புதன், 24 ஜூன், 2015

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!

இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!

ஒரு 
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும்

ஐதரசனின் இரண்டு பங்கும் .... 
ஒட்சிசனின் ஒருபங்கும் .... 
சேர்ந்த கலவையே 
நீர் -H2O .....!!! 

என்னுடைய 
நினைவுகளையும் ..... 
உன்னுடைய நினைவுகளையும் .... 
வேதனையுடன் சுமந்து கொண்டு .... 
இருக்கும் நம் காதல் ... 
வேதியல் சூத்திரம் தான் ....!!! 

வேதியல் வகுப்பறையில் .... 
வேதியல் படித்தானோ .... 
தெரியவில்லை .... 
வேளை தவறாமல் ... 
உன் வேடிக்கைகளை 
ரசித்திருக்கிறேன் .....!!! 

வேதியலில் ... 
ரேடியத்தை கண்டு பிடித்த .... 
மேரி கியூரி குடும்பம் .... 
வேதனையான மரணத்தை .... 
அடைந்தார்கள் .... 
புற்றுநோய் ......!!! 

காதலும் .... 
ஒரு புற்றுநோய் .... 
உன் நினைவுகளால் நானும் ... 
என் நினைவுகளால் நீயும் .... 
கொஞ்சம் கொஞ்சமாக .... 
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

சிறப்புடைய இடுகை

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெரு...