இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதுவே என் காதலர் தினம்.....!!!

ஆங்கில புத்தாண்டே என்..... காதல் சொன்ன தினம்..... அதுவே என் காதலர் தினம்.....!!! அவள் சொன்ன வார்தையே..... ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்..... இன்று பல ஆண்டுகள் ஆயினும்...... அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!! என்ன வேண்டும் உனகென்றேன் ....... உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் ....... பாக்கியம் வேண்டுமென்றாள்........... கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்....... வெளியூரில் வேலை செய்வதால்.....!!! ^ கவி நாட்டியரசர். கவிப்புயல் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ ++++++யாழ்ப்பாணம்+++++++ 

2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

படம்
2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ...... ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் .... ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ..... ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ..... ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட .... வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!! ^ கவி நாட்டிய

இறந்த பின்னும் இருக்கும் ............

நான் ............... இருக்கும் வரை என் ............... மனதோடு இதயத்தோடும் ........... உன் நினைவுகள் இருக்கும் ............ இறந்த பின்னும் இருக்கும் ............ என் கல்லறையோடு.. ............ என் கல்வெட்டோடும் .........!!! & கவிப்புயல் இனியவன் & காலங்கள் மாறினாலும் உன் மீது நான் கொண்ட காதல் மாறாது.. உன்னில் நான் மோகம் .... கொள்ளவில்லை ...... உயிர் கொண்ட காதல் ..... கொண்டேன் ........ என் மூச்சில் கலந்திருக்கும் ஒரு பகுதி உன் மூச்சு...........!!! & கவிப்புயல் இனியவன் 

காட்சிகள் தெரிவதில்லை.........

காதல்.............. உலகில் அன்பு ............. நிலைபெற, ............... இறைவன் எழுதிட்ட ........... எழுத்து...............!!! காதல் வந்துவிட்டால்.... காட்சிகள் தெரிவதில்லை! உறங்காத விழிகள் எரிகின்ற போதும்.... வலிகள் ஏதுமில்லை.........!!! $$$$$ கவிப்புயல் இனியவன்

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும் மறப்பதில்லை கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் வடியும் .... கண்ணீர் துளிகளாய் ..... உன் நினைவுகள்.....!!! & கவிப்புயல் இனியவன் ---- என்னை.... மறந்து விடு என்கிறாய் .... என்னை...... மன்னித்துடு என்கிறாய் ...... நிச்சயம் செய்கிறேன் .....!!! உன் ....... நினைவு இல்லாத தேசம் .... எது என்றுச்சொல்.... அங்கே சென்று விடுகிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

அடுத்த  நொடி துணிச்சல் இருந்தால் வென்று விடலாம் ....!!! எடுத்த ........... ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் சாதித்து விடலாம் ....!!! & கவிப்புயல் இனியவன் --------- அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!!! & கவிப்புயல் இனியவன்

வாழ்க்கையில் பேசாதே

போடா இனிமேல் ... வாழ்க்கையில் பேசாதே நீ ஒரு மனிதனா ...? நான் செத்தாலும் என் .. முகத்தில் முழிக்காதே ... எவ்வளவு கேவலமாய் ........ திட்டினாலும்........!!! சிரித்துகொண்டேதான் பதிலளித்தான் .. உன்னைவிட்டால் எனக்கு .. யாரடா இருக்கிறார்கள் ..? என் உயிர் நண்பன் .. இந்த சொல் என்னையே கொன்று விருக்கிறது .......!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்

பாசத்தோடும் .... அன்போடும் ...... இரக்கத்தோடும் .... வளர்த்த குழந்தையிடம் எதிர்பார்ப்புடனும் ... ஒரு கேள்வி கேட்டேன்...?? * யாரை ரொம்பப் பிடிக்கும் ? * ஒரு நொடி கூட தயங்காமல் ... தோழியின் பெயரைச் சொல்லி... நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

விழு அழாதே எழு

நெருப்பில் வேகவைத்து வேகவைத்து உடலை வளர்கிறோம்..... நெருப்பில் இந்த உடல்...... வேகபோகும் வரை........!!! நிலத்தில் குழி... தோண்டி தோண்டி..... உடலை வளர்கிறோம்..... நிலத்துக்குள் இந்த உடல்.... போகும் வரை......!!! எமக்கு உதவுபவர்கள்..... எப்போதும் உதவி கொண்டே..... இருக்கமாட்டாரக்ள்........ விழிபாக இருங்கள்.............. சுடெரிகவோ குழிதோண்டவோ..... தயாராக இருக்கிறார்கள்.....!!! & விழு அழாதே எழு கவிப்புயல் இனியவன்

காதல் கொழுப்பு

ஒரு செயலுக்கு போகும்..... போது காதலோடு சென்று ..... பாருங்கள் நிச்சயம் வெற்றி ..... காதலுக்கு மயங்காதவர்..... இவ்வுளகில் உண்டோ.....? இதயத்தை சுத்தம் ........ ஓமோன் தான் காதல்..... காதல் வந்தபின் இருண்ட.... இதயமெல்லாம் ஒளிபெறும்...... அதை காதல் புரியதவர்கள்...... காதல் கொழுப்பு என்கிறார்கள்....!!! & காதலே நீயில்லாமல் நானா 11 கவி நாடியரசர் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 10

உங்கள் ஆயுள் காலம் ..... பிறந்த நாளில் இருந்து ..... கணிக்கபட்டால் ......... வழமையான ஒன்று ......!!! உங்கள் ஆயுள் காலம் ..... காதல் காலத்திலிருந்து ..... கணிக்கபட்டால் ......... உண்மை வாழ்க்கை காலம் ....... வாழ்ப்பதற்கு பிறந்தேன் ..... என்பதை காட்டிலும் ...... வாழ பிறந்தேன் என்பதுக்கு ..... காதல் வேண்டும் ........!!! & காதலே நீயில்லாமல் நானா 10 கவி நாடியரசர் இனியவன்

கண் ஒளிமயமாகிறது.....!!!

கண்கலால் கைது செய்யுங்கள்...... சிறையில் அடைக்கபட மாட்டீர்கள்..... எப்போது காதல் வருகிறதோ....... அப்போது கண் ஒளிமயமாகிறது.....!!! & கவிப்புயல் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 09

பூங்காவில் பூக்கள் ..... அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் ..... காதலோடு இருப்பதுதான் .......!!! காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட ..... முகம் சுழிக்கின்றன.......!!! & காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 08

இதயத்தோடு ..... இருந்தால் காதலோடு ..... வாழ்கிறார்கள் என்பதை .... மறந்துவிடுங்கள் .....!!! ஒருமுறை காதலை .... நுழைத்து பாருங்கள் ..... கல்லும் உங்களை காதலிக்கும் நீங்களும் கல்லை காதல் .... செய்வீர்கள்  .........!!! & காதலே நீயில்லாமல் நானா 08 கவி நாடியரசர் இனியவன்

பூக்களின் ஹைக்கூக்கள்

ஒரு நாள் வாழ்க்கை சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை பூக்கள் ^^^ ஹைகூ 01 ^^^ மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது பூக்கள் ^^^ ஹைக்கூ 02 ^^^ தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை தானகவே பெறுகிறது தரிசனம் பூமாலை ^^^ ஹைக்கூ 03 ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

வார்தா புயலே இனி வராதே....

படம்
வார்தா புயலே இனி வராதே.... ----------------------------------- வார்தா புயலே இனி வராதே.... வந்தது வரைபோதும் வார்தாவே.... நாம் என்னைசெய்தோம் உனக்கு.... எங்களை அடியோடு புரட்டி விட்டாயே....... மனிதன் இறந்தால் அந்தகுடும்பதுக்கு..... இழப்பு -ஒரு மரத்தை இழந்தால்.... சமுதாய இழப்பு இதை ஏன்புரிய..... மறந்தாய் வார்தாவே.........? உனக்கு தேவையான மழை நீரை...... நாம் தானே ஆவியாக தந்தோம்.... உதவி செய்த எங்களையே எட்டி...... உதைத்து விட்டாயே வார்தாவே...... ஏன்...?மனித குணம் உனக்குமா......? உதவியை மறந்து உதைக்கும்குணம்..... நீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்.... இதற்காக புயலாக நீ வேண்டாம்.......!!! ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

எதிர்ப்பு சக்தி காதலுக்கு உண்டு

காதலை ஒருமுறை .... இதயத்தில் எடுத்துப்பாருங்கள் .... இதுவரை உங்களுக்காக ..... துடித்த இதயம் -பிறருக்காக .... துடிக்கும் அழகு தெரியும் .....!!! காதல் உள்ள இதயத்தில் ...... இரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ...... எத்தனையோ வகையான .... நோய் எதிர்ப்பு சக்தி ..... காதலுக்கு உண்டு .................!!! & காதலே நீயில்லாமல் நானா 07 கவி நாடியரசர் இனியவன்

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை ......!!!

எல்லா பிறப்பும் ..... பிறந்து இறப்பது ..... முக்கியமில்லை ..... காதலோடு பிறந்து.... இருக்கணும் ......!!! உலகில் காதலால் .... தான் காவியங்கள் .... காப்பியாயங்கள் .... தோன்றின - காதலே உனக்கு .......... ஆதியும் இல்லை ....... அந்தமும் இல்லை ......!!! & காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 05

நல்ல .... உணவு  ஆரோக்கியம் .... நல்ல ... தூக்கம் ஆரோக்கியம் .... நல்ல...... உடை அழகு .....!!! என்பதெல்லாம் .... புரிந்தால் மட்டும் போதாது ..... நல்ல காதலும் ஆரோக்கியம் .... நல்ல காதல் ஆயுளை கூட்டும் .... என்பதையும் புரிந்து ..... கொள்ளுங்கள் ..............!!! ^^^ காதலே நீயில்லாமல் நானா 05 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 04

ஒவ்வொரு பெண்ணுக்கும்...... ஒவ்வொரு அழகிருக்கும்..... உங்கள் காதலிக்கு மட்டும்.... ஆயிரம் அழகிருக்கும்.....!!! அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து.... பாருங்கள் அத்தனை அழகிருகும்.... ஒவ்வொரு சொல்லும் ஒராயிரம்... கவிதைக்கு சமனானது....!!! ^^^ காதலே நீயில்லாமல் நானா 04 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 03

எப்போதும் இளமையாக..... இருக்கவைக்கும் ஒரேஒரு.... கற்பக விருட்சம் -காதல்...!!! ஒருமுறை சோதித்து..... பாருங்கள் ........... எந்த பிரச்சனை.... வந்தாலும் கண்ணை மூடி..... காதலை காதல் செய்யுங்கள்.... குழந்தையின் முகத்தை.... பார்த்ததுபோல் எல்லா.... துன்பமும் பறந்து விடும் & காதலே நீயில்லாமல் நானா 03 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா...?

