இடுகைகள்

டிசம்பர் 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் நானும் நிச்சயம் சேர்வோம் ....!!!

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

அடுத்த நொடியில் இறந்து விடுகிறான்

விஷத்தை அருந்தியவன் அடுத்த நொடியில் இறந்து விடுகிறான் ...!!! காதலில் தோற்றவன் .... உயிரோடு இருந்தும் ... இறந்தவன் தான் ....!!! காதலில் வென்றவன் ... கொஞ்சம் கொஞ்சமாய் ... செத்துகொண்டிருப்பவன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தரையில் விழுந்த மீனும்

உன்னை நினைத்து  சுட்டுக்கொண்ட காயங்கள்  நீ என்னிடம் விட்டுச்சென்ற  நினைவுகள் ஏற்படுத்திய காயங்களின் வலியே அதிகம்…!!! தரையில் விழுந்த மீனும்  தண்ணீரில் தாழ்ந்த மானும் துடிக்கும் துடிப்பை உணர்ந்து  கொள்கிறது உன்னை தவறவிட்ட என் இதயம்….!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தோற்றது இன்னொருவனுக்கு

உலகில்...... வென்றவர்கள் ... பட்டியலை விட ... தோற்றவர்கள் .... தோற்று கொண்டிருப்பவர்கள் ... பட்டியலே அதிகம் ....!!! தோல்வி என்பது ... வெற்றியின் கருவறை ..... உரு பெற்றவுடன் தான் ... பிறப்பு வருவதுபோல் .... தோல்விகள் நிறைந்ததே .... வெற்றி ....!!! ஒன்றை நினைவில் வை ... நீ தோற்றது - இன்னொருவனுக்கு .... அனுபவம் ..... அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

தீக்குச்சியின் கெதிதான் ....!!!

தலை முழுக்க நச்சு ..... நல்ல சிந்தனையே இல்லை .... கெட்டவருடன் ஒன்று சேர்ந்து .... சாம்பலாகிறது .... தீக்குச்சி .....!!! மனிதா சிந்தனையை .... சீராக்கு - நல்லவர்களுடன் ... ஒன்று சேர் .... இல்லையேல் உன் கெதியும்  ... தீக்குச்சியின் கெதிதான் ....!!! தீக்குச்சி தானாக எரிவதில்லை.... இன்னொரு கெட்டதுடன்.... சேர்ந்தே எரிகிறது .... ஒருவன் கெடுவது தற்செயல் .... கெட்டவனோடு சேர்வது .... அதர்மம் ......!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

முயன்றால் முடியாதென்றொன்றில்லை

இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும்  எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்