இடுகைகள்

மார்ச் 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக அவலக்ஹைகூக்கள்

அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் 

அரசியல் ஹைகூக்கள்

தொண்டன் தீக்குளிப்பு தலைவர் சோகத்தில் மூழ்கினார் கட்சி ஒரு வாக்கினால் தோல்வி ^^^ காகித துண்டுக்கு ஆயிரம் பொற்காசுகள் வாக்கு சீட்டு விற்பனை ^^^ பொய்மையே வெல்லும் உண்மை சிறையில் அடைக்கப்படும் அரசியல் ^^^ அரசியல் ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன்

உன்னை மறக்க சொல்லாதே ..

உன்னை ... மறக்க சொல்லாதே ... என்னை... மடியச்சொல்... மடிந்து விடுகிறேன் ....!!! உன் நினைவுகளில் நான் பாம்புவாயில் சிக்கிய தவளை ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

காதல் இருவழிப்பாதை ஒருவழி ... தடைப்பட்டால்....? சிறகு ஒன்றுடைந்த.... பறவை .... நான் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

தவிர்க்கும் நான்

உன் எண்ணங்களை... சுமந்து ... தவிர்க்கும் .... நான் .....!!! வலையில் சிக்கி தவிக்கும் மீன் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

நீ இல்லாத ... பொழுதில்  ... நான் ....!!! நீர் இல்லாத இடத்தில் மீன் ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்