இடுகைகள்

செப்டம்பர் 22, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருணை இருந்தால் நட்பு ....!!!

கண்ணில் ஒரு கவர்ச்சி இருந்தால் காதல் ...!!! கண்ணில் ஒரு கருணை இருந்தால் நட்பு ....!!! முகத்தில் ஒரு அழகு இருந்தால் காதல் ....!!! முகத்தில் ஒரு அடக்கம் இருந்தால் நட்பு .....!!! சிரிப்பில் ஒரு பாசம் இருந்தால் காதல் ...!!! பாசமே சிரிப்பெல்லாம் இருந்தால் நட்பு ....!!!

எல்லையற்றது நட்பு ....!!!

காதலியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் ரோஜாவாக நீ தெரிந்தாய்.....!!! நண்பியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் பூவின் வாசனைதான் வந்தது ....!!! எல்லையுள்ளது காதல் எல்லையற்றது நட்பு ....!!!

அதிர்ந்தே போனார்கள் ....!!!

உலகிலேயே மிகவும் மோசமான துன்பத்துக்கும் அதை சொல்பவருக்கும் உலக பரிசு என்றார்கள் நம் காதல் கதையை சொன்னேன் முதல் அதிர்ந்தே போனார்கள் ....!!!

உன் நினைவில்லாமல்

நிலவெல்லாம் செல்ல முடியுமோ ..? தெரியாது உன் நினைவில்லாமல் நான் எங்கும் செல்ல முடியாது ....!!!

காதலிக்க தெரியவில்லை ...!!!

மனதைக் கலைக்கத் தெரிந்த உனக்கு என் மனதில் வர தெரியவில்லை ....!!! காதலை தூண்ட தெரிந்த உனக்கு காதலிக்க தெரியவில்லை ...!!!

உவமைகளையே பொயாக்கியவள் நீ

உன்னை அழகி என்பேன் ....? பூப் போன்ற முகமுடையவள் பால் போன்ற பல் அழகி நிலா போன்ற நெற்றி யழகி நதி போன்ற கண்ணழகி உனக்கு மட்டும் தான் உலக அழகி என்பேன் ....!!!! மான் போன்ற நடையழகி அன்னம் போன்ற பேச்சழகி கிளிபோன்ற பாட்டழகி உவமைகளையே பொயாக்கியவள் நீ உலக பேரழகி .....!!!

இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

பூப் போன்ற என் இதயத்தை மரம் வெட்டும் வாளால் வெட்டுகிறாய் -இந்த துணிவு இங்கு யாருக்குவரும் சொல்..? வெட்டுவதற்கு உனக்கு அனுமதிக்காமல் விட்டு எனக்கேன் .? என் இதயம் ...? இதயத்தை வெட்டு இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

உன்னை எனக்கு பிடித்தது

என்னவளே உன்னை எனக்கு பிடித்தது உனக்கும் என்னை பிடித்தது .-இதற்கு மேலாக காதலுக்கு நம்மை பிடித்தது காதலித்தோம் ....!!! கவிதை பிடிக்குமென்றாய் கவிதை எழுதினேன் திருமணம் பிடிக்கும் என்று எப்போது சொல்வாய் ....?

எப்படி தாங்கும் என் இதயம் ....?

தனிமையில் இருக்கும் போதெல்லாம் நீ தந்த வலிதான் நெஞ்சில் ஊசியாய் குத்துகிறது உன் வலி மட்டுமல்ல -உன்னால் கடவுளை தரிசிக்க மறந்தேன் உறவுகளை மறந்தேன் உற்ற நண்பனை மறந்தேன் காதல் வலி என்றால் தாங்கி இருப்பேன்  மொத்தவலியை எப்படி தாங்கும் என் இதயம் ....?

காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

இதயத்துக்கு உச்ச மகிழ்ச்சி காதல் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன் அதே இதயத்துக்கு உச்ச வலியும் காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

தப்பிக்கொள்ளுகிறான்....!!!

ஒவ்வொரு காதல் சொல்லிலும் ரோஜாவும் முள்ளும் இருக்கும் ...!!! கவனித்தவர் தப்பிக்கொள்ளுகிறான்....!!!

காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

உடல் கட்டழகுக்கு உடற்பயிற்சிக்கு சென்றேன் உள பயிற்சிக்கு ஆன்மீக நிலையம் சென்றேன் உன்னை சந்தித்திருந்தால் எங்குமே சென்றிருக்க மாட்டேன் காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

திருடிய இதயத்துக்கு என் இதயத்தை கொடுத்தேன் என் சந்தேகம் அவளின் இதயத்தை கருக்கியது ....!!! இப்போ யாருக்குமே கொடுக்க முடியாத இதயமாகி விட்டது என் இதயம் ....!!! ஓரத்தின் ஒரு மூலையில் தனியே அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!