இடுகைகள்

செப்டம்பர் 29, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்கான கவிதை

உன்னை கண்டவுடன் பொய் சொல்ல முடியாமல் தவிர்க்கும் போது வருவதே உனக்கான கவிதை

சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

நீ கருங்கல்லாக இரு நான் சிற்பமாக வடிக்கிறேன் இரும்பாக இரு அதிலும் சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

முத்தம் கிடைக்கும் ....!!!

பலமுறை பார்த்தால் ஒருமுறை காதல் வரும் -காதலின் பின் பலமுறை ஏங்கினால் -ஒருமுறை முத்தம்  கிடைக்கும் ....!!!

எப்போதும் மறக்காமல்

எப்போதும் மறக்காமல் இருப்பது காதல் என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது நட்பு

நீ என்னை வெறுத்து

நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?   காற்சட்டை போட்ட வயதில் .... கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும் சுற்றி திரிவோம் வெய்யில் மழை பாராமல் - உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும் தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று நினைத்தாலும் சிரிப்புவரும் .. சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? லுங்கி கட்டியவயத்தில் ..... எனக்கு வருத்தமென்றால் -உன் உடல் சோரும் -உனக்கு வருத்தம் என்றால் எனக்கு உடல் சோரும் ஊரிலுள்ள மூலிகை எல்லாம் கொண்டுவந்து தந்து குடியடா .. குடியடா என்று நச்சரித்து நச்சரித்து மூலிகையால் வருத்தம் மாறுதோ தெரியாது உன் அன்பு மூலிகையால் மாறிவிடும் வருத்தம் -இதையெலாம் சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? ஜீன்ஸ் போட்ட வயதில் ..... எனக்கு தான் காதல் வலி எனக்கு தான் வாழ்க்கை வலி உனக்கு நான் சொல்லி அழும்போது உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு துளி கண்ணீர் - நான் குடம் குடமாய் வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ நினைத்தாலும்