காதலியை சிறைகைதிபோல்..... இதயத்துக்குள் வைத்திருக்காமல்..... இதயமாக மாற்றி விடுங்கள்.... ஒவ்வொரு காதலியும் அதையே..... விரும்புகிறாள்.........!!! & காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்

என்னால்அழிக்கவே முடியவில்லை....!!!

இத்தனை ........ வருடங்களுக்கு பின்.... உன்னை பார்க்கிறேன்..... நினைவில் உன் பழைய.... முகமே நிற்கிறது.....!!! ஊரார் ..... உன்னை பலவகையில்..... அழகு என்கிறார்கள்...... எனக்கு என்னவோ இப்போ.. அழகில்லை அப்போதான் அழகு....!!! நினைவுகளில் இருந்து...... அந்த முகத்தை என்னால்.... அழிக்கவே முடியவில்லை....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

அனாதையாகி விடுவேன்......

நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

இத்தனை நினைவுகளை

உன் பிரிவுக்கு..... பின்னர் கடவுளை..... நம்பினேன் ........ உலகில் யார் யாருடன்..... சேரவேண்டும் என்பதை.... அவன் தான் தீர்மானிகிறான்....!!! அந்த கடவுளால் கூட..... காதல் நினைவுகளை...... அழிக்க முடியவில்லை...... ஒரு இதயத்தில் இத்தனை... நினைவுகளை சுமக்க... வைத்துவிட்டான்.....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

எனக்கு மட்டுமே புரியும்.....!!!

பிறருக்கு நான்..... பூந்தோடம் போல் வாழ்கிறேன்..... அவளின் நினைவுகள்..... முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது.... எனக்கு மட்டுமே புரியும்.....!!! நினைவுகளைபோல் ...... ஒரு கொடியதும் இல்லை..... நினைவுகள் போல்...... ஒரு சொர்க்கமும் இல்லை..... நினைவுகள் இல்லாதல் .... காதலே நிரந்தரம் இல்லாத... காதலாகும்...............!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

நீ இல்லத போதும் .... உன் நினைவுகளோடு..... வாழ்ந்ததால் தான்... இத்தனை வருடத்தின்.... பின்னரும் காதலில் .... இணைந்தோம்.....!!! காதலின்..... உயிர் நாடி நினைவுகள்.... நினைவுகள் இருக்கும்... வரை ஒருவரின் காதல்... இறபதும் இல்லை.... மறக்கவும் முடியாது .....!!! ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

இதயத்தை தொட்டுபார்......

நீ தொடும் தூரத்தில் .... இல்லையென்று..... கவலை படாதே....... இதயத்தை தொட்டுபார்...... இருகிறேன்..............!!! நீ பேச நான் அருகில்.... இல்லை என்று .... கவலைபடாதே...... ஒருமுறை கண்ணை .... மூடி பார் உன்னோடு.... நான் பேசுவேன்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

இனியவன் காதல் வெண்பா

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!  அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா

அந்த காதல் அழகு......!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வலியும் அழகுதான்........!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?

காதல்.... என்னை மறந்து .... உன்னை நினைக்க ..... வைக்கும் என்பது.... சாதாரண விடயம்......!!! உன்னை மறக்க மறக்க.... எப்படி மீண்டும்.... மீண்டும் வருகிறாய் .....? உன்னை ... ஒதுக்க ஒதுக்க...... ஏன் என்னோடு..... சேர விரும்புகிறாய் ....? காதலில் ஏன் எல்லமே..... தப்பு தப்பாய் சரியாய் .... ந‌டக்குது...................??? & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வரைந்தேன் கண்ணால்

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் காதல் வெண்பா

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

அவள் என் எழில் அழகி

அவள் என் எழில் அழகி ---------------------------------- அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! இ தயமாய் அவளை வைத்திரு .... இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் .... இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே ....... இ ன்னுயிராய் அவளை பார் ..... இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!! ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ...... ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் ..... ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ...... ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ...... ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!! உ யிரே என்று அழைத்துப்பார் ...... உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........ உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் .... உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் ..... உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!! ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது ..... ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு

அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே ..... கவிதை  எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அருவியாய் வருகிறது ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கண்ணீரால் எழுத வைக்கிறாய் ....!!!

காற்றைபோல் நீ .... எங்கே இருக்கிறாய் ..? எங்கே தொடங்குகிறாய் ..? எங்கே முடிகிறாய் ..? தெரிவதில்லை ..... ஆனால் இருக்கிறாய் ....!!! எதை கண்ணீரால் ... எழுதக்கூடாதோ... அதை கண்ணீரால் ... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

என்னோடு இருப்பாய் ...!!!

இரவுகள் .. விடியாமல் ..... இருக்க வேண்டும் .. நீ தொடர்ந்து ....... என்னோடு இருப்பாய் ...!!! காதல் தீப்பெட்டி -நீ உரசும் தீக்குச்சி நான் ...!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன் & தூங்கிய பின்பும் ... பார்க்கும் கண்கள் ... காதலளர் கண்கள் ....!!! உனக்காக நான் ..... பகலில் காத்திருந்தும் ... பலன் கிடைக்கவில்லை ... இரவில் காத்திருக்கிறேன் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள் ---------------------------- (1) எழுத்து.காம் (2) தகவல் .நெட் ( 3) தமிழ் தோட்டம் . இன்  (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம் & கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம் rushanth2013@gmail.com ulakanathan2015@gmail.com akarathamizhan@gmail.com ksekar965@yahoo.com kavithaipaiyan@gmail.com kiniyavan@hotmail.com

கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்

கவிப்புயல் நேரடியாக கையாலும் முக நூல்கள் ------------------------------------ 1) கவிப்புயல் இனியவன் - 5000 உறுப்பினர் 2)கவி நாட்டியரசர் இனியவன் - 5000 உறுப்பினர் 3)இனிமை இனியவன் -  5000 உறுப்பினர் 4)காதல் கவி நேசன் - புதியது கவிப்புயலின் கவிதையை அவரின் அனுமதி பெற்று பதியும் கவிதை ஆவளர்கள் முக நூல்கள் ------------------------------------- 1) கவி நாட்டியரசர் கவிதைகள் - மீள் பதிவு 2)கவிப்புயல் கவிதைகள் -மீள் பதிவு 3)கவிப்புயல் இனியவன் ரசிகன் - மீள் பதிவு 4)இனியவனின் கவிதைகள் - மீள் பதிவு 5)கவிப்புயல் இனியவன் கவிதை பிரியன் - மீள் பதிவு 6)தமிழ் இலக்கிய கவிதைகள் - மீள் பதிவு 7)புதினம் உலக நாதன் - மீள் பதிவு 8)கவிஞர்கள் மட்டும் முகனூல் - மீள் பதிவு 9)காதல் விழிகள் காதல் வலிகள் - மீள் பதிவு 10)கவிதை காதலன் - மீள் பதிவு 11)கவிதையே உயிர் - மீள் பதிவு 12)கவிதை ஆய்வாளர்- மீள் பதிவு 13)கடவுள்,காதல்,கவிதை - மீள் பதிவு 14)ஈழகவி இனியவன் கவிதை- மீள் பதிவு 15)கே இனியவன் மகாரசிகன் - மீள் பதிவு 16)தமிழ் பேசுவோம் - மீள் பதிவு அன்பு உறவுகளே இத்தனை முக நூலுக்கு ஒருவரால் கவிதை எழுத

காதலே சுவாசம்

அடி பெண்ணே! என் உணர்வினில் கலந்த .... உன் நினைவுகளை ..... கவிதையாக பேசுகிறேன்...!!! என் உடலில் கலந்த ...... உன் மூச்சையே...... நான் சுவாசிப்பதால் ..... வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன் காதலே சுவாசம்

உன் வாள் வீசும் விழி .....

மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும். @ உன்னோடு காதலில்.... விழுந்த என் இதயத்துக்கு ... கவிதை எழுத கற்று தந்தது .... உன் வாள் வீசும் விழி ..... அதுதான் என் காதலுக்கு .... மொழி ..........!!!

விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..!

பிறர் ..... விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..! அது ...... ஒரு கலை என்று அறிந்துகொள் ...! விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனதை கற்றுக்கொள் ..! வெற்றியை நோக்கி செல்கிறாய் என்பதை புரிந்து கொள் ..! பிரதானமான ஒன்றை தெரிந்து கொள் ...! சுயவிமர்சனம் என்பதை......... ஆராய்ந்து கொள் ..! & கவிப்புயல் இனியவன் 

உன்னில் இருந்த கோபம் ...

நீ பேசமாட்டேன் ..... என்று சொன்னபோதே ... உன்னில் இருந்த கோபம் ... தணிந்தது  -வலிகள் .... பிறந்தது காதலுக்கு .... அது தானே பரிசு .......!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் .... பிடிக்காமல் போன காரணம் சொல் மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன் & உன் எண்ணம் இருக்கும் வரை ..... இம் மண்ணில் உயிர் வாழ்வேன் .... என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ... அது உன்னை மறக்கும் நாள் .....!!! & நான்கு வரி கவிதை கவிப்புயல் இனியவன்

தன்மானமே தமிழ் மானம்

தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத  மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அறிவாளிகள்...........!!! தந்தையின் காலத்தை நோக்கு...... கண்விழித்து படித்து தன்னையும்..... தன் தங்கைகளையும் வாழவைத்து...... வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய....... உழைக்கும் உழைப்பாளி..................!!! மகனே நீ என்ன செய்கிறாய்.......? பூட்டனின் நன்மதிப்பை....... பாட்டனின் சொத்தை........ தந்தையின் தியாகத்தை...... தாயின் ஏக்கத்தை....

சோகம் மட்டுமே .....

காதலில் ..... தோல்வி கண்ட ஒவ்வொரு இதயமும் ..... சுடுகாட்டின் சாம்பலாக .... இருக்கும் ....!!! சோகம் மட்டுமே ..... சொத்துக்களாக இருக்கும் .... இறந்தவர்கள் ..... திரும்பி வருவதில்லை...... இறந்த காதலும் திரும்ப ...... வருவதில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நினைவுகளும் தொடர்கின்றன ...........!!!

நீ எப்போதும் ............. பத்திரமாக என்னோடு ........... இருக்கத்தான் .. ............ இறைவன் இதயத்தை ............. உள்ளே படைத்திருக்கிறான்........... அதனால்தான் இதயம் .... நிற்கும் வரை .... உன் நினைவுகளும் ....... தொடர்கின்றன ...........!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

துன்பநினைவுகளும் .....

நீ கிடைக்க .... மாட்டாய்நன்றாகத்தெரியும் .... என்றாலும் ......... உன் துன்பநினைவுகளும் ..... எனக்கு சுகம்தான் ..... எப்போதும் உன்னை .... நினைத்துக்கொண்டே.... இருப்பதற்கு..............!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நண்பனே விழித்தெழு ...!

படம்
  நண்பனே விழித்தெழு ...!  by கவிப்புயல் இனியவன் on Fri Apr 12, 2013 8:18 pm நண்பனே விழித்தெழு ...!  நண்பனே விழித்தெழு ... இதற்கு மேலும் பதுங்க்காதே ... போராட்டத்தை -நீ சந்தித்தால் தான் உன் வெற்றி உறுதி... போர்வைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தால் போடா நீயொரு மனிதனா என்று உலகம் உன்னை உதறித்தள்ளும் .... சிந்திக்காமல் சிதறிக்கொண்டு உன் திறமையை சிதறடிக்கிறாய் நண்பா .. அழுகிறது உன் திறமையை பார்த்து திறனற்றுப்போன உன் திறமைகள்.... நீ அதைக்கண்டு கொள்ளவில்லை . உன்னிடம்இருக்கும் திறமையை அறிந்தவன்-நான் உயிர் நண்பன் சொல்லுகிறேன் வாழ்க்கையை எதிர்த்து போராடு வாழும் வரை தலைநிமிர்ந்து வாழ்ந்திடு ....!

உன்னை அப்படி அழைப்பது

மனிதா ..? நீ ஒரு வீடு கட்டுவதற்காக ...... எங்களின்பல நூறு ....... இருப்பிடங்களை அழிக்கிறாய் நாங்கள் .... பறந்த்திடுவோம் என்ற .... நம்பிக்கைதான்... சண்டையிடுவதற்கு ..... சக்தியில்லாதவர்கள் .....!!! இனத்தை ..... அழிப்பவனை இனவாதி என்றால் ...... நீ பிற இனத்தையல்லவா ... அழிக்கிறாய் ... உன்னை அப்படி அழைப்பது .. தெரியவில்லை ...? & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்

இயற்கை வள கவிதை

மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன் 

ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ...

உனக்கு ...... நல்ல வாழ்க்கை கிடைக்கும் என நீ  கருதினால் .... உன் நிழலைக்கூட நான் நினைக்க மாட்டேன் ..... ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ... நீ திரும்பி ...... வரவேண்டிய நிலைவந்தால் .... * * * * * * * * * * கவலைப்படாமல் வந்துவிடு ....! உன் உடலையோ உறவையோ நான் விரும்பவில்லை .. நான் வாழ்ந்த காதல் ... வாழ்க்கை எனக்கு தேவை ..! & கவிப்புயல் இனியவன் 

குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

மறப்பதற்காக ..... முயற்சிக்கிறேன் .... நீயோ கவிதையாக வந்து விடுகிறாய் ....!!! மதுவை அருந்தி ..... மறக்க நினைக்கிறேன்... நீயோ போதையாக ...... வந்து விடுகிறாய் ... விஷத்தை எடுத்து .... குடிக்க முயற்சித்தேன் ... உயிராக வந்து தடுக்கிறாய் ... எனக்கு நானே ..... கல்லறைக்குழி வெட்டினேன் .. குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

திரும்பி பார்க்கிறேன் ..

எமனின் ..... பாசக்கயிற்றில் தப்பினார் ... மார்க்கண்டேயர் ....!!! எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்... தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!! யாரவது ஒருவர் காதலில் விழாதவர் .. யாரும் இருந்தால் தயவுசெய்து .. தொடர்புகொள்ளுங்கள் ... அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...? நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...? திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!! * * * * * இறந்த உடலொன்று ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

கானா கவிதை

சிரித்துக்கொண்டு ...... விளையாடினேன் .. சிறுவயதில் உள்ளே வெளியே ... இப்போ ஏக்கத்தோடு ....... பார்க்கிறேன் ... என் இதயத்துக்குள் .... உள்ளே - வரப்போகிறாயா ...? வெளியே- செல்லப்போகிறாயா ...? & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

இடது இதய அறையில் இருந்த ... காதலியை காணவில்லை ... வலது இதய அறையில் தனியாக இருந்து .. அழுதுகொண்டிருக்கிறேன் ....!!! காதலியை கண்டுபிடித்து தாருங்கள் .. என்று கேட்கமாட்டேன் ... அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ... அவள்வரும் வரை அறை காலியாகவே ... இருக்கும் என்று சொல்லி விடுங்கள் .... தயவு செய்து காலியாகத்தானே ... இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ... வரவேண்டாம் ...! அது அவளின் அறை மட்டுமே ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன் 

என்னை நீ பிரிந்ததால்...

வானத்தில்..... அமாவாசையன்று .. நட்சத்திரங்கள் அகதிகள் வனத்தில் ..... காடுகள் அழிந்தால் மிருகங்கள் அகதிகள் பூக்கள் ...... வாடி விட்டால்... தேனிக்கள் அகதிகள் என் ..... காதல் தேசத்தில்.... என்னை நீ பிரிந்ததால்... நானும் ஓர் அகதி தான்...!!! & கவிப்புயல் இனியவன் 

சமூக சிந்தனை கவிதைகள்

இன்று ...... குடும்பங்களின் நிலைமை.... குடும்பத்துடன் போசுவதே ........ கிடையாது ......!!! இருந்தால் ....... போல் தனியே இருந்து .... சிரிக்கிறார்கள் ... மௌனமாக ஓரக்கண்ணீர் ..... வடிக்கிறார்கள் .........!!! உரத்த குரலில் திடீரென கத்துகிறார்கள் .... உறவினரை கண்டால் .... வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!! இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது .... தொலைக்காட்சி .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

எங்கள் வருங்கால சந்ததி ...!!!

முட்டை .... கூடை சுமப்பவனே ..! கவனம் நீ சுமப்பது .... வெறும் முட்டை அல்ல.... எங்கள் வருங்கால சந்ததி ...!!! & சின்ன கவிதை கவிப்புயல் இனியவன் 

மனைவியின்விருப்பத்தை கண்டறிவோர்

ஒரு கல்லை எடுத்தேன் ..! நண்பன் சொன்னான் .... மரத்துக்குஎறியப்போகிறான் .. என்றான் .....!!! நண்பி  சொன்னால் .... அருகில்குட்டைக்குள் ... எறியப்போகிறான் ......!!! கையில் இருந்த கல் ... கெஞ்சியது என்னை .... ஒருமுறை வானத்தை நோக்கி .... எறிந்து விடு ......... எனக்கும் உயரபோக ..... விருப்பம் இருகிறது ..............!!! நாம் .... பிறர் விருப்பத்தையும் ..... நம் விருப்பத்தையும் ...... நிறைவேற்றுகிறோம் ...... நம்மோடு இருப்பவர்களின் ..... விருப்பத்தை நிறைவேற்ற.... தவறுகிறோம் ...............!!! கணவனின் விருப்தத்தை ..... உறவினர் விருப்பத்தை ..... நிறைவேற்றும் மனைவியின் ..... விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவிஞன் ஆனவன்.....!!!

இவன் .... காதல் தோல்வியால் ... கவிஞனாக வில்லை ... எல்லாவற்றிலும் ... காதல்  கொண்டதால் ... கவிஞன் ஆனவன்.....!!! & கவிப்புயல் இனியவன் இதுதான் உண்மை 

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ கவிப்புயல் இனியவன் 2013 ----------- சாமிக்கு பூ பறித்து .. வைப்பதை பழக்கமாக கொண்டவன் .. சட்டென்று ஒருநாள்-பூவை பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம் மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம் இதுதான் நான் பறித்த கடைசி பூ

அழுவதற்காக பிறந்தவன்

உன் ..... மடியில் உறங்க .... அனுமதி கொடு .... இதயத்தின் சுமையை .... உன்னோடு பகிர்ந்து .... கொள்கிறேன் ...... எனக்காக நீ ..... அழுதுவிடாதே....... அழுவதற்காக...... பிறந்தவன் நானாகவே .... இருந்து விடுகிறேன் .......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் .... புகுந்தபோதும் .... விலகிய போதும் ... மெதுவாக வந்து ....... மெதுவாக விலகிவிட்டாயே .... எந்த வித வலியுமில்லாமல்.... எங்கு கற்றுக்கொண்டாய் ...... இந்த கலையை ..? & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை 

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம் ------- காதலரின் பெயரை சுவரில் மற்றும் கையில் எழுதுபவர்கள் ..! காதல் முட்டாள்கள் ------- காதலருடன் சண்டையிட்டபின் காயங்களை ஏற்படுத்துபவர்கள் தனக்கு தானே கையை வெட்டுதல் .மற்றும் சூடு வைத்தல்..! காதல் கோழைகள் -------- காதலில் தோற்றதும் தற்கொலை செய்பவர்கள் ...! காதல் வெறியன் -------- காதலின் பெயரில் ஏமாற்றி கற்பை சூரையாடுபவன் ...! காதல் கொலைகாரன் -------- காதல் நிறைவேற்றவில்லை என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...! காதல் பயங்கரவாதி --------- காதலியின் முகத்தில் அசிட் வீசுபவனும் கொலைசெய்பவனும்...! & கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! கவிப்புயல் இனியவன் 2013 --------- தனிமை... எல்லோருக்கும் கிடைக்காத தவம்...! அதுவே ஒரு சிலருக்கு வரம்..! கவிதைகளின் .... கதைகளின் பிறப்பிடம்...! கனவுகளின் உறைவிடம்..! கடந்தகாலத்தை மீள்படிக்க உதவும் நாற்குறிப்பேடு..! என்னை நானே உற்றுப்பார்த்திட வழி செய்யும் கண்ணாடி...! மெளனத்தின் வழி பலநூறு கதை சொல்லும் கருவூலம்..! காதடைக்கும் இரைச்சல்விடுத்து இதம் சேர்க்கும் தியானபீடம்...! இது………. எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள் தனிமை சேர்பவன் மனநிலை....!! தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! & கவிப்புயல் இனியவன்

கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

கடலில் சுதந்திரமாக .. தூண்டிலிலும் வலையிலும் ... சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில் உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள் குமிழியுடன் வரும் கற்றை சுவாசிக்க ஆசை ........!!! கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ சொகுசு சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரமாக திரியும் கடலுக்குள் செல்ல ஆசை.....!!! & முரண் பட்ட ஆசைகள் கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை... அது ஒரு பெரும் வலி...! ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..! தவறுகளின் பிறப்பிடம்...! தண்டனையின் உறைவிடம்..! பிரிவுத்துயர் சொல்லித்தரும் கலாசாலை..! கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..! வெறுமையின் வாசிகசாலை..! பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..! வாய் இருந்தும் நாவறுந்ததாய்.. கேள்செவியிருந்தும் செவிடானதாய்... எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!! உறவுகள் பிரிந்து.... தனிமையின் பிடியில்....... கோரமாய் சிக்கிக்கொண்டவன் ...... மனநிலை…!! தனிமை கொடுமையிலும் கொடுமை ... & கவிப்புயல் இனியவன் சமுதாய கவிதை 

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ ..... பூவின் மென்மையில் .. இருக்கிறேன் ....! நீயோ ...... வண்டின் குணத்தில் ....... இருக்கிறாய் ...! காதல் என்றால் ...... ஒன்று பட்டு வாழவேண்டும் ..! இல்லையேல் ....? நல்ல காதலுக்கு அழகு ...! பிணக்கு இல்லாமல் பிரிவதே ...! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!!

