இடுகைகள்

ஆகஸ்ட் 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவை மறக்க முடியவில்லை !!!

உனை பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை !!! உனை நினைக்கும் போது கவிதையாக வருகிறது !!! உனை வெறுத்ததாக சொன்னாலும் .. மனம் என்னை வெறுக்கிறதே தவிர .... உன்னை வெறுக்கிதில்லை .. உனை மறக்க முயன்றும் என்னால் உன் உருவம் மறைகிறது .. நினைவை மறக்க முடியவில்லை !!! விழிக்குள் பதிந்து இருக்கும் உன்..... உருவத்தை கண்ணீரால் கூட ... அழிக்க முடியவில்லை ... கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன் கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை நினைக்க விரும்புகிறேன் ...!!! ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் .. முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

விழியில் மை அழகு ...!!!

என்னவளின் ..... இடையில் மடிப்பு அழகு ... நடையில் சுவடு அழகு ... சடையில் பூ அழகு ... விழியில் மை அழகு ...!!! பேச்சில் வார்த்தை அழகு ... மூச்சில் காற்றழகு .. பார்வையில் வீச்சழகு! சொல்லழகு... பல்லழகு... உள்ளம் அழகு... புருவ வில்லழகு....!!! காலழகு... மேலழகு... கண்ணழகு... மெய் அழகு,..... அவளை வர்ணிக்கும் கவிதை அவளைவிட ... அழகு ............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

மனைவிக்கு ஒரு கவிதை

ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை ஏமாற்றிவிடு ...!!!

போலியாக  காதலிப்பதை விடு ... நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன் *** அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ... அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன்