இடுகைகள்

அக்டோபர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் துடிக்கும் மீன்

நீ தூண்டில் நான் துடிக்கும் மீன் பாவம் காதல் புழுவாய் இறந்துவிட்டது ...!!! உன் பேச்சு உனக்கு வார்த்தை .. எனக்கு வாழ்க்கை உன் அழகு உனக்கு கர்வம் -எனக்கு .... கர்மா ....!!! காதல் மரணத்தில் முடிந்துவிட கூடாது என்பதால் தான் -நான் காதலிக்காமல் இருக்கிறேன் + கே இனியவன் - கஸல் 91

புரிந்து கொண்டேன்

புரியாமல் பார்த்தாய் வியந்து கொண்டேன் தெரிந்து பார்த்தாய் புரிந்து கொண்டேன் அன்பு கொண்டு பார்த்தாய் காதல் கொண்டேன் ஏக்கத்துடன் பார்க்கிறாய் என்னை இழந்தேன் வெறுப்புடன் பார்க்கிறாய் விலகிக்கொண்டேன் காதல் பார்வை .... சாதாரணமானதா ...?

என்னைவிட்டு போகிறாய் ...!!!

உன்னை நினைக்கும் போது .. கவிதை என்னைவிட்டு போகிறது கவிதை எழுதும் போது -நீ என்னைவிட்டு போகிறாய் ...!!! உன்னை நேரில் பார்ப்பதை .... மறந்து வருகிறேன் ... கவிதையில்,, கனவில் .... அழகாய் இருகிறாய் ....!!! காதலில் விழுந்து கதறுகிறேன் .... என்னை காதலில் ... இருந்து எடுத்துவிடு ...!!! + கே இனியவன் - கஸல் 90

என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!

கூலி வேலை செய்தேன் உன் வீட்டில்  யார் கண்டது நீ  கண்ணில் படுயென்று ...? கூலிக்கும் உன்மீது ஆசை ..... உனக்கும் என்மீது ஆசை ... கூடி ஒருநாள்கூட போசமுடியாத - தினக்கூலினான் ....!!! வீட்டுவேலை முடிந்ததும்.... முடிந்தது என் காதல் .... கண்ணே முடியவில்லை ... உன் நினைவுகளை மறக்க .... முடியவில்லை யாருக்கும் சொல்ல ....? .  கூலிக்கு தேவையா?  இந்தக்காதல் என்பார்கள் . ... கூலிக்கும் இதயம் இருக்கு .... என்று ஏன் புரிவதில்லை .... இந்த உலகத்துக்கு .... கூலிக்கும் காதல் வரும் -என்று  இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்.... என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!

கே இனியவன் தத்துவ கவிதை

அரைகுறை வெற்றியை விட .. முழுமையான தோல்வி .. வாழ்க்கையில் எவ்வளவோ .. மேல் ....!!! அரைகுறை வெற்றி காற்றில் அலைந்து திரியும் பஞ்சைப்போன்றது.. கீழேயும் விழாது மேலேயும் .. செல்லாது ...!!! நிறைய வாழ்க்கையில் .. அரைகுறை வெற்றியால் .. முழுவெற்றியை இழக்கிறோம் ... நிறைய மனிதர்கள் அரைகுறை .. வெற்றியை முழுவெற்றியாக .. கருதியே சாதனையை இழக்கிறார்கள் ...!!! கே இனியவன் தத்துவ கவிதை 

வேதனை போதும் ...!!!

காதல்  நல்லதும் இல்லை .... கெட்டதுமில்லை.... தயங்கினாய் .... தவிக்கிறேன் ....!!! காதல்  சுதந்திர பறவை ... உன்னை .... காதலித்தேன் .... படும் வேதனை போதும் ...!!! காதலுக்கு .. கண்ணில்லை  இதயமில்லை  பேச்சில்லை  என்றால் -காதலில்  என்னதான் இருக்கிறது ..??? + கே இனியவன் - கஸல் 89

நான் அழுதால்

குழந்தை அழுதால் பசி குயில் அழுதால் தேடல் குடல் அழுதால்  பட்டினி உடல் அழுதால் நோய் விதை அழுதால் விரயம் வீரம் அழுதால் தோல்வி மானம்  அழுதால் இழப்பு தானம்  அழுதால் வறுமை மனம் அழுதால் மன்னிப்பு சினம் அழுதால் சீர்திருத்தம் நீ அழுதால்  அது  நட்பு 'நான்'(ஆணவம் ) அழுதால் "ஞானம்"