இடுகைகள்

ஜனவரி 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்தான மூன்று வரி கவிதைகள்

காலம் எல்லாம் காதல் வேண்டாம் ... என்னை காலன் அழைக்கும் வரை காதல் செய் ....!!! *********** காதலுக்கு கவிதை தேவை .... கவிதை எழுத காதல் தேவை .... காதல் செய் கவிதை வரும் ....!!! *********** புரிந்துபார் காதல் புரியும் பிரிந்து பார் காதலின் வலி புரியும் ....!!! ************ காதல் தவிர்ப்பில் உள்ளது .. தவிர்ப்புக்களின் வார்த்தையே ... கவிதை ....!!! ************ இதயம் இருக்கு என்பதற்காக ... காதல் செய்யாதே ... இதயமாக காதல் செய் ....!!!

காதலையும் சுமந்து வருகிறாய் ...

நீ தனியாக வந்த காலத்தில் .. தாங்க முடியாத என் இதயம் ... காதலையும் சுமந்து வருகிறாய் ... எப்படி முடிகிறது என் இதயத்தையும் .. சுமந்து கொண்டு வருவதற்கு ....!!! நீ பார்க்கும் போது அழகுதான் ... அதைவிட அழகு நீ என்னை ... பார்க்காததுபோல் பார்த்து போவது ... தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 03

முத்துப்போல் பல் அழகியல்ல ...

நீ பௌணமி அன்றுதான் ... பிறந்திருக்க வேண்டும் .... வட்டமுகத்துடன் .... வண்ண மேனியுடன் .... பிறந்திருகிறாய்....!!! முத்துப்போல் பல் அழகியல்ல ... உன் பல்லைபோல் முத்து அழகு ...!!! உன் கழுத்தை அலங்கரிக்க .... ஆபரணம் தேவையில்லை ... ஆபரணங்கள் அழகு பெற உன் .. கழுத்து தேவை ....!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 02