இடுகைகள்

மார்ச் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றுவரி கவிதைகள் 

ஞாபங்கள் புற்றாய் வளரும் ..... கற்பனைகள் பட்டமாய் பறக்கும்  ... கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### நான்  உன்னை நேசித்தேன் .... நீ என்னை நேசித்திருந்தால் .... ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### பேசாமல் இருந்தபோது இன்பமானாய் .... பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் .... இருநிலையிலும் கவிஞனானேன் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும் 

காதல் செவ்வந்தியே

காதல் செவ்வந்தியே ....!!! ----- செவ்வந்திபோல் ... செவ்வாயை கொண்டவளே .... கருங்கூந்தலின் வாசனைக்கு ... நிகராகுமோ செவ்வந்தி ...? கொத்து கொத்தாய் ... பூக்கும் செவ்வந்தியே .... என்னவளை கொத்தி .... கொண்டு சென்று விடாதே ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

காதல் அள்ளியே

காதல் அள்ளியே ----- ஆருயிர் அழகு அள்ளியே .... உன்னை கிள்ளி .... காதல் கள்ளியிடம் ... கொடுக்க என் மனம் துள்ளி குதிக்குதடி ....!!! அள்ளியே .... உன்னை அள்ளி வந்து ... என் இதய கள்ளியிடம் ... கொடுக்கபோகிறேன்... அவள் என்னை கிள்ளி ... நகைக்கும் அழகை பார் ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

தாங்கி கொள்ளவே முடியாது ....!!!

என்னை அவமானபடுத்து .... பரவாயில்லை ....!!! நீ அவமானபட்டுடாதே ... அந்த அவமானத்தை ... நிச்சயம் என்னால் .... தாங்கி கொள்ளவே ... முடியாது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -57 கவிப்புயல் இனியவன்

எனக்கு கிடைத்த பரிசு

உன்னை உண்மையாக காதலித்த ... எனக்கு கிடைத்த மிக ... உன் வலிகளையும்.... சேர்த்து சுமப்பதே ....!!! காதல் தோன்றும் போது சுகம்  ... துவண்டு விழும் போதுதான் .... பாரிய சுமை ......!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -56 கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ என்னை நினைத்து .... கொண்டிருகிறாய் ..... என் இதயம் சிரித்து .... கொண்டிருக்கிறது ....!!! நேரில் பார்க்க ... உனக்கு முடியவில்லை ... என்னை நினைவில் .... வரவழைத்துவிடு .... நிச்சயம் உன்னை பார்ப்பேன் காதலால் .... நிச்சயம் முடியும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -55 கவிப்புயல் இனியவன்

உன்னதத்தை உணர்வேன் ...!!!

கடந்தகால .... வலிகளை மறக்கவே .... உன்னை விரும்பினேன் ... மீண்டும் பழைய  வழியை .... காட்டி விடாதே ....!!! அன்பே .... ஒருநாளைக்கு ஒருமுறை .... ஒரே ஒருமுறை என்னோடு .... பேசிவிடு அன்று நான் .... உயிரோடு இருப்பதன் ... உன்னதத்தை உணர்வேன் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -54 கவிப்புயல் இனியவன்