உன்னை காதலிக்கும் ..... பாக்கியத்தை நான் இந்த .... ஜென்மத்தில் பெறவில்லையடா .... எனக்காக அடுத்த ஜென்மம் .... பிறந்துவிடு உன்னை .... காதல் செய்தே ஆகவேண்டும் .....!!! உன் கவிதைக்காக .... எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

இறந்து விடு என்று சொல்...!!

இறந்து விடு என்று சொல்...!! மறுபடியும் பிறந்து வருவேன்.. மறந்து விடு என்று...!!! சொல்லாதே ஒரு நொடி கூட இருந்துவிடமாட்டேன் ...!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

நட்பும் காதலும் கவிதை

இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

அவள் கண்ணீரில் ......!!!

ஆழம் .... அதிகமில்லைதான் .... என்றாலும் .... விழுந்துவிட்டேன் ..... அவள் கன்னக்குழியில் ...!!! தண்ணீர் ..... அதிகம் இல்லைத்தான்.... என்றாலும்... நனைந்துவிட்டேன்...... அவள் கண்ணீரில் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவன் .......!!! ---------------- அது எப்படி நீ மட்டும் .. சாதாரணமாக வந்துபோகிறாய் ....? நானோ உன்னை கண்டவுடன் ... காற்றில் பறக்கிறேன் ... கனவில் மிதக்கிறேன் ... தனியே இருந்து சிரிக்கிறேன் ... இனியவளே .......!!! ----------------- போடா அம்மு ....... நீ வேதனை மட்டும் ...... படுகிறாய் ...நானோ .. உன்னை கண்டவுடனேயே செத்து செத்து பிழைப்பதை யாரறிவார் ...? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

வருத்தினாலேவெற்றி...!

 வருத்தினாலேவெற்றி...! ---------------- மாணவன் தன்னை வருத்தினாலே சிறந்த பெறுபேறு விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே- வெற்றிக்கிண்ணம் முயற்சியாளன் தன்னை வருத்தினாலே- கோடீஸ்வரன் இறைவனை காண வேண்டுமாயின் ஞானி தன்னை வருத்த வேண்டும் உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

ஏன் ஒப்படைக்கவில்லை ....?

உன்னை உன்னிடத்தில் ... ஒப்படைத்து விட்டாய் ..... என்னை என்னிடத்தில் ..... ஏன் ஒப்படைக்கவில்லை ....? உன்னை உன்னிடத்தில் .... ஒப்படைக்க வந்த துணிவு .. என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்க வரவில்லை ..? உன்னை என்னிடத்திலும் .... என்னை உன்னிடத்திலும் .... ஒப்படைத்தமைக்கு ........ காதல் என்றே அர்த்தம் ....! என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்காமல் ... உன்னை உன்னிடத்தில் ஒப்படைத்ததை எப்படி ..? சொல்லுவது ...? நிச்சயமாக இது பிரிவு இல்லை..! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

புன்னகைத்துக்கொண்டு

நீ கை அசைத்து .... தூர செல்ல செல்ல.... என் தூரப்பார்வை ....... குறைந்து வருகிறது ....! நீ ............... புன்னகைத்துக்கொண்டு .................. அருகில் வர வர ............... கிட்டியபார்வை குறைந்து வருகிறது ....! நீ ஒரு நாள் ............... வராத போது ................ என் கண்ணுக்கு ............ அமாவாசைதான் ...! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 

பொருளாதார கவிதை

உண்டி சுருங்குதல் ... பெண்டிற்கழகு - என்றார் என் மூதாதைப்பாட்டி ...!!! உண்டி சுருங்குதல் .. உலகுக்கே அழகு ... என்கிறேன் நான் ...... உணவுப்பொருளின் ...... விலையேற்றத்துக்கு ... உண்டி சுருக்காமையே உற்பத்தி குறைவல்ல ...!!! & பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன் 

கையில் கிடைத்தால் ....

தேடிக்கொண்டு இருக்கிறேன் .. என் இதயத்தை திருடியவளை ... கையில் கிடைத்தால்  .... கலியாணம் தான் ...! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

யாருக்கு தெரியும்....?

நான் ..... இதயத்தோடு இருப்பதாக... எல்லோருக்கும் .... நினைக்கிறார்கள்.....!!! ஆனால்.... என் இதயம் உன்னிடம் ... இருப்பது..... யாருக்கு தெரியும்....? & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவி நாட்டியரசர் , கவிப்புயல்

நானும் அழகாய் இருக்கிறேன் என்னை சுற்றியும் அழகான பெண்கள் கண் மூடி இருக்கிறேன் & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன் @@@ நடிகைக்கு கவர்ச்சி துளி நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி வியர்வை & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

சடப்பொருளும் என் வீட்டில் கவிதை எழுதுகிறது பேனா & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன் @@@ ஒரு மரத்தை கூட காணவில்லை வறண்ட ஊரின் பெயர் பூந்தோட்டம் & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன்

உன்னை விட்டு பிரிவேன்....?

ஏன் ஏங்குகிறாய் ..... உன் அருகில் தானே .... எப்போதும் இருக்கிறேன் .... திரும்பிப்பார்  இருக்கிறேன் .... முன்னே பார் இருக்கிறேன் .... அருகில் பார் இருக்கிறேன் ..... தொலைவில் பார் இருக்கிறேன் .... நீ பார்க்கும் இடமெல்லாம் .... நான் இருக்கிறேன் ..... நீ என்னில் பாதியான சக்தி ... சிவன் நான் எப்படி .... உன்னை விட்டு பிரிவேன்....? & தேனிலும் இனியது காதல் +++++++++++++++++++++++++++ கவி நாட்டியரசர் , கவிப்புயல் ++++++++உங்கள்++++++++++++ ^^^^^^கே இனியவன்^^^^^^^^^

உயிரேகாலை வணக்கம்

நீ ... என் இதயம் ... உன்னை விட்டு ... எப்படி பிரிவேன் இறப்புக்கு முன் ....? காலை வணக்கம் ... என் உயிரே ..... சூரியன் போல் .... பிரகாசமாய் இரு .... உன்னில் ஒளி .... பெரும் சந்திரன் நான் .....!!! & ........காலை வணக்கம்......... கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள்

ஈரமான நாக்கில்  எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு  பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  கவிப்புயல் இனியவன்  1023

வலியும் சுகம்தான்.......!!!

எரிவேன் ... தெரிந்துகொண்டு... விட்டில் பூச்சி ...... விளக்கில் விழுந்து ... எரிகிறது ...... எரிவதில்....... அது சுகம் காணுகிறது.........!!! நானும் உன்னில் ..... வலியை எதிர்பார்த்தே ... காதலித்தேன்.... உன்னால் வரும் ..... வலியும் சுகம்தான்.......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

என் கையில் கிடைக்காத நிலவு நீ....! ஆனாலும் தினம் சலிக்காமல் உனை இரசிக்கும் ரசிகன் நான்....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ என் கவிதைகளை, ஏனடி சேமிக்கிறாய்...? நீ தான் கவிதைகளின், சொந்தகாரனையே திருடி விட்டாயே. & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ எழுத எதுவுமே .... தோன்றவில்லையென்றால்.... உடனே கண்களைமூடி....... உன்னை நினைத்துவிடுகிறேன்....! ஏனென்றால்... நான் எழுதிக்கொண்டிருப்பதே உனக்காகத்தானே....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

நீ புனிதமானவள் ........!!!

என் தப்பு தான் -என் கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

நீ மின்னலுக்கு பிறந்தவள்

காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1054 கவிப்புயல் இனியவன்

எங்கே நிம்மதி ....?

காதலுக்கு முன் ..... நிம்மதி ..... காதலுக்கு பின் .... எங்கே நிம்மதி ....? இன்று  உன் காதல் முடிவு .... பூவா தலையா ....? பதட்டம் ............!!! என் கவிதையில் .... நீ பயன் பெறவில்லை ..... காதலர்கள் ..... பயன் படுகிறார்கள் .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1053 கவிப்புயல் இனியவன்

நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!

சொற்களால் .... கவிமாலை தொகுக்கிறேன் ..... நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!! உன் புன்னகை அவ்வளவு .... கொடுமையா ......? இதயத்தில் ஒளியே .... இல்லாமல் போகிட்டுதே ....!!! நீ என்னை நோக்கி வருகிறாய் ..... என் இதய கதவு தானாக முடுக்கிறது .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1052 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு..... கிழிந்த குடைக்கும்.... மதிப்பிருக்கும்........!!! சேர்ந்த செல்வம் .... கரைகிறது ...... தண்ணீரை ..... வீணாக்கியதால்.......!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

கவிப்புயலின் சமுதாய கஸல்

ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு  செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12 

சோகங்களை மறைக்கலாம்....

என்னுயிரே  உனக்கேன் இவ்வளவு சோகம் ...? நான் இருக்கையில் உனக்கேன் .... சோக கவிதை என்று ..... எப்போதாவது கேட்டிருக்கிறாயா....? என் உள்ளத்தில் ..... காதல் சோலைகளைவிட ... சோகங்களே அதிகம் ... சோகங்களை மறைக்கலாம்....  மறக்கமுடியாது ...!!! சோகங்களை......  மறைக்கத்தான் சோகக்கவிதைகள்... எழுதுகிறேன் கண்ணே..... சோலையில் நின்றவனைவிட .. சோகத்தில் நின்றவன் தான் .. சாதித்துள்ளான் ....!!! நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!

கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் .... புரிகிறது -நீ என் இதயத்தை .... கண்ணாடியாய் ..... பார்த்திருக்கிறாய் ......!!! அதுதான் அப்பப்போ .... வந்து உன்னை அழகுபடுத்த ..... என்னை பயன்படுத்தி ..... இருக்கிறாய் .........!!! நான் என்னுள் நீ காதல் செய்கிறாய் ..... என்று கற்பனையில் ..... வாழ்ந்துவிட்டேன் ......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இதயத்தையே நனைக்கிறது ..!!!

உன் தொலைபேசி ... அழைப்பு என்னை ..... சந்தேகிக்கவைக்கிறது ....??? என்னை ..... மறந்து விடு என்று .. சொல்லியபின்  மௌனமானாய் ... அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!! உலகில் எந்த காதலர்கள் .. அழாமல் காதலை மறுத்தார்கள் ...??? உன் தொலைபேசியில் .... இருந்து வரும் கண்ணீர் ... இதயத்தையே நனைக்கிறது ..!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவி