இடுகைகள்

ஆகஸ்ட் 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா கவிதைகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .... எந்த மனகுழப்பமும் இல்லாமல் ... எந்த வேறுபாடும் இல்லாமல் ..... அன்புவைக்கும் உயிர் வேண்டும் ..... தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 15

அம்மா கவிதைகள்

தன் தாயைப்போல் எல்லா .... தாயையும் நினைப்பவன் ஞானி ..... ஆனால் எந்த தாயையும் -நீங்கள் .... அம்மா என்று அழைத்துபாருங்க்கள் .... உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 14

அம்மா கவிதைகள்

தான் எங்கிருந்து வந்தேன் .... என்பதை எனக்கு எடுத்துரைக்கவே ..... என்னை ஆலயத்துக்கு அழைத்து .... சென்றார் அம்மா என்பதை ...... மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 13

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் ..... வரிகளால் அழைக்கும் போதும் ..... அம்மா என்று அழைத்த போதும் ..... உயிரில் அதிர்வு ஏற்படுகிறது .... உயிரில் கலந்த உறவு தானே .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 12

அம்மா கவிதைகள்

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 11

என் கவிதை வேறு....!!!

பகலில் சந்திரன் ... இரவில் சூரியன் ... நம் காதல் நிலை .... இதுதான் ....!!! என்னிடம் கவிதையும் .... உன்னிடம் காதலும் ... என்னபயன் ...? நம்மிடம் காதல் ... இல்லையே......!!! நீ கனவாய் வந்தால் .... என் கவிதை வேறு.... நினைவாய் வந்தால் ... என் கவிதை வேறு....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;841

எரிகிறது காதல் ....!!!

ஆடு புலி ஆட்டம்போல் .... நம் காதல் -நீ அசைத்தால்   ... வெளியேறிவிடுவேன் ....!!! நம் காதல் இறந்துவிட்டது .... நீ கண்ணீர் அஞ்சலி ... செலுத்துகிறாய் ....!!! சந்திரன் என்று .... சூரியனை .... காதலித்துவிட்டேன்.... எரிகிறது காதல் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;840