இடுகைகள்

செப்டம்பர் 10, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குப்பை கடுகு கவிதை

எம் அருகே வரும் போது மூக்கை பொத்தும் மானிடா ....!!! நீ இறந்தால் அடிக்கும் நாற்றத்தைவிட நாம் ஒன்றும் பெரிதல்லா ...!!! குப்பை கடுகு கவிதை

குப்பை- கடுகு கவிதை

எங்களை எரிக்காதீர்கள் புதைக்காதீர்கள் அது மனிதனை செய்யும் பணிகள் ....!!! எங்களை மீள் சுழற்சி செய்யுங்கள் ....!!! குப்பை கடுகு கவிதை

குப்பை கடுகு கவிதை 03

உங்கள் உள்ளங்களையும் இடங்களையும் தூய்மை படுத்தாத நீங்கள் தானே -குப்பை எங்களை குப்பை என்கிறீர்களே ....? குப்பை கடுகு கவிதை 03

காயப்பட்டிருக்கிறேன் ....!!!

நீ நினைவாய் தந்த ரோஜா செடியில் முற்கள் மட்டுமே உதிக்கிறது ....!!! இரவு எப்போது வரும் காத்திருக்கிறேன் அப்போது இனிமையாய் வருவாயோ ...!!! உன் அழகால் இதயம் முழுக்க காயப்பட்டிருக்கிறேன் ....!!! கஸல் 728

முற்களால் பூஜை செய்கிறாய் .....!!!

உன் நினைவுகளில் இருந்து கவிதை எழுதிய -நான் வலிகளில் இருந்து கவிதை எழுதுகிறேன் ....!!! காதல் பூவால்  பூஜை செய்த - நீ முற்களால் பூஜை செய்கிறாய் .....!!! உன் கண்ணுக்கு மயங்கி காதல் செய்தேன் இப்போ உன்னை கண்டே மறைகிறேன் ....!!! கஸல் 727

நாற்காலியில் ..

சொகுசான... நாற்காலியில் .. இருந்து கொண்டு ... காற்று இல்லை என்று கதறிக்கொண்டு இருகிறாயே மனிதா ...? மரம் கடுகு கவிதைகள்

என் நிழலின் கீழிருந்து ...

நான் செய்த பெரும் தவறு .. மனிதா உனக்கு நிழல் .. தந்தது தானோ ...? என் நிழலின் கீழிருந்து ... என்னையே .... வெட்டுகிறாய் ...!!! மரம் கடுகு கவிதைகள்

உங்களுக்கு உயிர் காப்பது ...!!!

எங்களில் ஒரு சில .. மரங்களை கடவுளாக்கி ... மற்றவற்றை விறகுகள் ... ஆக்கியது மனிதனே தவிர ... நாங்கள் இல்லை .....!!! எமது கடமை ஒரே செயல் உங்களுக்கு உயிர் காப்பது ...!!! மரம் கடுகு கவிதைகள்

மரம் -கடுகு கவிதைகள்

சிலுவைக்காகவும் .... எங்களை வெட்டுகிறீர்கள்.... இறுதி ஊர்வல கட்டைக்காவும் ... எங்களை வெட்டுகிறீர்கள் ... சிரித்துகொண்டே இறக்கிறோம் நாங்கள் ....!!! மரம் கடுகு கவிதைகள்