செவ்வாய், 8 செப்டம்பர், 2015

உன் நினைவால் வளரும் ....!!!

நீ 
என்னுள் விதைக்கும் ...
ஒவ்வொரு எண்ணங்கள் ...
என்னும் விதைதான் ...
என் கவிதை என்னும் ....
அறுவடை .....!!!

என் மனம் ....
தரிசு நிலமானாலும் .....
வரண்ட பயிரென்றாலும் ....
உன் நினைவால் வளரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

நாம் காதலறாய் பிறப்போம் ....!!!

உயிரே ....
நான் எழுதிய கவிதைகளை ....
கவனமாக சேர்த்துவை .....
அடுத்த ஜென்மத்திலும் ....
நீதான் என் காதலி ......!!!

என் கவிதையூடாக ....
என் விதியை மாற்றி ....
எழுதிக்கொண்டிருக்கிறேன் ....
அடுத்த ஜென்மத்திலும் நாம் 
காதலறாய் பிறப்போம் ....!!!
+
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

எனக்கு இல்லை என்றாகிவிட்டது

இறைவனின் படைப்பில் ....
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!

நீ எனக்கு 
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும் 
கனவோடும் கல்லறை வரை 
இனிமையோடு களிப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

உன்னை மறந்து விட்டேன்

உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!

கொக்குபோல் காத்திருப்பேன் - கஸல்

சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!

காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!

என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 850

நீதான் முகவரி மாறிவிடாதே - கஸல்

நான்
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!

நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!

கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849

என்னை வெறுக்கிறேன் - (கஸல்)

உன்னைத்தான்
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?

நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!

என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 848

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...