இடுகைகள்

டிசம்பர் 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

ஒப்பாரி வீட்டிலும் அழகு  ஒன்றுகூடலிலும் அழகு  -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து  இன்பத்தை இழக்கிறான்  -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம்  நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்  -----பருவ மழை ------

இரு வரிக்கவிதை

உனக்காக இருக்கவா ....? உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!! @@ காதல் இருவழியில் இன்பத்தை தந்து .... ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!! @@ காதலில் நினைவுகள் முற்கள் .... கனவுகள் மலர்கள் ....!!! @@ இரு வலியை சுமக்கும் இதயத்தில் .... ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...? @@ உன்னை இழந்த பின்னரே புரிந்தது .... இழப்பின் வழியும் வலியும்....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

பேசாமல் இருந்தால்

ஒருநாள் .... பேசாமல் இருந்தால் கூட .... பைத்தியம் பிடித்துவிடும்.... தயவு செய்து பேசிவிடு ..... என்று கெஞ்சினால் அன்று ....!!! + இன்று .... எப்போதும் பேசிக்கொண்டு ... இருக்காதே பைத்தியம்போல் ... என்கிறாள் - என்னை பைத்தியமாக்கியவள் .....!!!  @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல்  எதிர் பார்ப்புகள் இல்லாதது  இருந்தாலும்உன்னிடம் .... நான் எதிர்பார்த்ததை .... காட்டிலும் அதிகமாக ... இருக்கிறது ..? காதல் ......!!! + எதிர்பார்ப்புக்கள் .... அதிகமானதால் .... தொலைந்து போனது ... என் காதல் ..... எதிர்பார்ப்பு அதிகமானால் ... எதிர்விளைவானது ...!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு