செவ்வாய், 17 நவம்பர், 2015

பூக்களால் கவிதை எழுதுகிறேன்

உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!


பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!


நீ 
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 900

என்னை விட்டுவிடு .....!!!

தத்தளிக்கிறேன் ....
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!

எனக்காக 
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!

நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ 
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 899

அப்போதே இறந்துவிட்டேன் ...!!!

நீ பனிகட்டி ...
என்னை உறைய ...
வைத்துவிட்டாய் ......!!!

நீ எப்போது
என்னிடம் வந்தாயோ ..
அப்போதே  இறந்துவிட்டேன் ...!!!

உன்னோடு இருக்கையில் ...
இரவெல்லாம் பகல் ....
இப்போ பகல் எல்லாம் ....
இரவு விடியமாட்டேன் ...
என்கிறது இரவு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 898

நான் கண்ணீர் விட்டதை .

நீ காற்று ....
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?

நான்
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!

நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 897

நான் அழத்தயார்....!!!

நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!

என்
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!

நீ
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 896

எப்போது வருவாய்

எப்போது வருவாய்  ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!

என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!

இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...