இடுகைகள்

மார்ச் 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிறப்பும் இறப்பும் சமன்

பிறப்பும் இறப்பும் சமன் --- இறந்த பிணத்தை ..... இறக்கப்போகும் பிணங்கள் .... ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!! இறந்த பிணம் ...!!! கோபத்தில் பேசத்தொடங்கியது ...... இறக்கபோகிறவர்களே.... வாருங்கள் இறக்கபோவதற்காக....? பிறப்பு இனிமையானது .... இறப்பு கொடுமையானது .... என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் .... பிறப்பு இயற்கை தந்த பரிசு .... இறப்பு இயற்கை தந்த கொடை..... புரிந்து கொண்டவனே ஞானி ....!!! எல்லா உயிரும் ஒருநொடி .... தொடக்கம் எல்லா உயிரின் .... அடக்கமும் ஒரு நொடி தான் ..... அந்த ஒருநிமிடத்தில் தான் .... உலகமே இயங்குகிறது ......!!! ^^^ ஒரு நிமிட உலகம்  ...............வாழ்வியல் கவிதை  ** பிறப்பும் இறப்பும் சமன் ** + கவிப்புயல் இனியவன்

சிந்திக்க ஹைக்கூக்கள்

மூக்கை பொத்துகிறான் மனம் முழுக்க குப்பையுடன் சாக்கடை சிரிக்கிறது ^ ஆன்மீக ஹைக்கூ கவிதை @@@ நச்சுகளை உள் வாங்கி அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம் பசுமை மரங்கள் ^ இயற்கை ஹைக்கூ கவிதை @@@ ஆசீர் வாதம் பெற்றவள் ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள் விதவை பெண் ^ சமூக ஹைக்கூ கவிதை @@@ வானத்து நீரை வடிகட்டி உள்ளே எடுக்கிறது ஓட்டை குடிசை ^ வறுமை ஹைக்கூ கவிதை @@@ சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது ஊழியச்சுரண்டல் ^ பொருளாதார ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்