இடுகைகள்

அக்டோபர் 5, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு மலர்களே மலருங்கள்

சுட்டி காட்டவேண்டிய இடத்தில்  கண்டிப்புடன் சுட்டிக்காட்டி .... ஊக்கிவிக்கும்போது மனத்தால்  ஊக்கிவித்து கருத்துகூறும் ... என் அருமை நட்பே .... என் கிறுக்கல்களை தொடர்ந்து .... ருசி ரசி பகிர் ....!!! என் உயிர் மூச்சில் கலந்து.... இன்றும் என்னை நேசித்து.... என் நட்பு தோட்டத்துக்குள்... வந்து போகும் பறவையே.. உன் நட்பில் துயர் மறக்கிறேன்... தொடர்வோம் பகிர்வோம் ....!!!

கே இனியவன் தத்துவ கவிதை

துணையையும் துணியையும் எம்முடன் இரண்டற கலந்த .... உடமை என்பேன்..... துணையையும் துணியையும் ... தூர விலக்கினால் - போவது ... என்னவோ நம் மானம் தான் ....!!!  துணையையும் துணியையும்.... தொலைத்தவர்கள்....  தொலைந்து போகின்றார்கள் ... வாழ்தலைப் புரியாமல்.... வாழ்க்கையைப் பிணியாக்கி .... தொலைந்துபோகின்றவர்கள்....!!! துணைக்குள்ளும் துணிக்குள்ளும் அடங்கி போனவர்கள் .... நிம்மதிக்காய் அமைதிக்காய் .... அலைந்து திரிகிறார்கள் ....!!! வாழ்கையின் தூரம் புரியும் வரை... வாழ்தல் எவருக்கும் புரிவதில்லை..... வாழ்தல் அர்த்தம் புரியும் வரை வாழ்வது எதுவும் வாழ்க்கை இல்லை....!!! +  கே இனியவன் தத்துவ கவிதை

நட்பிலும் காதலிலும்

நட்பிலும் காதலிலும்  இதயத்தில் இரண்டு வரிகள் ..  பழகும் வரை உண்மையாய் இரு ..  பழகிய பின் உயிராய் இரு ...!!! நட்பிலும் காதலிலும் .... வார்த்தையில் இரண்டு தன்மை .... அளவாக பேசு .... உணர்ந்த பின் பேசு ....!!! நட்பிலும் காதலிலும் .... தோல்விக்கு இரண்டு காரணம் .... அதிகமாக ஆசைப்படுவது .... அளவுக்கு மீறி கோபப்படுவது ....!!!

காலமெல்லாம் காதலிப்பேன்

உன் விழிகளில் நான் .... இல்லாமல் போகலாம் ... நீ ஏமாற்றி விடலாம்..... என் நினைவுகளில் .... நீ விடுபட முடியாது ....!!! இதயத்தில் இருந்து .... நீ தூக்கி எறியலாம் .... என் இதயகீதத்தில் .... நீ விலக முடியாது .....!!! எப்படி  நான் ஏமாறுவது ...? உன்னில் நானும்.... என்னில் நீயும்.... இந்த மண்ணில்..... எண்ணி வாழ்வதே.... என் தலை விதி ....!!! என்  கண்ணில் உன்னை வைத்து கனவுடன் வாழ்ந்திடுவேன்..... காலமெல்லாம் காதலிப்பேன் .... கண் மூடுவரை காதலிப்பேன் ...!!!

குறுஞ்செய்தி அனுப்பு ...!!!

அப்போ... குறும் பதிலுக்கும் .... குறும்பு பேச்சுக்கும் .... துடியாய் துடிப்பேன் ....!!! இப்போ .... என்னைவிட்டு ... வெகு தூரத்தில் .... பணியாற்றுவதால் .... குறுஞ்செய்திக்காக .... காத்திருக்கிறேன் ....!!!

உணவு உணர்வை பாதிக்கும் ...!!!

உண்னும் உணவு பசியை ..... போக்க மட்டுமல்ல ..... உன் உணர்வையும் ..... வளர்க்க வைக்கவேண்டும் ... உணவு என்பது உழவு மட்டுமல்ல .... உனது மண்ணின் உணர்வும் ....!!! உணவை தயாரிக்கும்போது .... மன அமைதியுடன் சமைக்கவேண்டும் .... உணவை தயாரிப்பவரின் உணர்வு .... உணவில் நிச்சயம் கலக்கும் ..... குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு .... பிரதான காரணி - மன அமைதியான ... உணவு தயாரிப்பு அமைதியான .... குடும்ப உறவை வளர்க்கும் ....!!! உலகமயபடுத்தலால் உணவை .... மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் .... உணவு முறையை மாற்றாதீர் ..... உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!!

நட்பு கை கொடுக்கும் ....!!!

இதயத்தை பற்றிக்கொண்டால் .... காதல் ..... இதயத்தில் பசுமையாய் இருப்பது .... நட்பு .......!!! கஸ்ரப்பட்டு இதயத்துக்குள் காதல் வரும் ..... இஷ்ரப்பட்டு இதயத்துக்குள் .... நட்பு வரும் .....!!! துயரத்தில் இருக்கும்போது .... காதல் சுகம் தரும் ..... துயரத்தை துடைத்தெறிய .... நட்பு கை கொடுக்கும் ....!!! கட்டுப்பாட்டை தளர்த்தினால் .... காதல் தோற்கும் .... கட்டு பாட்டை  தளர்த்தினால் .... நட்பு கேள்வி கேட்கும் ....!!! காதல் சிலவேளை இலக்குகளை .... கனவாக்கிவிடும் ..... காதல் சிலவேளை கனவுகளை ..... இலக்காக்கி விடும் .....!!! காதல் திருமணத்தில் வெற்றி பெறும் .... நட்பு கல்லறை வரை  வெற்றி தரும் ....!!!

வெற்றியின் பெறு பேறாகும்....!!!

தோல்வியின் மூலதனம்  தயக்கம்....!!! வெற்றியின் முதலீடு  துணிச்சல்....!!! துணிந்தவர் தோற்றதில்லை தயங்கியவர் வென்றதில்லை! வெற்றியை விரும்பும் ...... நமக்குத் தோல்வியை.... தாங்கும் மனம் இல்லை....!!! தோல்வியைத் தாங்கும்  மனம் இருந்தால் அதுவும்..... வெற்றிதான்.....!!! இதயத்தில் மகிழ்ச்சி.... ஆன்மாவில் புத்துணர்வு.... வாழ்வில் வெற்றி... முகத்தில் புன்னகை.... அன்பின் நறுமணம்.... இவை அனைத்தும் .... வெற்றியின் பெறு பேறாகும்....!!!