ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கண்ணீர் இல்லை ...!!!

காதல் ....
தோற்றபின் பூக்கள் 
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!

மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!

என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;830

வில்லங்கப்படுகிறேன்....!!!

விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!

நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!

என் 
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;829

இதயம் எங்கே .....?

உன்னில்.... 
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?

உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!

காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;828

உடலை பிரித்துவிட்டாய் ....!!!

உன் பாசம் ...
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!

காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!

பூவுக்கு 
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;827

காதல் வலியை சுமக்கிறேன் ....!!!

காதலியோடு .....
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும் 
இருக்கிறது ....!!!

இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!

உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;826

வியாழன், 30 ஜூலை, 2015

ஆமீக சிந்தனை - நெல் மணி

ஆமீக சிந்தனை - நெல் மணி 
-----------------------------------------

ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு 
உதவுகிறது . 

மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.

ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.

+
சிந்தனை உருவாக்கம் 
கே இனியவன் 
வாழ்க வளமுடன்

காதல் வேண்டாம்

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

அவஸ்தைபடுவது நானே ....!!!

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

முகம் வாடி நிற்கிறது

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

தூக்கி எறியமாட்டேன் .....!!!

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன் - மூன்றுவரி கவிதைகள்

விழிப்பாக இருந்தால்  நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

புதன், 29 ஜூலை, 2015

கலாம் அய்யா மண்ணில் விதைக்கப்படுகிறார்

இளைஞர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
உங்கள் சோம்பல் தன்மையை .... 
புதைத்து விடுவதுதான் .....!!! 


மாணவர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
ஒவொருவரும் விஞ்ஞானியாக .... 
சமூக சேகவனான மாறுவேன் .... 
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!! 


அரசியல் வாதிகளே ....!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்தமா சாந்தியடைய .... 
அவரின் எண்ணங்களை உங்கள் .... 
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!! 


உலக தாய்மார்களே .....! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அந்த நிமிடத்தில் பிறக்கும் .... 
குழந்தைகள் ஒவ்வொருவரும் ... 
கலாமாக பிறக்கவேண்டும் .... 
பிராத்தனை செய்யுங்கள் .....!!!

செவ்வாய், 28 ஜூலை, 2015

காதலாய் நுழைந்தேன் ....

காதல் கவர்ச்சியால் .....
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!

நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!! 

காதல் பிரிவின்பின் ....

காதல் இருக்கும்போது ....
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!

காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி  தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்

வலியுடன் நானும் அவளும் ....!!!

என்னவளை இதயத்தில் .... 
வைத்திருந்தேன் -தப்புதான் ... 
என் இதயத்தையுமெல்லா.... 
கொண்றுவிட்டாள்.....!!! 

உயிரோடு இருதயசிகிச்சை ..... 
காதலில் தோற்ற இதயங்களில் .... 
நிகழ்ந்திருக்கும் ....!!! 

வலிக்கும் இதயத்தின் கவிதை 
வலியுடன் நானும் அவளும் ....!!!

"அன்பு உறவாகும் .....!!!

ஒவ்வொரு பிறந்தநாளும் ....
மனிதனுக்கு அனுபவபதிவுகள் .....
கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை ....
கசப்பாகவும் இனிப்பாகவும் ....
இருந்திருக்கும் .....!!!

இயன்றவரை இனிமையாக ....
வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் .....
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ....
வருங்காலத்திலும் நாம் எண்ணும் ...
எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!!

எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் .....
எல்லோரையும் தன்னைப்போல் வாழ ....
வேண்டும் என்ற சிந்தனை ....
ஒரு கை கொடுத்தால் மறு கை ....
தடுக்காத பழக்கம் கொண்ட உறவே ....
"அன்பு உறவாகும் .....!!!

தங்களும் தங்கள் குடும்பமும் ....
இன்றுபோல் என்றும் இன்பமாக ....
நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன்
உங்களை ஆசீர்வதித்தபடியே....
இருப்பான் - வாழ்க வளமுடன்

இதயத்தை பூட்டும் சாவி

எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!

இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41

காதலின் வலி புரியும் ....!!!

சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!

என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40

காலம் ஆனார் கலாம்

காலம் ஆனார் கலாம் 

காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!

தன் 
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!

தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு 
இறந்தகாலமே இல்லை -எப்போதும் 
நிகழ் காலம் தான் ....!!!

தற்காலபாரதியார் அய்யா கலாம்

தற்காலபாரதியார் அய்யா கலாம் 

பாரதியார் 
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!

அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!

ஒருவனுக்கு 
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!

கலாம் அறிவியலின் ஆன்மீகத்தின் தந்தை

உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை     " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!

எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை  ....!!!

திங்கள், 27 ஜூலை, 2015

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,


Posted Image


தமிழினத்தை உலகறிய .....
உச்சத்துக்கு கொண்டுசென்ற .....
உத்தம மனிதர்களில் ஒருவர் .....
மேன்மை தங்கிய தமிழ் ....
விஞ்ஞான தந்தையே கலாமே ...!
உங்கள் பங்கும் வற்றாத நதி
அய்யனே .....!!!

அடுத்த வேளை உணவுக்கு ....
அல்லல் பட்டாலும் நம்பிக்கையை ....
தளராமல் விடாமல் முன் செல் ...
வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் ....
வாழ்துகாட்டிய எம் தந்தையே ...
அய்யனே .....!!!

எப்போது எதிர்காலம் உங்கள் ...
கையில் இளைஞர்களே மாணவர்களே .....!
உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய ....
எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!!
உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் ....
அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!!

அய்யனே .....
நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு ....
சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ...
மரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....!!!
இருபத்தொராம் நூற்றாண்டின் .....
விஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல ....
இளைனர்களின் கனவு தந்தையும் ....
நீங்கள் தானே அய்யனே .....!!!
[/font]

அதுவே உனது இறைவன்.....!!!

ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒன்றில்
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஆன்மீக கவிதை

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து .....
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!

நீ 
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான் 
காதலிக்கிறேன் .....!!!

நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை 
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!

என் 
ஒவ்வொரு மூச்சும் 
உனக்கான கவிதை ....!!!

என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும் 
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;819

என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!

நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?

என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818

தலை குனிந்தது -நீ

காதல்
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ

மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!

நம்
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;817

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...