வியாழன், 5 ஜூன், 2014

இதயம் இனிமையோடு சுமக்கிறது ...!!!

இரவில் கனவுகளால் 
காய படுத்துகிறாய் ...
பகலில் நினைவுகளால் 
காய படுத்துகிறாய் ...!!!

உன் செயலால் உடலில்
காயப்படுகிறேன் ..
என்றாலும் உன்னை என் 
இதயம் இனிமையோடு 
சுமக்கிறது ...!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

நம் காதல் காவியங்கள் ...!!!

கனவில் நீ வரும் 
வசந்ததத்தையும் 
நினைவில் நீ தரும் 
வசந்தத்தையும் 
கவிதையாய் வடிக்கிறேன் 
உயிரோட்டமாய் வருகிறது 
என் கவிதை ....!!!

உன் நினைவுகள் வரிகள் 
இல்லை அரிசுவடுகள்
உனக்காக எழுதும் கவிதைகள் 
கவிதை இல்லை -நம் 
காதல் காவியங்கள் ...!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

முடிந்தால் எடுத்து விட்டுபோ ...!!!

உன்
நினைவுகளை எழுதி
வைத்தால் கவிதை ..

உன்
நினைவுகளை சுமந்தால்
காதல் இதயம்

உன்
நினைவுகளை வரியாக
எழுதினால் கண்ணீராய்
வருகிறாய் ...!!!

உன்
நினைவை மூச்சாய்
மாற்றி விட்டேன்
முடிந்தால் எடுத்து விட்டுபோ ...!!!

சிறப்புடைய இடுகை

தை பிறந்தால் வழி பிறக்க வருக

தை - திருமகளே வருக வருக .... தைரியம்  சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! ...