இடுகைகள்

ஜூலை 6, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் முன்னாள் காதலி ......!!!

அவளுடன் பேசத்துடிக்கிறேன் .... உதடுகள் மறுக்கின்றன .....!!! அவளை .... பார்க்க துடிக்கிறேன் .... கண்கள் மறுக்கின்றன .....!!! அவள் ... நினைவுகள் மட்டும் ... இதயம் சுமக்கிறது .... அவள் என் முன்னாள் ... காதலி ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முடிந்தால் எடுத்துவிடு....!!!

கனவில் வந்து ... கலைந்து விட்டாள்.... நினைவை தந்து .... நீங்கிவிட்டாள்.... உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... வருந்த மாடடேன் .... உயிராக இருக்கிறேன் .... முடிந்தால் எடுத்துவிடு....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்படி மறக்கப்போகிறாய் ....?

முயற்சிக்கிறேன் .... உன்னை கண்டவுடன் .... ஒரு பொய் சிரிப்பு சிரிக்க .... உதட்டுக்கு முன்னரே .... முந்தி கொண்டு .. கண்ணீர் விட்டுவிடுகிறது ..... கண்கள் .......!!! உன்னை நினைக்க  ..... கவலையாக இருக்கிறது...... என் நினைவுகளை எப்படி .... மறக்கப்போகிறாய் ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என்னிடம் சொல்கிறாயே .....!!!

நேரம் இருக்கின்ற போது .... என்னுடன் பேசுகிறேன் ... என்கிறாய் ...... நேரம் காலம் எல்லாம் .... உன்னையே நினைக்கும் .... என்னிடம் சொல்கிறாயே .....!!! ஒரு முறை என்னைப்போல் ..... துடித்துப்பார்  -காதலின் துடிப்பும் வலியும் அப்போது .... உனக்கு புரியும் ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மாலை கோர்க்க முடியவில்லை ..!!!

கைக்கு எட்டியது .... வாய்க்கு எட்டவில்லை ... என்பதுபோல் தான் .... என் காதலும் ..... திருமண அழைப்பில் ....!!! கை கோர்க்க முடிந்த .... எனக்கு உன்னோடு ... மாலை கோர்க்க .... முடியவில்லை .............!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை  கவிப்புயல் இனியவன்