இடுகைகள்

ஆகஸ்ட் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மைதான் உயரே ....!!!

என்னவளே .... உனக்கு கவிதை எழுதி எழுதி .... கவிதை அகராதியாகிவிட்டாய் .... ஒருவரி எழுத தடம் புரண்ட நான் .... கவிஞனாகிவிட்டேன் .... காதலித்துப்பார் கவிதைவரும் ... உண்மைதான் உயரே ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  காதல் கவிதை 02

இனிய வரவேற்பு கவிதைகள்

ஊ ரோடு ஒற்றுமையாய் வாழ்... ஊ ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு..... ஊ னம் என்பது உடலில் இல்லை ..... ஊ த்தை கொண்ட உள்ளம் இருப்பதே .... ஊ ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!! ஊரூராய் நல்லவை செயப்பழக்கு..... ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே ..... ஊதாரியாய் செலவு செய்யாதே ..... ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே .... ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!! ஊ க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு .... ஊ தியத்தை இயன்றவரை பெற்றுவிடு .... ஊ ழியம் செய்வதை உயர்வாய் நினை .... ஊ ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் .... ஊ ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!! ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு .... ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை ..... ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் .... ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு .... ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

காதல் முதியோர் இல்லத்தில் ....

நானும் அனாதைதானே..... நீ  விட்டு பிரிந்த நொடி .... காதல் முதியோர் இல்லத்தில் .... முடங்கி போய் இருக்கிறேன் ...!!! இறைவா எனக்கு .... மரணத்தை கொடுத்துவிடு .... என் கல்லறையில் அவளின் .... மூச்சுகாற்று படட்டும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என் கவிதையில் அதிகம் ....!!!

நீ பேசிய வார்த்தைகளை .... வடிவமைத்து எழுதிய .... கவிதையை விட .... உன் மௌனம் பேசிய ... வார்த்தை வரிகள் தான் .... என் கவிதையில் அதிகம் ....!!! என் இதய பூந்தோட்டம் .... வாடி வருகிறது .... எப்போ வருவாய் ,,,,? நீர் ஊற்ற .....? + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

முடியவில்லை உயிரே ....!!!

கிடைத்த நேரம் எல்லாம் ..... நினைத்தகாலம் போய்விட்டது .... இப்போ நேரமே இல்லை .... உன்னை நினைக்காமல் இருக்க ....!!! உன் கோபங்களை .... உன் ஆசை வார்த்தைகளை .... சேமித்து வைத்திருக்கிறேன் .... உன்னை நினைக்காமல் இருக்க .... முடியவில்லை உயிரே ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை