  கடுகுசிறிது  காரம் பெரிது  டியிற்றல்  @  மனிதன்  உணர்ச்சியில்லை  ரோபோ  @  நவீனகளஞ்சியம்  நவீன பொக்கிஷம்  கணணி

ஒரு வரி கவிதை 03

ஒரு வரி கவிதை 03 சிரித்தாள்  சிதறியது  இதயம்  @  வலிக்கிறது  எழுதுகிறேன்  கவிதை  @  கண்டேன்  தொடர்ந்தேன்  இணைந்தேன்  @  பிரிந்தாள்  இணைந்தாள்  துடிக்கிறேன்  @  நாணயம்  இருபக்கம்  காதல்

ஒரு சொல் கவிதைகள் 02

ஒரு சொல் கவிதைகள் 02 காதல்  புரிதல்  வாழ்க்கை  @  சந்தோசம்  சந்தேகம்  பிரிவு  @  தெரியாது  பழகும்  நட்பு  @  ரசித்தேன்  திகைத்தேன்  என்னவள்  @  சாகாது  சறுக்காது  உண்மைக்காதல்

ஒரு சொல் கவிதைகள்

ஒரு சொல் கவிதைகள் நீ  நான்  காதல்  @  தீ  சுடும்  சொல்  @  வா  போ  பிரிவு  @  இருந்தாய்  சென்றாய்  வலி  @  நினைவு  கனவு  தோல்வி