இடுகைகள்

செப்டம்பர் 22, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாம் கனவாய் போய்விட்டதே .....!!!

உன்னை ... காதல் செய்தபோது ...... மரணம் தாண்டி வாழ்வேன்.... இனி நான் இறந்தாலும் உயிர்ப்பேன் .......... என்றெல்லாம் நினைத்தேன் .... எல்லாம் கனவாய் ... போய்விட்டதே .....!!! + கல்லறை இதயத்தின் கதறல்  கே இனியவன்

கவிதையாக்கினேன் ....!!!

நீ  பேசிய வார்த்தைகளை  கவிதையாக்கினேன் ....!!! நீ  இப்போ பேசாமல் இருக்கும் .... வார்த்தைகள் கல்லறை .... வாசகங்களாய் மாறி வருகிறது ....!!! + கல்லறை இதயத்தின் கதறல்  கே இனியவன்

கல்லறை இதயத்தின் கதறல்

நீ  அங்கே கைவிரலுக்கு .... மோதிரம் மாற்றுகிறாய் .... என்று நினைக்கிறேன் .... இங்கே ..... நீ தந்த கைவிரல் மோதிரம் .... என் கையில் கதறி அழுகிறது ....!!! + கல்லறை இதயத்தின் கதறல்  கே இனியவன்

உன்னைவிட்டால் யார் ...?

நான் பழகுவதற்கு எத்தனையோ மனங்கள் .... இருக்கலாம் - ஆனால்  நான் மனம் விட்டு பேச ..... உன்னைவிட்டால் யார் ...? காதல் கண்ணில் தோன்றி .... கண்ணில் மறைபவர்களுக்கு .... காண்பதெல்லாம் காதல் ..... என் இதயத்தில் தோன்றி .... என் இதயம் வரை இருக்கும் .... பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...? + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

முயற்சிசெய் - பயிற்சிசெய்

மாணவர்களே ..... தினமும் படிக்கவேண்டும் .... கடும் பயிற்சி எடுக்க வேண்டும் .... வீணாகும் நிமிடங்களை நினைத்து .... கண்ணீர் விடவேண்டும் ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... சிறந்த பெறுபேறு நிச்சயம் .... உன் கையில் தவழும் .....!!! விளையாட்டு வீரனே...... தினமும் பயிற்சி செய்துகொள் .... முயற்சிக்கு மேலாக பயிற்சி ..... பயிற்சிக்கு மேலாக முயற்சி ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... உலக வெற்றிக்கிண்ணம் ..... உன் கையில் தவழும் .....!!! முயற்சியாளனே ...... தினமும் ஆபத்தை எதிர்கொள் ..... முட்டு மோது போராடு ...... புதியனபற்றி சிந்தனை செய் ..... வருத்து வருத்து உன்னை வருத்து .... சிறந்த முதலீட்டுக்கு சிறந்த இலாபம்  உன் கையில் தவழும் .....!!! + கே இனியவன்  முயற்சிசெய் - பயிற்சிசெய்  முயற்சி கவிதைகள்

கல்லறைவரை சுமப்பேன்

கண்களால் கதைபேசி.....  என்னை காணமல் ஆக்கியவளே ..... கடைசிவரை உன் நினைவையும் .... காதலையும்கர்ப்பணி தாய் போல் கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!! இதயத்தில் பெரு காயத்தை ..... வார்த்தையால் தந்தவளே ..... கடைசிவரை உன் வார்த்தையை .... கல்லறைவரை சுமப்பேன் ..... கல்லறை தத்துவங்களாய் ....!!! + கே இனியவன்  காதல் கவிதையும் தத்துவமும் 02

காதல் கவிதையும் தத்துவமும்

காதலிக்கும் போது.... கிறுக்கிய வரிகளை ..... காதல் கவிதை என்றாள் .... அற்புதம் அற்புதம் .... இன்னும் எழுதுங்கள் ... என்றாள்........!!! காதலில் தோற்றபின் .... கிறுக்கிய வரிகளை .... காதல் தத்துவம் என்றாள் .... போதும் போதும் .... இனிமேல் எழுத வேண்டாம் ... என்கிறாள் ....!!! + கே இனியவன்  காதல் கவிதையும் தத்துவமும் 01

தூக்கி எறிந்த -என் இதயம்

நீ  தூக்கி எறிந்த -என் இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது .... சிதறு தேங்காய் போல் .... சிதறிக்கிடந்தாலும் ..... இன்னும் இறக்காமல் ..... துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!! நீ தூக்கி எறிந்த .... உன் நினைவுகளும்.... என் நினைவுகளோடு....  சேர்ந்து அழுதுகொண்டே .... இருக்கிறதடி ......!!! என்  நரம்புகள் துடி துடித்து  சாகுதடி ....! என் நரம்புகளில்.... நகர் வலம் வரும்..... உன் நினவகளுடன் .... கலந்த என் நினைவுகளும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

வலிகளை எரித்தவள் - நீ

வாழ்வில் நான் மனமுடைந்த பொழுதுகளில் என்னை அணைத்து என் வலிகளை எரித்தவள் - நீ நான் தடுமாறிய தருணங்களில் என் தலையைத்தடவி தன்னம்பிக்கை தந்தவள் - நீ உனக்கெனக்கொடுக்க உண்மைக்காதலும் என் உயிரும் மட்டுமே உள்ளது என்னிடம் .....! நீ எதுவும் தர முடிந்தால் .... உள்ளத்தால் உண்மையான ... காதலை தந்துவிடு ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

மரணம் -கவிதை

இன்பமாக வாழ்ந்து ..... இல்லற வாழ்க்கையை ..... இறுதிவரை வாழ்ந்தவனுக்கு ..... இறைவன் கொடுக்கும் .... இன்ப அன்பளிப்பே .... மரணம் .....!!! நோயினால் அவத்திப்பட்டு..... எப்போது தனக்கு மரணம் .... காத்திருக்கும் நோயாளிக்கு ..... இறைவன் கொடுக்கும் ..... அளப்பரிய வெகுமதி .... மரணம் .......!!! தெரியாமல் மனிதனாய் .... பூவுலகில் பிறந்தவனின் .... முட்டாள் தனமான செயல் .... தற்கொலை மரணம் .....! இறைவன் தந்த உடலையும் .... உயிரையும் -அனுமதியின்றி .... பறிக்கும் செயலே தற்கொலை....  மரணம் ...!!! மரணத்தை விரும்புபவன் .... மரணத்தோடு வாழ்பவன் ..... மரணம் இயற்கையின்கொடை..... மரணத்தை உணர்ந்து வாழ்பவன் .... மரணத்தை தவமாய் கருதுபவன் .... பிரபஞ்சத்தில் ஞானி .....!!!