இடுகைகள்

செப்டம்பர் 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிற்பமாக வடித்திருந்தால்.....

உனக்கு ..... கவிதை எழுத்தியத்துக்கு.... பதிலாக ஒரு கல்லை ..... சிற்பமாக வடித்திருந்தால்..... கை மட்டுமே வலித்திருக்கும் .... இப்போ இதயமும் சேர்ந்து .... வலிக்கிறது ......!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை

கடந்த காதல் - குறுங்கவிதை

உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை 

ராஜ நடை .........!!!

நாற்பது பேர் கொண்ட ..... வகுப்பறையில் ..... முதல் மாணவனாய் வந்து .... பரிசுபெற்று மேடையை .... விட்டு இறங்கியபோது .... நான் நடந்த நடை தான் எனக்கு ...... ராஜ நடை .........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -10 தொடரும் ...

மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

எனக்கு வயது பத்து ..... என் தம்பிக்கு வயது எட்டு ..... தம்பியை அடித்த அவன் .... நண்பனை நான் அடித்தேன் .... அந்த நாள் நான் ஏதோ.... மாவீரன் போல் நினைத்த .... நாள் - எனக்கு மனதில் ... மல்யுத்த வீரன் நினைப்பு ......!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -09 தொடரும் ...

சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

பசிக்கும் குழந்தையின் ..... அழுகுரல் கேட்க்காமலும் ..... கை நீட்டி பசிக்காக ..... உதவி கேட்காத ... முதியவரையும் ....... தெருவில் காணாத நாள் .... எனக்கு ..... சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -08 தொடரும் ...