இடுகைகள்

ஆகஸ்ட் 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நண்பா நட்பை பற்றி என்னால் ....

ஐய்ம்பூதங்கலின் கருத்தை .... ஐவகை நிலத்தை என்னால் .... ஐந்து வரியில் விளக்கிடுவேன் .... நண்பா நட்பை பற்றி என்னால் .... ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 10

நண்பா ..நான் வறுமை பட்டபோது ....

நண்பா ..நான் வறுமை பட்டபோது .... நீ வாங்கி தந்த ஆடை இன்றும் இருக்கிறது ..... எனக்கு அது புதைபொருள் பொக்கிஷம் .... எத்தனை புது ஆடைஉடுத்தாலும் .... உன் ஆடையின் அழகுக்கு நிகரில்லை ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 09

உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!

கண் பூத்து கண்பார்வை ...... குறைந்துபோகும்போதும் ...... கண்டவுடன் கட்டித்தழுவும் ..... ஒரே ஒரு உறவு நட்பு ..!!! உலகில் புரியாத புதிர் நட்பு ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 08

நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!!

நண்பா நட்பு ஒன்றுக்குத்தான் ..... நேற்று இன்று நாளை பொருந்தும் .... காதலில் இதில் ஒன்று நின்றுவிடும் ..... நட்பு காவியங்களை காப்பியங்களை .... நட்போடு வாசித்துப்பார் கண்ணீர் வரும் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 06 ------------------ கிழிந்த  காட்சட்டையுடன் நப்புகொண்டோம்..... இன்றுவரை கிழியாமல் இருக்குதடா .....! அழகான உடையிருந்தால் காதல் வரும் ..... அசிங்கமான உடையிருந்தாலும் நட்புவரும் ..... நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 07

''அ''டக்கமாக‌ உடை அணி

''அ''டக்கமாக‌ உடை அணி ''ஆ''பாசமாக‌ உடை அணியாதே ''இ''ருக்கமாக‌ உடை அணியாதே "ஈ'' ரமான‌ உடை அணியாதே "உ"டலுக்கேற்ற‌ உடை அணி "ஊ"ருக்காக‌ உடை அணியாதே "எ"ளிமையான‌ உடை அணி "ஏ"மாற்றும் காவி உடை அணியாதே ''ஐ''யத்தை(ஆணா?பெண்ணா?)ஏற்படுத்தும் உடை அணியாதே ''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே ''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே "ஔ"வை சொன்னதுபோல் கந்தையானாலும் கசக்கி கட்டு

என்னவளின் கண்கள் ......!!!

மேகத்திடம் கருநீலத்தை இரவல் வாங்கி விழிமண்டலமாய் உருவாக்கி .....! மழையிடம் நீர்துளிகளை இரவல் கேட்டு..... கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....! விண்மீன்களை .... கடனாககேட்டு கண்சிமிட்டும் காந்த சக்திகொண்ட கண்களே .... என்னவளின் கண்கள் ......!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள் ”

என்னை நீ காதலிக்கும் அழகு

உன் தந்தைக்கு பயந்து... தாயை சமாளித்து... அண்ணனிடம் பொய் சொல்லி தம்பியை வசப்படுத்தி .... தங்கையிடம் மறைத்து .... என்னை நீ காதலிக்கும் .... அழகோ அழகு .....!!!

காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

கா ற்றை  போல் பலமாய் இரு .... கா ற்றை  போல் மறைமுகமாய் இரு .... கா ற்றை  அசுத்தபடுத்தாதே ..... கா ற்று  போனால் பேச்சு போகிடும் ....!!! கா டு களை அழிக்காதீர் .... கா டு  மிருகங்களின் வீடு ...... கா டு களை போணுவோம் ..... கா டு  சமூகத்தில் பொதுச்சொத்து .......!! கா க்கை  போல் ஒன்று கூடி வாழ்வோம் .... கா க்கை  போல் கற்புடன் வாழ்வோம் .... கா க்கைக்கு  கண்மணி ஒன்று பார்வை தெளிவு ...... கா க்கை  போல் சூழலை பாதுகாப்போம் ........!!! காதல்  என்பது இருபால் கவர்சியல்ல ..... காதல்  எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது .... காதல்  செய்யுங்கள் இயற்கைமீது .... காதலோடு  காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!! + இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்  இயற்கை கவிதை