புதன், 18 செப்டம்பர், 2013

பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!

இருட்டில் நின்று உன்னோடு
பேசுவதற்கு எனக்கு ஆசை
காதலர் எல்லோருக்கும் இருக்கும்
ஆசைதான் ......!!!
என்னசெய்வது நீ
பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!

நான் பார்க்கமுடியும் ....!!!

நீயும் பௌர்ணமியும்
சேர்ந்தால் ஆயிரம் சூரியன்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அமாவாசை அன்று வா
உன்னை அப்போதுதான்
நான் பார்க்கமுடியும் ....!!!

அற்புத நிகழ்வு ....!!!


ன்னை வைத்து ஒருநாள்
துவிசக்கர வண்டியில் பயணம்
செய்தபோது -நான்
துவிசக்கரவண்டியை ஓடவில்லை
அது காற்றில்
பறந்ததாகவே உணர்ந்தேன்
என்றும் நினையில் இருக்கும்
அற்புத நிகழ்வு ....!!!

சரணடைந்து நின்றோம் ....!!!


உன்னை திருவிழாவில்
முதல் முதலில் பார்த்ததை
இப்போது நினைத்தாலும்
இனிமைதான் ....!!!

நீயும்
சுவாமியை பார்க்கவில்லை
நானும்
சுவாமியை பார்க்கவில்லை
ஆனால் இருவரும் சுவாமிக்கு
அருகில் தான் நின்றோம்
உனக்கு நான் சுவாமி
எனக்கு நீ சுவாமி போல்
சரணடைந்து நின்றோம் ....!!!

இதயத்தில் தேன் சுரக்கிறது

உன்னை நினைக்கும் போது
இதயத்தில் தேன் சுரக்கிறது
இதயம் தேனை சுவைப்பதை
உணர்கிறேன் ....!!!
அறுசுவையை நாக்கு
உணர்வதுபோல் -காதல்
சுவையை இதயம் சுவைக்கும்
காதலை சுவையுங்கள்
காதலர்களை சுவைக்காதீர்கள்
அத்தனை பிரச்சனைக்கும்
காரணம் காதலை சுவைக்காமல்
காதலர்கள் சுவை காண்பதுதான் ...!!!


(கதை கதையாய் கவிதையாய் )

பூவாக மாறிவிடும் ....!!!

காதலித்த எந்த இதயமும்
கல்லாக இருந்ததில்லை
காதலின் பின் அனைத்து இதயமும்
பூவாக மாறிவிடும் ....!!!
அந்த மேன்மை வரவில்லை என்றால்
அது தூய்மையான காதல் இல்லை
மென்மை தோன்றிய காதல்
தோற்பதுமில்லை - காதலித்தபின்
அவன் உலகையே நேசிக்கிறான்

எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?

உன் வீட்டுக்கு ஏதோ
ஒரு பொய்யை சொல்லி வந்தேன்
வந்த வேளை என் அதிஸ்ரம்
மழையும் பெய்தது -நீ
ஒரு துவாயை தந்து துவட்ட
சொன்னாய் -துவட்டியது நான்
ஆனால் நீயே துவட்டியதுபோல்
உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...?
எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?
அந்த துவாயை நினைவு பரிசாக
தருவாயா ....?

(கதை கதையாய் கவிதையாய் ) 

வேண்டாம் அவளை தீண்டாதே

உன்னிடம் கொடுக்க பூவோடு
வந்தேன் -உன் முகம் பார்த்து
பூ வெட்கப்பட்டது -என்னிடம்
கெஞ்சியது என்னை அவளிடம்
கொடுக்காதே கொடுக்காதே ...!!!
பூவின் விருப்பத்தையே
நிறைவேற்றினேன் ....!!!

வண்டாக வருவோம் என்றால்
கையில் இருந்த பூ சொன்னது
வேண்டாம் அவளை தீண்டாதே
வேண்டுமென்றால் என்னிடம்
வா என்றது ...!!!

(கதை கதையாய் கவிதையாய் )

நான் கவிதை எழுத போகிறேன்

உனக்கு கவிதை எழுத
என்று தனியே ஒரு பேனாவும்
காகிதங்களும் வைத்திருக்கிறேன்
நான் கவிதை எழுத போகிறேன்
என்றவுடன் அந்த பேனாவும்
காகிதமும் முதலில் தம்மை
காதலிக்கும் -அன்பே
அதை பார்த்துகொண்டே
இருக்கலாம் -அத்துணை இன்பம் ...!!!

நானே எறிகிறேன் ....!!!

நீ
எண்ணை
நான்
தண்ணீர்
எப்படி காதல் வரும் ...?

நீ விறகாக மட்டும் இரு
உனக்கும் சேர்த்து நானே
எறிகிறேன் ....!!!

மின்னியபோது உன் நினைவு
இப்படித்தான் முதல் முதல்
நீ சிரித்தபோது -நான்
கருக்கினேன் ....!!!


கஸல் 481

கவிதை வந்தது ...!!!

ஒன்றை இழந்து  ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!

கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது

உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?

கஸல் 482

கசக்கிறதே கடல் நீர்

உனக்கு வாழ்க்கை வரும்
என்றால் நான் வாழ்க்கையை
இழக்கத்தயார் ....!!!

உன்
வீட்டில் வந்து நிற்கிறேன்
உள்ளே வா என்று கூப்பிடாமல்
தயங்குகிறாய் ....!!!

வற்றாத கடல்  நீர்
உன் நினைவுகள் -ஆனால்
கசக்கிறதே  கடல் நீர்


கஸல் ;483

நினைவுகள் சுனாமி ...!!!

உனக்கு என் இதயம்
உதைப்பந்தாட்ட மைதானம்
எப்படி வேண்டுமென்றாலும்
உதை.....!!!

என் தென்றலும் நீ
சூறாவளியும் நீ
நினைவுகள் சுனாமி ...!!!

நீ என்னை விட்டு
யாரிடம் போனாலும்
உன் காதலன் நான் தான்

கஸல் ;484

இதயத்தில் நுழைய விடுகிறாயில்லை

என் இதயத்தில் நுழைந்த
நீ -ஏன் உன் இதயத்தில்
நுழைய விடுகிறாயில்லை

எட்டாத பழம் புளிக்கும்
என்ற சிறுவயது கதை
நினைவுக்கு வருகிறது
நம் காதலில் ....!!!

உனக்கு தந்த பூ
என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது ....!!!

கஸல் 485

கைபேசிக்கு கவிதை

நான் எழுதும் கவிதை
வரிகளின் வலியல்ல
வலிகளின் வரி

கைபேசிக்கு கவிதை

என் வீட்டில் பூக்கும்
பூக்கள் நீ அருகில்
இருந்த போது -சிரித்த
சிரிப்பை நினைக்கவைக்கிறது

கைபேசிக்கு கவிதை

பார்த்ததால் பார்வை
இழந்தவன் நான்
பேசியதால் பேச்சை
இழந்தவன் நான்
காதலால் வாழ்வை
இழந்தவனும் நான் ....!!!

கைபேசிக்கு கவிதை

நானும் ஒரு பிச்சை காரன்
தூக்கத்தில் நீ கனவில்
வரவேண்டும் -என்று
உன்னிடம் கையேந்தி
நிற்கிறேன் .....!!!

கைபேசிக்கு கவிதை

பகலில் உன்னை
பார்க்கிறேன்
இரவில் நிலாவை
பார்க்கிறேன்
பூக்களில் உன் சிரிப்பை
பார்க்கிறேன் ....!!!

கதை கதையாய் கவிதையாய்

உன்னை விட்டு வெளியூர்
செல்லப்போவதை நினைத்தால்
இதயமே நொருங்கி விடும் போல்
இருக்கிறது ....!!!
மூச்சு வருவதும் நிற்பதுமாய்
அடைத்து அடைத்து வருகிறது
இரவு முழுவதும் அழுதேன்
பகல் அழமுடியாத சக்தியில் இருக்கிறேன்
பிரிவின் கொடுமையை இப்போதான்
உணர்கிறேன் ....!!!

(கதை கதையாய் கவிதையாய்)

நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!

என் இதயம் 
நரம்புகளாலும் 
சதைகளாலும் இல்லை 
உன் நினைவுகளாலும் 
கனவுகளாலும் இயங்குகிறது 
என் இதய அறைக்குள் 
இருக்கும் நீ அடிக்கடி 
கண்ணை விழித்தெழு 
இல்லாவிட்டால் என் இதயம் 
நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!

நான் வருவேன் கனவில் .....!!!

நீ தூங்கும் அழகை
தூரத்தில் இருந்தே
ரசிக்கிறேன் -துன்பப்படுகிறேன்
கண்ணே உன் கண்கள் தான்
அங்கே தூங்குகிறது .இதயம்
என்னீடம் இருக்கிறது
சற்று நேரத்தில் நான் வருவேன்
கனவில் .....!!!

கைபேசியை களவு எடுத்து விட்டேன்

உன் கைபேசியை களவு
எடுத்து விட்டேன் -நீ
என் இதயத்தை களவெடுத்தாய்
நான் உன் கைபேசியை
களவெடுத்தேன் -ஒன்றுக்கு ஒன்று
சமமாகிவிட்டது ....!!!
ஏன் எடுத்தேன் தெரியுமா ....?
உன் உதட்டோடு
உன் கண்ணத்தோடு
உன் காதோடு உரசிய அந்த
கொடியவனை
களவெடுத்து விட்டேன் தப்பா .....?

நான் வாழவிரும்பவில்லை

நீ எனக்கு வேண்டும்
நிச்சயம் வேண்டும்
நீ கிடைக்கவில்லை
என்றாலும் -உன்
காதல் வேண்டும்
காதலிக்க தெரியாதவன்
காதலிக்க இயலாதவன்
என்ற கெட்ட பெயெரில்
நான் வாழவிரும்பவில்லை 

உன் குழிவிழுந்த கன்னத்தில்

ஆயிரம் ஆயிரம் 
வார்த்தைகள் பேச 
உன்னிடம் வருவேன் 
உன் குழிவிழுந்த கன்னத்தில் 
புதைகுழியாக மாண்டுவிடுவேன் ...!!!

இருட்டில் நின்று உன்னோடு

இருட்டில் நின்று உன்னோடு
பேசுவதற்கு எனக்கு ஆசை
காதலர் எல்லோருக்கும் இருக்கும்
ஆசைதான் ......!!!
என்னசெய்வது நீ
பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!