வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

வலிக்காத இதயமும் வேண்டும் ....!!!

கடலைப்போல் 
காதல் ஆழமானது 
கப்பல் கரைதட்டுவது 
போல் நாம் காதல் 
ஆகிவிட்டது ....!!!

உன்னை மறக்காத 
இதயம் வேண்டும் 
வலிக்காத இதயமும் 
வேண்டும் ....!!!

உன் சிரிப்பு கண்ணை 
பறிக்க வேண்டும் 
கண்ணையே பறித்து 
கொண்டு போய்விட்டதே ....!!!

கஸல் ;330

உன்னை வணங்குகிறேன்

நீ அன்பில் 
தங்கம் 
நான் பித்தளை ...!!!

தெய்வமாக உன்னை 
வணங்குகிறேன் 
அசையாமல் இருக்கிறாய் 

கண்டம் உயிருக்கு 
மட்டுமல்ல 
காதலுக்கும் தான் ....!!!

கஸல் 329
                                                                        

காதலை ஏற்றேன்

நீ என்னோடு 
தென்றலாக வா 
நான் 
இதழாக இருக்கிறேன் ...!!!

நான் வாண்டாக 
வருகிறேன் -நீ 
பூ உதிர்க்கிறாய் ...!!!

நான் நன்றி சொல்லி 
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி 
முடிக்கிறாய் ....!!!

கஸல் 328          

நீ உயிரை கேட்கிறாய் ....!!!

காதலை தருகிறேன் 
நீ உயிரை 
கேட்கிறாய் ....!!!

கடலுக்குள் 
முத்துதான் 
தேடனும் -நீ 
நண்டை தேடுகிறாய் 

தென்றலாக வருவாயென்று 
இருந்தேன் -நீயோ 
சுனாமியாக வருகிறாய் ....!!!

கஸல் 327

எனக்கு உன் பதில்


வீணையுடன் வருவாய் 
என்றிருந்தேன் -நீ 
நாணுடன் மட்டும் 
வருகிறாய் .....!!!

நாளில் 
இருளும் உண்டு 
வெளிச்சமும் உண்டு 
உன்னைப்போல் 

ஏக்கத்துடன் இருந்த 
எனக்கு உன் பதில் 
மயக்கத்தை தந்தது ....!!!

கஸல் 326

தேடுகிறேன்

சனக் கூட்டத்தில் 
ஆயிரம் கண்  
தேடும் - நான் 
உன்னை தேடுகிறேன் 

காதலில் நான் 
நாகம் 
நீ  கழுகு 

கனவில் இரவில் 
தேடுகிறேன் 
நீ நினைவில் 
பாகலில் தேடுகிறாய் 

தனிமையில் உன் நினைவு

எனக்கு 
காதல் சோகம் 
உனக்கு கதை 

தனியே இருந்து 
அழுதேன் 
உன் கை துடைத்து 
விடுகிறது 
நினைவில் 

நிஜத்தில் மறந்தேன் 
கனவில் வருகிறாய் 


இதயம் எப்படி இரும்பாகியது

சகோதரியே  !!
இந்த வயதில் இருந்து 
சுற்றியல் பிடித்திட்டோமே 
சுற்றியலை விட 
வண்மையாகிவிடும் 
நம் கைகள் -எம்மை 
வேலைக்கு அழைத்த 
முதலாளி எதையுமே 
பிடிக்காமல் எப்படி 
இதயம் இரும்பாகியது 
அவருக்கு ??

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...